Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 23 நவம்பர், 2020

டுவிட்டரில் டிரெண்டாகும் #BOYCOTTNETFLIX: சூட்டபிள் பாய் தொடரில் உள்ள சிக்கல் காட்சியால் பரபரப்பு!

நெட்பிளிக்ஸ் வாடிக்கையாளர்கள் அதிகரிப்பு

A Suitable Boy என்ற தொடரில் இடம்பெற்ற காட்சிக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் நெட்பிளிக்ஸ் புறக்கணிப்போம் என்ற ஹேஸ்டேக் டுவிட்டரில் டிரெண்டாகி வருகிறது.

அமேசான்பிரைம், நெட்பிளிக்ஸ், டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார்

கொரோனா பொதுமுடக்கத்தின்போது மக்கள் வீட்டிலேயே தேங்கும் நிலை ஏற்பட்டது. ஏராளமானோர் ஸ்மார்ட்போனில் சீரிஸ் பார்க்கத் தொடங்கினர். ஸ்மார்ட்போனில் சீரிஸ் பார்க்க தொடங்கிய அனைவரும் அமேசான்பிரைம், நெட்பிளிக்ஸ், டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் போன்ற ஓடிடி சேவைகளில் சந்தாதாரர்களாக இருப்பார்கள்.

OTT சேவை அணுகல்

தற்போதைய காலகட்டத்தில் வங்கியில் கூட சிலர் தங்களுக்கென்று கணக்கில்லாமல் இருக்கலாம். ஆனால், அமேசான் பிரைம், நெட்பிளிக்ஸ் மற்றும் ஹாட்ஸ்டார் போன்ற OTT சேவைகளுக்கான தளங்களில் தனக்கென்று ஒரு கணக்கில்லாமல் பெரும்பாலானோர் இருப்பதில்லை. இதில் நெட்பிளிக்ஸ் சீரிஸ் என்றே தனி பட்டாளம் உள்ளது.

நெட்பிளிக்ஸ் வாடிக்கையாளர்கள் அதிகரிப்பு

நெட்பிளிக்ஸ் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை ஒன்றரை கோடிக்கு மேல் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் கடந்த மூன்றே மாதங்கள் அதாவது கடந்த காலாண்டு முடிவு(கொரோனா தொற்றினால் மக்கள் வீட்டுக்குள் தேங்கிய மாதங்கள்) இந்த மாதங்களில் மட்டும் 709 மில்லியன் டாலர் வருமானம் வந்துள்ளதாக அந்த நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்களிடம் அதிக வரவேற்பு

இந்த வருமானது கடந்த ஆண்டை விட இரண்டு மடங்கு அதிகம் என்பதும் இதன்மூலம் நெட்பிளிக்ஸின் ஒட்டுமொத்த வருமானம் 28 சதவீதம் உயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்ககப்பட்டுள்ளது. குறிப்பாக 'Tiger king' என்ற டாக்குமெண்டரி, 'Love is Blind' என்ற ரியாலிட்டி ஷோ மற்றும் 'Money Heist' என்ற திரில்லர் சீரியஸ் தொடர்களுக்கு மக்களிடம் அதிக வரவேற்பு இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திரைப்படங்களும் ஓடிடி தளங்களில் வெளியீடு

அதேபோல் தியேட்டர்கள் மூடிய காரணத்தால் ஏணைய திரைப்படங்களும் ஓடிடி தளங்களில் வெளியானது. திரைப்படங்கள் பார்ப்பதற்கு பார்வையாளர்கள் சந்தா அணுகல் பெற்றனர். இதனால் நெட்பிளிக்ஸ் உள்ளிட்ட ஓடிடி சந்தாதாரர்கள் எண்ணிக்கை அதிகரித்தது.

தணிக்கை சான்றிதழ் இல்லாமல் வெளியீடு

ஓடிடி தளங்களில் வெளியாகும் திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர்களுக்கு தணிக்கை தேவையில்லை. இதன்காரணமாக வெளிப்படையாக சில காட்சிகள், வசனங்கள் இருந்தது. ஓடிடி தளங்களில் வெளியாகும் சில தொடர்கள் மதம், சமுதாயம் போன்ற விஷயங்களை தவறாக சித்தரிப்பதாக கூறி சர்ச்சைக்கு உள்ளானது.

#BoycottNetflix என்ற ஹேஸ்டேக்

இந்த நிலையில் டுவிட்டரில் #BoycottNetflix என்ற ஹேஸ்டேக் டிரெண்டாகி வருகிறது. இதற்கு காரணம் A Suitable Boy என்ற பெயரில் வெளியான தொடர்தான். இந்த தொடரில் கதாநாயகன் இஸ்லாமிய கதாபாத்திரமாகவும் நாயகி இந்து கதாபாத்திரமாகவும் நடித்துள்ளனர். இதில் இருவரும் சேர்ந்து கோவிலில் வைத்து முத்தம் இடுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருக்கிறது.

சீரிஸுக்கு எதிராக கண்டனங்கள்

இந்து கோவிலில் முத்தமிடுவது போல் காட்சி இடம்பெற்றுள்ளதால் இந்த சீரிஸுக்கு எதிராக கண்டனங்கள் எழுந்து வருகிறது. இந்து மதத்தை அவமதிப்பது போல் காட்சி உள்ளதாகவும் இந்த சீரிஸ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் டுவிட்டரில் பலர் கருத்து பதிவிட்டு வருகின்றனர். இந்த தொடர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


 குறிப்பு: படங்கள் அனைத்தும்  மாதிரிக்காக / உதாரணத்திற்காக கூகிளில் இருந்து எடுத்து வழங்கப்படுபவையே 
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக