Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 27 நவம்பர், 2020

அடுத்த மாசம் அறிமுகமாகும் டாப் 5 ஸ்மார்ட்போன்கள்; வேற போன் வாங்கிடாதீங்க!

2020 ஆம் ஆண்டின் கடைசி மாதமான டிசம்பரில் அறிமுகமகவுள்ள டாப் 5 ஸ்மார்ட்போன்களின் விவரங்கள் இதோ...

இந்த 2020 ஆம் ஆண்டு எதுக்கு பயன்பட்டதோ இல்லையோ.. பல தரப்பட்ட புதிய ஸ்மார்ட்போன்களுக்கான அறிமுகத்திற்கும், எக்கச்சக்கமான ஆன்லைன் ஆபர் சேல்களுக்கும் நன்றாகவே பயன்பட்டது.

புகழ்பெற்ற பல ஸ்மார்ட்போன் பிராண்டுகள் பட்ஜெட் விலையில், மிட்-ரேஞ்ச் விலையில் மற்றும் பிரீமியம் விழியில் என பார்த்த உடனே வாங்க தூண்டும் பல ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தன. 2020 ஆம் ஆண்டின் கடைசி மாதமான டிசம்பரும் இதற்கு விதிவிலக்காக இருக்கப்போவதில்லை.

நெருங்கி வரும் டிசம்பர் மாதத்தில், பல புதிய ஸ்மார்ட்போன்கள் பல்வேறு விலை வரம்புகளின் கீழ் அறிமுகமாக உள்ளன. அதில் மிகவும் எதிர்பார்க்கப்படும் 5 ஸ்மார்ட்போன்களை பற்றிய தொகுப்பே இது!

01. சாம்சங் கேலக்ஸி ஏ52 - Samsung Galaxy A52

கடந்த 2019 ஆம் ஆண்டில் அறிமுகமான சாம்சங் கேலக்ஸி ஏ 51 ஸ்மார்ட்போனின் வாரிசு தான் இந்த - ஏ 52 மாடல். இந்த புதிய சாம்சங் கேலக்ஸி ஸ்மார்ட்போன் ஆனது குவால்காம் ஸ்னாப்டிராகன் 750 ஜி ப்ராசஸர் மூலம் இயங்கலாம் என்றும், இது புல் எச்டி பிளஸ் ரெசல்யூஷன் கொண்ட6.57 இன்ச் சூப்பர் அமோலேட் பேனலை கொண்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது.

மேலும் இது 4 ஜிபி முதல் 8 ஜிபி வரையிலான ரேம் மற்றும் 128 ஜிபி வரையிலான இண்டர்னல் ஸ்டோரேஜ் உடன் வரலாம். மேலும் கேலக்ஸி ஏ52 ஸ்மார்ட்போனின் இன்பினிட்டி-ஓ டிஸ்பிளே வடிவமைப்பில் செல்பீ கேமராவிற்கான கட்அவுட்டும் இருக்கும். இதன் குவாட்-ரியர் கேமரா அமைப்பில் 64MP பிரைம் கேமராவையும் நாம் எதிர்பார்க்கலாம். முன்னர் வெளியான கேலக்ஸி A51 மாடலின் 48MP மெயின் கேமராவுடன் ஒப்பிடும் போது இதுவொரு அல்ல மேம்படுத்தலாகும்.

இந்த ஸ்மார்ட்போன் Android 11 OS அடிப்படையிலான நிறுவனத்தின் சொந்த ஒன் UI 3.0 மூலம் இயங்கும். மேலும், ஆச்சரியமான செய்தி என்னவென்றால், A52 ஸ்மார்ட்போன் ஆனது அடுத்த 3 பெரிய Android OS அப்டேட்களையும் பெறும். விலை நிர்ணயத்தை பொறுத்தவரை சாம்சங் கேலக்ஸி A52 ஸ்மாட்போன் இந்தியாவில் ரூ.29,999 க்கு அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

02. ஒப்போ ரெனோ 5 - Oppo Reno 5

கேமராவை மையமாகக் கொண்ட ஸ்மார்ட்போனுக்காக நீங்கள் காத்திருக்கிறீர்களா? ஆம் என்றால் ஒப்போ ரெனோ 5 ஸ்மார்ட்போனை மிஸ் பண்ணிடாதீங்க! இந்த ஸ்மார்ட்போன் புல் எச்டி பிளஸ் ரெசல்யூஷன் கொண்ட 6.43 இன்ச் AMOLED டிஸ்ப்ளேவுடன் அறிமுகமாகலாம்.

முன்னதாக வெளியான ஒப்போ ஸ்மார்ட்போன்களைப் போலவே, ரெனோ 5 மாடலும் ஒரு நவநாகரீக வடிவமைப்பை பெறும் என்பதில் சந்தேகம் வேண்டாம். வெளியான லீக்ஸ் தகவல்களின்படி, ரெனோ 5 ஸ்மார்ட்போன் பின்புறத்தில் கண்ணாடி வடிவமைப்பையும் மற்றும் அலுமினிய பிரேம் கட்டமைப்பையும் பெறும்.

இந்த ஸ்மார்ட்போன் 3 வகையான ப்ராசஸர்களுடன் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. அவைகள் - ஸ்னாப்டிராகன் 865, மீடியாடெக் டைமன்சிட்டி 1000+, மற்றும் ஸ்னாப்டிராகன் 765 ஜி சிப்செட்டுகள் ஆகும். இது 8 ஜிபி முதல் 12 ஜிபி வரை ரேம் வரையிலான மாறுபாடுகளை கொண்டிருக்கும். இன்டர்னல் ஸ்டோரேஜை பொறுத்தவரை, யுஎஃப்எஸ் 2.1 டேட்டா பரிமாற்ற தொழில்நுட்பத்துடன் 128 ஜிபி முதல் 256 ஜிபி வரை செல்லலாம். கேமராக்களை பொறுத்தவரை, ரெனோ 5 ஸ்மார்ட்போனில் 64MP மெயின் கேமராவை கொண்டிருக்கும். முன் பக்கத்தில், இந்த ஒப்போ ஸ்மார்ட்போன் 32 எம்பி செல்பீ கேமராவை கொண்டிருக்கும். இந்த ஸ்மார்ட்போனில் 4300 எம்ஏஎச் பேட்டரி பேக் செய்யப்படலாம் மற்றும் அது 65W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவையும் கொண்டிருக்கலாம். விலை நிர்ணயத்தை பொறுத்தவரை ஒப்போ ரெனோ 5 இந்தியாவில் ரூ.34,000 என்கிற புள்ளியை எட்டலாம்.

03. விவோ V20 ப்ரோ - Vivo V20 Pro

முன்னதாக அறிமுகமான விவோ வி 20 மடலை போலவே, வி 20 ‘ப்ரோ’ மாடலும் ரசிகர்களின் மனதை கவர்ந்திழுக்கும் அம்சங்களுடன் வரவுள்ளது. இந்த ‘ப்ரோ’ மாடலில் பல மேம்பாடுகளை நாம் காணலாம். விவோ வி 20 ப்ரோவின் ப்ராசஸர் பிரிவில் - குவால்காம் ஸ்னாப்டிராகன் 765 ஜி சிப்செட் இடம்பெறலாம்.

முன்னதாக வெளியான வி 20 மாடலில் இருக்கும் 720 ஜி ப்ராசசர் உடன் ஒப்பிடும் போது இது ஒரு நல்ல முன்னேற்றமாகும். நீங்கள் ஒரு கேமிங் ஸ்மார்ட்போனைத் தேடுகிறீர்களானால், விவோ வி 20 ப்ரோ மாடலுக்காக காத்திருப்பதில் எந்த தவறும் இல்லை.

இந்த 'ப்ரோ’ மாடலில் நீங்கள் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜை எதிர்பார்க்கலாம். ஏனெனில் பேஸிக் விவோ வி 20 ஸ்மார்ட்போன் மாடலிலும் இது இடம்பெற்று இருந்தது. விலை நிர்ணயத்தை பொறுத்தவரை, விவோ வி 20 ப்ரோ மாடலானது இந்தியாவில் ரூ.36,999 க்கு அறிமுகமாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

04. ரியல்மி 7 5 ஜி - Realme 7 5G

குறுகிய காலத்தில் பெரிய அளவில் பேமஸ் ஆன ரியல்மி நிறுவனம் இந்த 2020 ஆண்டில் பல ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது. மேலும் வரும் டிசம்பர் மாதத்தில் ரியல்மி 7 5 ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் புல் எச்டி ரெசல்யூஷனுடன் 6.5 இன்ச் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்ப்ளே இடம்பெறலாம்

மேலும் இந்த ஸ்மார்ட்போன் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் ஆதரவையும் பெற்று ரசிகர்களை ஆச்சரியப்படுத்தலாம். முன்னதாக வெளியான ரியல்மி ஸ்மார்ட்போன்களைப் போலல்லாமல், வரவிருக்கும் ரியல்மி 7 5 ஜி மாடலானது மீடியா டெக் டைமன்சிட்டி 800 யூ சிப்செட்டுடன் அறிமுகமாகும். கேமராக்களை பொறுத்தவரை, ரியல்மி 7 5ஜி மாடலலானது 16 எம்பி செல்பீ கேமரா மற்றும் 48 எம்பி மெயின் ரியர் கேமராவை கொண்டிருக்கலாம்.

இந்த ஸ்மார்ட்போன் UIS மேக்ஸ் வீடியோ ஸ்டெபிலைசேஷன் விருப்பத்தை வழங்கும் ‘‘Cinema mode’என்கிற பிரத்யேக அம்சத்துடன் வரும் என்றும் கூறப்படுகிறது. மேலும் இது 128 ஜிபி அளவிலான இண்டர்னஸ்ல் ஸ்டோரேஜ் உடன் 6 முதல் 8 ஜிபி வரையிலான ரேம் விருப்பங்களை வழங்கலாம். இந்த ஸ்மார்ட்போன் 5000mAh பேட்டரி மற்றும் 30W டார்ட் சார்ஜிங் ஆதரவுடன் பேக் செய்யப்படலாம். விலை நிர்ணயத்தை பொறுத்தவரை, ரியல்மி 7 5ஜி மாடலனது இந்தியாவில் ரூ.24,400க்கு அறிமுகமாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

05. இன்பினிக்ஸ் ஜீரோ 8 - Infinix zero 8

பட்ஜெட் விலையில் அறிமுகமானாலும் கூட கவர்ச்சிகரமான அம்சங்களுடன் விலையுயர்ந்த போட்டியாளர்களை மிஞ்சுவதற்கு பெயர்போன இன்பினிக்ஸ் ஸ்மார்ட்போன்கள் பட்டியலில் இன்பினிக்ஸ் ஜீரோ 8 மாடலும் இணையவுள்ளது. நவநாகரீக அம்சங்களுடன் நீங்கள் செய்யும் செலவிற்கு மதிப்புள்ள ஒரு ஸ்மார்ட்போனை வாங்க நீங்கள் திட்டமிட்டால், இன்பினிக்ஸ் ஜீரோ 8 அறிமுகத்திற்காக காத்திருங்கள்.

இந்த ஸ்மார்ட்போன் புல் எச்டி ரெசல்யூஷன் மற்றும் 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட ஐபிஎஸ் எல்சிடி டிஸ்ப்ளேவுடன் அறிமுகமாகும். மேலும் இது மீடியா டெக் ஹீலியோ ஜி 90 டி சிப்செட் கொண்டு இயங்கும், இது மிதமான கேமிங்கிற்கு போதுமானதாக இருக்கும். கேமராக்களை பொறுத்தவரை, இதில் 64MP குவாட் ரியர் கேமரா அமைப்பை எதிர்பார்க்கலாம். சுவாரசியமாக இன்பினிக்ஸ் ஜீரோ 8 ஸ்மார்ட்போனில் டூயல் செல்பீ கேமரா அமைப்பையும் நாம் எதிர்பார்க்கலாம்.

அதில் 44 எம்பி ப்ரைமரி செல்பீ கேமராவுடன் 8 எம்பி வைட்-ஆங்கிள் செல்பீ கேமராவும் இருக்கலாம். இந்த ஸ்மார்ட்போன் 4500 mAh பேட்டரி மற்றும் 33W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் பேக் செய்யப்படலாம். விலை நிர்ணயத்தை பொறுத்தவரை, இது இந்தியாவில் ரூ.14,999க்கு அறிமுகமாகலாம் 

 குறிப்பு: படங்கள் அனைத்தும்  மாதிரிக்காக / உதாரணத்திற்காக கூகிளில் இருந்து எடுத்து வழங்கப்படுபவையே 
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக