Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 27 நவம்பர், 2020

பள்ளிக்கு அனுப்ப வீடியோ பதிவு செய்த மகள்.! இது தெரியாமல் குத்தாட்டம் போட்ட தந்தை.! கடைசியில் நடந்தது இதுதான்.!

 மகள் எதற்கு அதை

கொரோனா காரணமாக பள்ளி மாணவர்கள் தொடர்ந்து ஆன்லைன் வகுப்பில் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். குறிப்பாக வாட்ஸ்அப் செயலி உட்பட பல்வேறு தனித்துவமான செயலிகள் மூலம் மாணவர்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்துகின்றனர் என்றுதான் கூறவேண்டும்.

இந்த நிலையில் தனது மகள் பதிவு செய்து கொண்டிருந்த வீடியோ ஒன்றில், மகள் எதற்கு அதை எடுக்கிறாள் என்று தெரியாமல், பின்னால் நின்ற தந்தை குத்தாட்டம் ஆடிய வீடியோ ஒனறு இப்போது இணையதளத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.

வெளிவந்த தகவலின்படி, அந்த வீடியோவில் சிறுமி ஒருவர் craft வேலைகளை நாம் இப்போது செய்யப் போகிறோம் என கூறி கையிலுள்ள சில பொருட்களை கொண்டு வேலைகளை செய்ய ஆரம்பிக்கிறது. பின்பு பள்ளிக்கு அனுப்ப வேண்டிய ப்ராஜெக்ட் வேலைகளுக்காக சிறுமி அந்த வீடியோவை பதிவு செய்த நிலையில், அதுகுறித்த அறியாத தந்தை, வீடியோ முழுவதிலும் வேற லெவலில் ஆட்டம் போட்டுள்ளார்.

மேலும் தனது மகள் சாதாரணமாக வீடியோவை எடுப்பதாக நினைத்த தந்தை அப்படி செய்துள்ளார். பின்பு அவரது மனைவி மகளின் பள்ளி படிப்புகளுக்கு பயன்படுத்தும் அந்த மொபைல் செயலியை திறந்து பார்த்த போது அதில் இந்த வீடியோவை தனது அசிரியைக்கு மகள் அனுப்பி வைத்துள்ளது தெரியவந்தது.

அதன்பின்பு இந்த வீடியோ கண்டு வாய் விட்டு சிரித்த மனைவி உடனடியாக இந்த சம்பவத்தை தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மகளின் பள்ளி தொடர்பான செயலியை திறந்து பார்த்த போது இந்த ப்ராஜெக்ட் வீடியோவை அவர் தனது ஆசிரியைக்கு அனுப்பியது தெரிய வந்தது, நான் எப்படி சிரிப்பை அடக்க முடியாமல் சிரித்தேனோ, அதேபோன்று அவரது ஆசிரியையும் கண்டிப்பாக சிரித்துத் தள்ளியிருப்பார்.

ஆனால் எனது கணவர், மகள் எப்போதும் போல வீடியோக்களை எடுத்துக் கொண்டிருக்கிறார் என்று நினைத்துள்ளார்,ஆசிரியருக்கு இந்த வீடியோவை மகள் அனுப்ப போகிறார் என்பது அவருக்கு தெரியவில்லை என்று கூறியுள்ளார் அவரது மனைவி..

தற்சமயம் இந்த வீடியோ ஆனது சமூக வலைத்தளம் உட்பட அனைத்து இணையதளங்களிலும் வைரலாக பரவி வருகிறது. இதுவரை 1.3 மில்லியன் பேர் இந்த வீடியோவை பார்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


 குறிப்பு: படங்கள் அனைத்தும்  மாதிரிக்காக / உதாரணத்திற்காக கூகிளில் இருந்து எடுத்து வழங்கப்படுபவையே 
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக