Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

சனி, 28 நவம்பர், 2020

ரிலாக்ஸ் ப்ளீஸ்... கவலையை மறந்து சிரிங்க... இது சிரிப்பதற்கான நேரம்... !!

------------------------------------------------

சிரிக்கலாம் வாங்க...!!

------------------------------------------------

காதலி : என்கிட்ட உங்களுக்கு ரொம்ப பிடிச்சது எது?

என்னோட அழகான முகமா?

அன்பான மனமா?

பணிவான குணமா?

காதலன் : உன்னோட இந்த காமெடி தான்!

காதலி : 😛😛

------------------------------------------------

அதிகாரி : எதுக்குடா கள்ள நோட்டு அடிச்ச?

குற்றவாளி : எது செஞ்சாலும் சொந்த பணத்துலதான் செய்யணும்னு சாகும்போது எங்கப்பா சத்தியம் வாங்கிட்டாரு. அதான்...

அதிகாரி : 😳😳

------------------------------------------------

டீச்சர் : ஒருத்தர் கிட்ட 200 ரூபா இருக்கு... அவரு நாலு பிச்சைக்காரர்களுக்கு 100 ரூபாயா கொடுக்குறாரு... இந்த கணக்கு சரியா? தப்பா...?

மாணவன் : சரி தான் டீச்சர்...

டீச்சர் : எப்படி?

மாணவன் : நாலு பேருக்கு நல்லது செஞ்சா எதுவுமே தப்பு இல்ல... டீச்சர்...

டீச்சர் : 😐😐

------------------------------------------------

சிந்தனை வரிகள்...!!

------------------------------------------------

வாழ்வில் மகிழ்ச்சி என்பது வாழும் இடத்தில் இல்லை. வாழும் விதத்தில் தான் உள்ளது.

நீங்களே மகிழ்ச்சியாக இருக்கும் வரை யாரும் உங்களை மகிழ்ச்சியடையச் செய்ய முடியாது.

வாழ்க்கை என்பது மிகப்பெரிய எதிர்பார்ப்புகளில் இல்லை. சின்ன சின்ன சந்தோஷங்களில் தான் உள்ளது.

உள்ளது எதுவோ அதை இறைவன் கொடுத்ததாக எண்ணி மகிழ்ச்சியாக இருங்கள்.

------------------------------------------------

விடுகதைகள்...!!

------------------------------------------------

1. மரத்துக்கு மரம் தாவுவான் குரங்கல்ல, பட்டை போட்டிருப்பான் சாமி அல்ல. அவன் யார்? 

2. நீரிலும் வாழ்வேன், நிலத்திலும் வாழ்வேன். நீண்ட ஆயுள் உடைய எனக்கு இறைவன் கொடுத்த கவசமும் இருக்கு. நான் யார்? 

3. தாய் குப்பையிலே, மகள் சந்தையிலே. அவை என்ன? 

4. பூ பூக்கும். காய் காய்க்கும். ஆனால் பழம் பழக்காது. அது என்ன? 

விடைகள் :

1. அணில் 

2. ஆமை 

3. நெல்

4. தேங்காய் 

------------------------------------------------

குறளும், பொருளும்...!!

------------------------------------------------

அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்

இழுக்கா இயன்றது அறம்.

பொருள் :

பொறாமை, ஆசை, சினம், கடுஞ்சொல் ஆகிய இந்த நான்கு குற்றங்களுக்கும் இடங்கொடுக்காமல் அவற்றை கடித்து ஒழுகுவதே அறமாகும்.

 குறிப்பு: படங்கள் அனைத்தும்  மாதிரிக்காக / உதாரணத்திற்காக கூகிளில் இருந்து எடுத்து வழங்கப்படுபவையே 
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக