Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 27 நவம்பர், 2020

ஆன்லைன் டிரன்சாக்சனுக்கு ஆப்பு வச்ச கூகுள்! கடும் அதிர்ச்சியில் கூகுள் பே பயனாளர்கள்!

 Google Pay: Google Pay: பணம் அனுப்புவது பாதுகாப்பானதா? - google pay  transactions are safe or not here is the explanation | Samayam Tamil

தற்போதெல்லாம் வங்கிப் பரிவர்த்தனைகள் கணப்பொழுதில் ஆன்லைன் மூலம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் மிக முக்கியமாக இருந்த செயலி தான் கூகுள் பே. இதன் மூலம் இலவசமாக பணத்தை மாற்றிக் கொண்டிருந்தனர் கூகுள் பே பயனாளிகள்.

இந்த நிலையில் கூகுள் பே மூலம் இனி இலவசமாக பணத்தை மாற்ற இயலாது என்ற தகவல் கிடைத்துள்ளது. அதாவது கூகுள் பே ஜனவரி 2021 முதல் ‘பியர் to பியர்’ கட்டண வசதியை நிறுத்த போகிறதாம். அதற்கு மாறாக ‘உடனடி பண பரிமாற்ற கட்டண முறை’ அறிமுகப்படுத்தப்பட உள்ளதாம்.

இதன் மூலம் வங்கி பரிமாற்றத்திற்கு கட்டணம் வசூலிக்கப்படும் என்று கூகுள் நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதற்கான தயாரிப்பு பணிகளை நிறுவனத்தினர் தொடங்கிவிட்டனர் என்று சொல்லப்படுகிறது.

மேலும் 2021 ஆண்டு தொடங்கப்பட்டது முதல் பணம் அனுப்புவதற்கும், பெறுவதற்கும் கூகுள் செயலியை மட்டும்தான் பயன்படுத்த முடியும் என்று கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.

ஏற்கனவே ஜனவரி மாதம் முதல் play.google.com என்ற செயலி சேவை முற்றிலுமாக ரத்து செய்யப்படும் என்று பயனாளர்களுக்கு கூகுள் நிறுவனம் அறிவிக்கை ஒன்றையும் அனுப்பி உள்ளதாம்.

அதுமட்டுமல்லாமல் பணத்தை உடனடியாக மாற்றுவதற்கான கட்டணத்தையும் கூகுள் பே தெரிவித்துள்ளது. எனவே, இவ்வாறு கூகுள் பே மூலம் நடைபெறும் வங்கி பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிக்க முடிவு எடுத்திருப்பதால் கூகுள் பயனாளிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.


 குறிப்பு: படங்கள் அனைத்தும்  மாதிரிக்காக / உதாரணத்திற்காக கூகிளில் இருந்து எடுத்து வழங்கப்படுபவையே 
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக