இறைவர் திருப்பெயர் : ஸ்ரீ
ஆவுண்டீஸ்வரர்
இறைவியார் திருப்பெயர் : ஸ்ரீ அமிர்தாம்பிகை்
தல வரலாறு:
நவராத்தி, வெள்ளி, பூர நட்சத்திர நாட்களில் வளையல்கள் இட்டு வழிபட வேண்டிய தேவி!
குங்குமப்பூவால் அர்ச்சித்திட நற்காரிய சத்திகளை அளிக்கும் அம்பிகை!
மாடு மேய்க்கும் சிறுவனின் பசுக்களில் ஓன்று லிங்க வடிவத்தின் மீது பால் கரப்பதை அறியாத சிறுவன், சாட்டையால் பசுவை அடிக்க, அந்த அடியை இறைவன் தாங்கிக் கொண்டு பசுவிற்க்கும், சிறுவனுக்கும் காட்சி தந்தான் என்பது ஐதீகம் அந்த அடையாளம் இன்னும் சிவன் மீது காணப்படுகிறது.
அமாவாசையில் பித்ரு லோகத்தார் யாவரும்
வந்து வழிபடும் ஆலயம்! நவராத்திரி நாயகியாகப் போற்றபடும் தேவி. நேமம் ஸ்ரீ
அமிர்தாம்பிகை சமேத ஸ்ரீ ஆவுண்டூ ஸ்வரர் திருக்கோயில் பல கோடி யுகங்களாக
இப்பூவுலகைத் தாங்கும் அஷ்டதிக்குப் பாலகர்களும், நேமம் திருக்குளத் திர்த்தத்தில்
நீராடித் தம் களைப்பை இமைப்பொழுதில் போக்கிக் கொள்ள உதவும் ஒளஷதத் தீர்த்தத்
தலமாக, பிணி தீர்க்கும் அருட்பெரும் ஆலய பூமியாக, நேமம் ஸ்ரீ அமிர்தாம்பிகை சமேத
ஸ்ரீ ஆவுண்டீஸ்வரர் ஆலயம் விளங்குகிறது.
இறைவன் இறைவியைத் தவிர பால விநாயகர், தட்சணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா,
சண்டிகேஸ்வரர், சிவவிஷ்ணு துர்க்கை, வள்ளி தெய்வானை உடன் முருகப் பெருமான், வரசித்தி
விநாயகர், பைரவர், காசி விஸ்வவநாதர், விசாலாட்சி, நந்தீஸ்வரர் பல பீடம் என
அனைத்தும் ஓருங்கே அமைந்துள்ளன.
இங்குள்ள சிவாலயம் புண்ணியத் தலம் என்று குறிப்பிடப்படுகிறது. அக்காலத்தில் பைரவர்
சந்நிதியை முதன்மையாகக் கொண்டு ஆலயம் அமைந்துள்ளது சிறப்பு அம்சமாகும். பெண்களாய்
பிறந்த ஒவ்வொருவரும் இங்குள்ள அமிர்தாம்பிகை அம்பிகையை வாழ்நாளில் ஒருமுறையேனும்
தரிசிக்க வேண்டிய புண்ணியஸ்தலம்.
போன்:
அமைவிடம் மாநிலம் :
தமிழ் நாடு
இத்திருத்தலம் –சென்னை அடுத்துள்ள திருமழிசையிலிருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில்
நேமம் என்னும் அழகிய கிராமம்
பெண்களாய்
பிறந்த ஒவ்வொருவரும் இங்குள்ள அமிர்தாம்பிகை அம்பிகையை வாழ்நாளில் ஒருமுறையேனும்
தரிசிக்க வேண்டிய புண்ணியஸ்தலம்.
நவராத்திரி நாயகியாகப் போற்றபடும் தேவி.
அமாவாசையில் பித்ரு லோகத்தார் யாவரும் வந்து வழிபடும் ஆலயம்.
அருள்தரும் ஆலயங்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக