Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 19 நவம்பர், 2020

கர்ஜித்த சிங்கம்... எண்ணத்தை மாற்றிக் கொண்ட கழுதைப்புலி... குட்டிக்கதை - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!

--------------------------------------------------------

இது சிரிப்பதற்கான நேரம்...!!

---------------------------------------------------------

காதலன் : நீ முறுக்கு சாப்பிடும் அழகைப் பார்த்து எனக்கு ஒரு கவிதை சொல்ல தோணுது.

காதலி : ம்ம்.. சொல்லுங்க உங்க வாயால என்னைப் புகழ்ந்து சொல்லும் கவிதையை கேட்க ஆசையாய் இருக்கு.

காதலன் : ஒரு கிறுக்கு முறுக்கு சாப்பிடுகிறதே! அடடே... ஆச்சரியக் குறி!!!

காதலி : 😠😠

---------------------------------------------------------

கோபு : வெயில்ல வந்தா உருகுற மனுஷர் யாரு?

பாபு : தெரியாதே!

கோபு : பெருமாள் கோவில் பட்டர்.

பாபு : 😛😛

---------------------------------------------------------

குட்டிக் கதை...!!

---------------------------------------------------------

 

காட்டில் ஒரு சிங்கமும், கழுதைப்புலியும் பசுவைப் பிடித்து வைத்திருந்தன. ஒரு நாள் சிங்கம் பசுவைக் கொன்றது. கழுதைப்புலி தன் குட்டியை சிங்கத்திடம் அனுப்பி தன் பங்கை வாங்கிவரச் சொன்னது. கழுதைப்புலியின் பங்காக பசுவின் குடலை மட்டும் கொடுத்து அனுப்பியது சிங்கம்.

 

கழுதைப்புலியோ, 'நீ ஏன் குடலைக் கொண்டு வந்தாய்? பாதி பங்கு நமக்குத்தான் உரியது?" என்று கேட்டது.

 

அதற்கு குட்டி கழுதைப்புலி 'நான் சின்னப்பையன். பெரியவர்கள் கொடுப்பதைத்தான் கொண்டு வர முடியும். நான் எப்படி சிங்கத்தோடு விவாதிக்க முடியும்?" என்றது.

 

அதைக்கேட்டு கோபமான கழுதைப்புலி அந்தக் குடலோடு சிங்கத்தைப் பார்க்கப் போனது. சிங்கம் உணவை உண்டு குகைக்குள் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தது. கழுதைப்புலி வந்ததைக் கண்டு சிங்கம் கண்களை அச்சமூட்டும் வகையில் வைத்திருந்தது. 'ஏன் இங்கே வந்தாய்?" என கர்ஜித்தபடி சிங்கம் கேட்டது.

 

பசுவில் பாதியை கேட்க வந்த கழுதைப்புலி தற்போது தன் எண்ணத்தை மாற்றிக்கொண்டு 'சிங்க ராஜாவே! நீங்கள் குடல் அனுப்பியதற்கு மிக்க நன்றி, ஆனால் அதனை உங்களிடமே சேர்க்க முடிவு செய்து விட்டோம்" என்றது.

 

குடலை சிங்கத்திடம் கொடுத்து விட்டு திரும்பிய கழுதைப்புலியிடம் 'பசுவில் பாதி கேட்க போன நீங்கள் குடலையும் கொடுத்து விட்டு வருகிறீர்களே?" என்று குட்டி கேட்டது. 

 

'மகனே! சிங்கம் மிகக் கொடூரமாக இருந்தது. அதைக்கண்டு நடுங்கி விட்டேன். எனவே எனது பங்கையும் கொடுத்துவிட்டு வந்தேன். எல்லாம் நன்மைக்காக" என்றது தாய் கழுதைப்புலி.

 

நம்மை விட வலிமையானவர்களைக் கோபப்படுத்துவதை விட, அவர்களை சாந்தப்படுத்துவதே பாதுகாப்பானது.

 குறிப்பு: படங்கள் அனைத்தும்  மாதிரிக்காக / உதாரணத்திற்காக கூகிளில் இருந்து எடுத்து வழங்கப்படுபவையே 
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக