Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 23 நவம்பர், 2020

"அந்த" பட்டனை யார் அழுத்துவார்.? என்ன கட்டாயத்தின்கீழ் அழுத்துவார்.?


உலகம் மிகவும் அமைதியானது; உலக நாடுகள் நட்புக்குரியது; நாடுகளுக்கு இடையே சிறுசிறு போர்கள் சாத்தியமே தவிர மிகவும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் அணு ஆயுத போரெல்லாம் நிகழ வாய்ப்பே இல்லை - என்றெல்லாம் நீங்கள் நினைப்பதில் எந்த தவறும் இல்லை. ஏனெனில் யாருமே இங்கே அணு ஆயுத போரை விரும்பவில்லை தான்.

மறுபக்கம், இன்று வரையிலாக ஒரு அணு ஆயுதப்போர் நிகழ சாத்தியமான பல வாய்ப்புகள் இருக்கிறது, அவைகள் நாம் கற்பனை கூட செய்து பார்க்காத பல 'கிறுக்குத்தனமான, முட்டாள் தனமான' வழிகளில் தான் நிகழப்போகிறது, அதேசமயம் நாம் எதிர்பார்க்கும் குறிப்பிட்ட நாடுகளுக்கு இடையே தான் அந்த யுத்தம் வெடிக்கும் என்பதையெல்லாம் நீங்கள் அறிவீர்களா.?

அமெரிக்கா மற்றும் ரஷ்யா அல்லது சீனா.!

அணு ஆயுதப்போர் ஒன்று ஏற்பட்டால், முதலில் தலை தூக்குவது சூப்பர் பவர் நாடான அமெரிக்காவாகத் தான் இருக்கும். அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகள் ஒருபக்கம் நிற்க, எதிராக ரஷ்யா அல்லது சீனா நிற்கும்.

இந்தியா மற்றும் பாகிஸ்தான்.!

அதற்கு அடுத்தபடியாக சாத்தியமான வருங்கால அணு ஆயுதப்போரில் ஈடுபடும் நாடுகளின் கணிப்பு பட்டியலில் - ஈரான் மற்றும் இஸ்ரேல் இடம்பெறுகிறது. அதனை தொடர்ந்து பல ஆண்டு காலமாக பகை நாடுகளாக திகழும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகியவைகள் அணு ஆயுத மோதலில் ஈடுபடலாம் என்று வல்லுனர்கள் கருதுகிறார்கள்.

அடுத்த நொடி கூட நிகழும் வாய்ப்பு.!

உலக நாடுகளுக்கு இடையேயான ஒரு அணு ஆயுதப்போர் நிகழ 99% சாத்தியமே இல்லை. எனினும் மீதமுள்ள அந்த ஒரு சதவீகிதத்தில் அணு ஆயுதப்போர் என்பது மிகவும் சாத்தியம். அடுத்த நொடி கூட நிகழும் வாய்ப்பு கொண்ட அணு ஆயுதப்போர் என்ற ஒரு பயங்கரமான கனவை யாரெல்லாம் நினைவாக்குவார்கள் என்பதை பார்த்துவிட்டோம். ஆனால் அது எப்படியெல்லாம் நிஜமாகும் என்பதை அறிந்து கொண்டால் சிரிப்பதா.? அழுவதா.? என்றே புரியாது.!

மெக்கானிக்கல் விபத்து.!

"டூம்ஸ்டே மெஷின்" (Doomsday Machine) எனப்படும் அணு ஆயுதமானது, திட்டமிட்டு தான் ஏவப்பட வேண்டுமென்ற எந்த அவசியமில்லை, விதி வசம் கூட ஏவப்படலாம். எதாவது ஒரு சிறிய இயக்கமுறை கோளாறுகளின் மூலமாக கூட ஒரு அணுவாயுதம் ட்ரிக்கர் (Trigger) செய்யப்படலாம்.

மனித பிழை.!

இயந்திரமே பிழை செய்யும் போது, அதனை உருவாக்கிய மனிதன் பிழை செய்யமாட்டானா.? அப்படியாக அணு ஆயுத ஏவுதல் ஆனது தவறான முறையில் கையாளப்பட்டு, மனித பிழையால் கூட ஏற்படலாம். இது நிகழுமானால், மனித இனம் செய்த மாபெரும் தவறு இதுவாகத்தான் இருக்கும்.

செயல் விளக்கத்தின் போது..

தற்செயலான வெடிப்பு மற்றும் அபாயங்கள் பற்றிய தெளிவான முறையில் புத்தகங்களும், கையேடுகளும் இருப்பினும் கூட, பிற ஆயுதங்களைப் போலவே அணு ஆயுதத்தையும் "சாதரணமாக" நினைத்து செயல் விளக்கம் நிகழ்த்தப்படும் போது கூட ஒரு அணு ஆயுத ஏவுதல் நிஜமாகவே நேரலாம்.

வேறு யாரோ ஒருவரின் மூலம் தூண்டப்படுவதால்..

மேற்கூறப்பட்ட காரணங்களாலோ அல்லது திட்டமிடப்பட்ட உள்நோக்கம் கொண்டோ - மறுபக்கத்தில் இருந்து - ஒரு அணு ஆயுதம் ஏவப்பட்டால், வேறு வழியே இன்றி நம் பக்கத்திலிருந்தும் அணு ஆயுதம் ஏவப்படும் 'கட்டாயமான' அபாயமும் நடக்கலாம். உலக நாடுகளின் அமைதி சார்ந்த ஒப்பந்தங்கள் உடையும் தருணம் அதுவாகத்தான் இருக்கும்.

மனித முட்டாள்தனம்.!

குரங்கு கையில் பூமாலை கிடைத்தால் என்னவாகும்.? சர்வ நாசமாகும். அதேபோல கொஞ்சம் கூட சுய அறிவே இல்லாத 'பைத்தியக்காரத்தனமான' மனிதனிடம், ஒரு விபரீதமான அணு ஆயுதம் சிக்கும்போது கண்டிப்பாக அழிவு ஒன்று ஏற்பட்டே ஆகும். ஏன் தான் அணு ஆயுதங்களை உருவாக்கினோமோ.? என்று உலக நாடுகள் வருந்தும் அளவிலான ஒரு நிகழ்வாய் அது அமையும்.


 குறிப்பு: படங்கள் அனைத்தும்  மாதிரிக்காக / உதாரணத்திற்காக கூகிளில் இருந்து எடுத்து வழங்கப்படுபவையே 
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக