Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 27 நவம்பர், 2020

43' இன்ச் AKAI ஸ்மார்ட் டிவியில் எல்லா அம்சமும் இருக்கு போலயே.! அடேங்கப்பா விலையும் இவ்வளவு கம்மியா?

AKAI ஸ்மார்ட் டிவி 43' இன்ச்

அமேசான் ஃபயர் டிவி எடிஷன் ஸ்மார்ட் டிவிகளை அறிமுகப்படுத்தியதன் மூலம் AKAI இந்தியா தனது நுகர்வோர் மின்னணு தயாரிப்பு இலாகாவை விரிவுபடுத்தியுள்ளது. 43 இன்ச் ஃபுல் எச்டி ஸ்மார்ட் எல்இடி டிவியை நிறுவனம் தற்பொழுது அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய டிவி வாடிக்கையாளர்களுக்கு கேஷ்பேக் சலுகையுடன் 2020 நவம்பர் 26 முதல் அமேசான் தளத்தில் கிடைக்கும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

AKAI ஸ்மார்ட் டிவி 43' இன்ச்

இந்த புதிய AKAI ஸ்மார்ட் டிவி 43' இன்ச் சாதனம் வெறும் ரூ.23,999 என்ற அறிமுகம் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல், விரைவில் 32' முழு எச்டி டிவியை ரூ .14,999 என்ற விலையிலும் நிறுவனம் அறிமுகம் செய்யவிருக்கிறது. அதேபோல், 4 கே அல்ட்ரா எச்டி 50' & 55' இன்ச் டிவிகளையும் AKAI விரைவில் அறிமுகம் செய்யுமென்று அறிவித்துள்ளது.

அமேசான் ஃபயர் ஓஎஸ்

புதிய AKAI ஸ்மார்ட் டிவிகள் அனைத்தும் அமேசான் ஃபயர் ஓஎஸ் மூலம் இயக்கப்படுகின்றன மற்றும் ஃபயர் டிவி அனுபவத்துடன் கட்டமைக்கப்பட்டுள்ளன, இதனால் வாடிக்கையாளர்களுக்கு பிரைம் வீடியோ, டிஸ்னி + ஹாட்ஸ்டார், நெட்ஃபிக்ஸ், யூடியூப் மற்றும் பல பிரபலமான OTT பயன்பாடுகளிலிருந்து தங்களுக்கு பிடித்த உள்ளடக்கத்தை எளிதாகக் கண்டுபிடித்துப் பார்வையிட முடியும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

அலெக்சா வாய்ஸ் அசிஸ்டன்ட் ரிமோட்

இந்த டிவி அலெக்சா வாய்ஸ் அசிஸ்டன்ட் ரிமோட் மூலம் பயனர்களுக்குப் பயன்பாடுகளைத் தொடங்கவும், பிடித்த திரைப்படங்கள் மற்றும் டிவி நிகழ்ச்சிகளைத் தேடவும், இசையை இயக்கவும், ஸ்மார்ட் ஹோம் சாதனங்களைக் கட்டுப்படுத்தவும், ஆயிரக்கணக்கான அலெக்சா திறன்களை அணுகவும், மேலும் பல அம்சங்களை குரல் வழியாக செயல்படுத்த அலெக்சா அம்சம் உதவுகிறது.

டால்பி ஆடியோ மற்றும் டிடிஎஸ்

புதிய AKAI ஃபயர் டிவி எடிஷன் முழு ஸ்மார்ட் டிவி அம்சத்தை கொண்டுள்ளது. இது முழு எச்டி (1920x1080) தீர்மானம் கொண்ட 60 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதம் மற்றும் 178 அகலமான கோணத்துடன், பிரீமியம் டிஸ்பிளே குவாலிட்டி அனுபவத்திற்காக நீடித்த A + கிரேடு DLED பேனலுடன் வருகிறது. அகாய் ஸ்மார்ட் டிவி டால்பி ஆடியோ மற்றும் டிடிஎஸ் ட்ரூ சரவுண்டுடன் 20 வாட்ஸ் சக்திவாய்ந்த ஸ்பீக்கர்களுடன் வருகிறது.

பலே அம்சங்கள்

இது ஒரு குவாட் கோர் செயலி மூலம் இயக்கப்படுகிறது மற்றும் ஒரு செட்-டாப் பாக்ஸ், ப்ளூ-ரே ஸ்பீக்கர்கள் மற்றும் கேமிங் கன்சோல், ஹார்ட் டிரைவ்கள் அல்லது பிற யூ.எஸ்.பி சாதனங்களை இணைக்க 1 யூ.எஸ்.பி போர்ட் மற்றும் ஐ.ஆர் போர்ட் ஆகியவற்றை இணைக்க 3 எச்.டி.எம்.ஐ போர்ட்களை கொண்டுள்ளது. அனைத்து ஆண்ட்ராய்டு மற்றும் iOS பயனர்களும் அகாய் ஃபயர் டிவி எடிஷன் ஸ்மார்ட் டிவியை போனுடன் இணைத்துப் பயன்படுத்திக்கொள்ளலாம்.


 குறிப்பு: படங்கள் அனைத்தும்  மாதிரிக்காக / உதாரணத்திற்காக கூகிளில் இருந்து எடுத்து வழங்கப்படுபவையே 
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக