இறைவர்
திருப்பெயர் : பஞ்சவர்ணேஸ்வரர், தான்தோன்றீஸ்வரர்
இறைவியார் திருப்பெயர் : காந்திமதி அம்மை, குங்குமவல்லி
தல மரம் : வில்வ மரம்
தீர்த்தம் : சப்தசாகர தீர்த்தம், சிவ தீர்த்தம், நாக தீர்த்தம்
வழிபட்டோர் : உதங்க முனிவர்
தேவாரப் பாடல்கள் : சம்பந்தர் - சாந்தம்வெண்ணீ றெனப்பூசி வெள்ளஞ்சடை வைத்தவர்...
தல வரலாறு:
உறையூர் பஞ்சவர்ணேசுவரர் கோயில் என்பது திருச்சிராப்பள்ளி நகரின் உறையூர்
பகுதியில் அமைந்துள்ள சிவாலயமாகும். இச்சிவாலயம் சம்பந்தரால் தேவாரம் பாடல் பெற்ற
காவிரி தென்கரைத் தலங்களில் ஐந்தாவது தலமாகும். இச்சிவாலய மூலவர் பஞ்சவர்ணேசுவரர்
என்றும், அம்பாள் காந்தியம்மை என்றும் அழைக்கப்படுகிறார். உதங்க முனிவருக்கு
இறைவன் ஐந்து காலங்கள் ஐந்து வண்ணங்களாக காட்சியளித்த தலமாகும். உதங்க முனிவர்
தன்னுடைய மனைவியுடன் கங்கையில் நீராடிய போது, அவர் மனைவி முதலையால் இழுத்துச்
செல்லப்பட்டார். உதங்க முனிவர் வேதம், ஆகமம், புராணங்களில் வல்லவராக இருந்தமையால்,
அவருக்கு மனைவியின் இறப்பு பற்றி தெரிந்தது. ஞானியாக இருந்தாலும் மனைவி
இழந்தமையால் பித்துபிடித்தவரானார். பல இடங்களில் சுற்றித் திரிந்து பின்பு உறையூர்
சிவலாயத்திற்கு வந்தார். இங்கு இறைவன் காலை வழிபாட்டில் ரத்தினலிங்கமாகவும்,
உச்சிகால வழிபாட்டில் ஸ்படிக லிங்கமாகவும், மாலை வழிபாட்டில் பொன் லிங்கமாகவும்,
முதல் ஜாம வைர லிங்கமாகவும் மற்றும் அர்த்த ஜாம வழிபாட்டில் சித்திர லிங்கமாகவும்
காட்சியளித்தார். இதனால் இத்தல மூலவருக்கு பஞ்சவர்ணேசுவரர் என்ற பெயர் ஏற்பட்டது.
பழந்தமிழ் நாட்டை ஆண்ட முவேந்தர்கலான சேர ,சோழ ,பாண்டிய மன்னர்களில் முற்கால
சோழர்களின் தலைநகராக விளங்கியது திருச்சி உறையூர் .உறையூறை ஆண்ட சோழ அரசன் ஒருவன் யானை மேல்
அமர்ந்து நகர்வலம் வந்தபோது அந்த யானைக்கு திடீர் என்று மதம் பிடித்தது .பாகனும்
செய்வதறியது திகைத்தனர் .அப்போது கோழி ஒன்று ஆவேசத்தோடு குரல் எழுப்பிக்கொண்டு
பட்டத்து யானையின் தலையின் மேல் நின்று தன் அலகினால் குத்தியது .உடனே , யானை தன் மதம் அடங்கி
பழைய நிலையை அடைந்தது .யானையை அடக்கிய கோழியானது தனது காலால் ஒரு இடத்தில அகழ்ந்து
பார்த்தது .அப்போது அந்த இடத்தில் ஒரு சிவ லிங்கம் கிடைத்தது .அதை ஆலயம் எடுத்து
வழிபாடு செய்தான் சோழமன்னன்
.இதுவே உறையூர் பஞ்சவர்னேஷ்வர் திருக்கோவில்.மூக்கிச்சுரம் என்பது கோவில் பெயர்.
மற்றுமொரு தல வரலாறும் இத்தலத்திற்கு
உண்டு....
உறையூரைத் தலைநகராகக் கொண்டு அரசாண்டு வந்த சோழ மன்னனின் மனைவி காந்திமதி ஒரு
சிறந்த சிவபக்தை. தினந்தோறும் திருச்சிராப்பள்ளி மலைக்குச் சென்று தாயுமானவரை
வழிபட்டு வந்தாள். அவள் பிள்ளைப்பேறு அடைந்த போதும் தவறாமல் வழிபாடு செய்து
வந்தாள். ஒருநாள் உறையூரில் இருந்து சிராப்பள்ளி சென்று கொண்டிருந்தபோது வெய்யில்
கொடுமை தாளாமல் வழியில் மயங்கி விழுந்தாள். தனது இறை வழிபாடு தடைபட்டு விட்டதே
என்று மிகவும் மனம் வருந்தினாள். காந்திமதியின் மனவருத்தத்தைப் போக்க விரும்பிய
இறைவன் அந்த இடத்திலேயே காந்திமதிக்குக் காட்சி தந்தார். இறைவன் சுயம்புவாகத்
தோன்றியதால் தான்தோன்றீஸ்வரர் என்ற பெயர் பெற்றார்.
சிறப்புக்கள் :
படைப்புக் கடவுளான பிரம்மாவுக்கு ஐந்து நிறங்களை வெளிப்படுத்தியதாலும், உதங்க
முனிவருக்கு ஐந்து வழிபாட்டு காலங்களிலும் முறையே இரத்தினம், படிகம், பொன், வைரம்,
சித்திரம் என்ற ஐந்து வேறு வேறு வண்ண வடிவம் காட்டினான். இறைவன் என்ற வரலாற்றின்
அடிபடையலும் இங்குள்ள இறைவன் பஞ்சவர்னேஷ்வர் என்றும் தமிழில் ஐவண்ண பெருமான்,
ஐந்நிற பெருமான், ஐநிற நாயனார் என்றும் பெயர் வழங்க பெற்றதாக இக்கோவில் தல புராணம்
கூறுகிறது.
பஞ்சபூத தலங்களாகிய சிதம்பரம், திருவானைக்காவல், திருவண்ணாமலை, காஞ்சீபுரம்,
காளஹஸ்தி ஆகிய தலங்களில் காட்சியளித்து அருள் புரியும் சிவபெருமான் ஐந்து
பூதங்களையும் ஒன்றாக்கி உறையும் தலமே திருமூக்கீச்சரம் என்ற உறையூர் திருத்தலம்.
எனவே பஞ்சபூத தலங்களை தரிசிக்கும் புண்ணியம் இத்தல இறைவனை வழிபட்டாலே கிடைக்கும்.
மேலும் படைத்தலின் தெய்வமாகிய பிரம்மாவே இத்தலத்தில் இறைவனை வழிபட்டுள்ளதால்
எவ்வகை தொழிலிலும் வெற்றியடைய இத்தல மூலவராகிய பஞ்சவர்ணேஸ்வரரை வழிபட்டால் நலம்
பெறலாம். கார்க்கோடகன் ஆகிய பாம்பும் கருடனும் இத்தலத்தில் வழிபட்டுள்ளதால்
எவ்விதத்தில் பெற்றிருக்கும் சாபம், பாவம், தோஷம் ஆகியவற்றிலிருந்து விமோசனம்
கிடைக்கும் தலம் இதுவாகும். மற்றும் காசியப முனிவர், அவன் மனைவி கத்துரு இங்கு
இறைவனை வழிபட்டுள்ளார்.
யானை ஏற முடியாதபடி 70 மாடக்கோவில்களைக் கட்டிய கோச்செங்கட் சோழன், 63
நாயன்மார்களில் ஒருவரான புகழ்ச் சோழன் ஆகியோர் பிறந்த தலம் இதுவே.
போன்:
அமைவிடம் மாநிலம் :
திருச்சி நகரின் ஒரு பகுதி உறையூர். தேவாரம் பாடப் பெற்ற காலத்தில் இதுவே
மூக்கீச்சுரம் எனப்பட்டது. உறையூரில் கடைவீதி தெருவில் இத்தலம் அமைந்திருக்கிறது.
இவ்வாலயம் தினந்தோறும் காலை 6 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு
9 மணி வரையிலும் திறந்திருக்கும்.
பஞ்சபூத தலங்களை தரிசிக்கும் புண்ணியம் இத்தல இறைவனை வழிபட்டாலே கிடைக்கும்.
இறைவன் சுயம்புவாகத் தோன்றியதால் தான்தோன்றீஸ்வரர் என்ற பெயர் பெற்றார்.
கோச்செங்கட் சோழன், 63 நாயன்மார்களில் ஒருவரான புகழ்ச் சோழன் ஆகியோர் பிறந்த தலம் இதுவே.
இத்தலத்தில் வழிபட்டால் எவ்விதத்தில் பெற்றிருக்கும் சாபம், பாவம், தோஷம் ஆகியவற்றிலிருந்து விமோசனம் கிடைக்கும் தலம் இதுவாகும்.
உதங்க முனிவருக்கு ஐந்து வழிபாட்டு காலங்களிலும் முறையே இரத்தினம், படிகம், பொன், வைரம், சித்திரம் என்ற ஐந்து வேறு வேறு வண்ண வடிவம் காட்டிய தலம்.
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்அருள்தரும் ஆலயங்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக