Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 27 நவம்பர், 2020

முறைப்படி பதிவு செய்யப்பட்ட PUBG மொபைல் இந்தியா.. களமிறங்க தயார்நிலையில் உள்ளதா?

இந்தியாவில் PUBG

சில நாட்களுக்கு முன்பு, PUBG விளையாட்டை மீண்டும் தொடங்க இந்திய அரசாங்கத்திடம் ஒப்புதல் பெறுவதில் PUBG நிறுவனம் இன்னும் சில சிக்கல்களை எதிர்கொள்கிறது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், PUBG இந்தியா பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில் கேமிங் நிறுவனம் தனது வெற்றியை காண தயார்நிலையில் உள்ளது என்பது இப்பொழுது தெளிவாகத் தெரிகிறது.

இந்தியாவில் PUBG

இந்திய அரசாங்கத்துடன் ஒரு வெளிநாட்டு நிறுவனத்தின் துணை நிறுவனமாக இந்நிறுவனம் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஒருங்கிணைப்பு மூன்று நாட்களுக்கு முன்பு, நவம்பர் 21, 2020 அன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. துணை நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட மூலதனம் 15,00,000 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. PUBG India Pvt. இன் அங்கீகரிக்கப்பட்ட இயக்குநர் குமார் கிருஷ்ணன் ஐயர் இதை தெரிவித்துள்ளார்.

PUBG மொபைல் இந்தியாவின் தலைவர் இவரா?

இவர் ACCUWEATHER India, Spotify India, மற்றும் KRAFTON Inc. போன்ற தலைசிறந்த கார்ப்பரேட் டெவலப்மென்ட் தலைவரான ஹியூனில் சோன் உள்ளிட்ட பல நிறுவனங்களில் இயக்குநராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. PUBG Mobile India கேம்-க்கும், PUBG கார்ப்க்கும் இடையிலான அனைத்து பரிவர்த்தனைகளும் இந்த துணை நிறுவனம் மூலம் நடைபெறும் என்பதை இது குறிக்கிறது.

அனுமதி தயார்நிலையில் உள்ளதா?

PUBG கார்ப் உறுதிப்படுத்திய சரியான வெளியீட்டு தேதி இன்னும் வெளியிடப்படவில்லை, ஆனால் கேம் தொடங்குவதற்கான அனுமதி தயார்நிலையில் காத்திருக்கிறது என்பது மட்டும் இப்பொழுது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவிற்கான பிரத்தியேக ஸ்போர்ட்ஸ் நிகழ்வுகளை நடத்துவதன் மூலம் முதலீடு செய்ய நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதன்படி மிகப்பெரிய பரிசுகள் கொண்ட மிகப்பெரிய போட்டிகள் நடத்தப்படும்.

மைக்ரோசாஃப்ட் உடன் கூட்டு சேர்ந்த PUBG நிறுவனம்

PUBG இன் படி, கேமின் இந்திய வேரியண்ட் பல்வேறு அம்சங்கள் கொண்டு இந்திய கேமர்களுக்காக தனிப்பயனாக்கப்படும், அதாவது விளையாட்டு இப்போது ஒரு மெய்நிகர் உருவகப்படுத்துதல் பயிற்சி மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ளது. கேமிங் டெவலப்பர் அதன் சேவையகங்களில் இந்திய விளையாட்டாளர்களின் தரவை ஹோஸ்ட் செய்வதற்காக மைக்ரோசாஃப்ட் அஸூருடன் கூட்டுச்சேர்ந்துள்ளது.


 குறிப்பு: படங்கள் அனைத்தும்  மாதிரிக்காக / உதாரணத்திற்காக கூகிளில் இருந்து எடுத்து வழங்கப்படுபவையே 
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக