Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 9 நவம்பர், 2020

உலகத்தை வெல்லும் சக்தி... யாரிடம் இருக்கிறது? - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!

----------------------------------------------------------

கலக்கலான காமெடிகள்...!!

----------------------------------------------------------

வேலைக்காரி : அம்மா, இந்த எலியை எங்கே கொண்டுபோய் விடுறது?

மாலா : பக்கத்து தெருவுல இருக்குற என் மாமியார் வீட்டுல விட்டுரு.

வேலைக்காரி : 😜😜

----------------------------------------------------------

வாடிக்கையாளர் : என்னப்பா... இட்லி, தோசை ரெண்டுமே இல்லைன்னு சொல்ற?

சர்வர் : என்ன சார் பண்ணறது?... நேத்து சாப்பிட்ட எல்லோரும் பில்லுக்கு கரெக்டா காசு கொடுத்துட்டாங்களே!

வாடிக்கையாளர் : 😉😉

----------------------------------------------------------

அருண் : உங்க பையன் கோவிலுக்குப் போனா அதிகமா பொய் பேசுறானே, ஏன்?

குமார் : கோவிலுக்குள்ள போனதும் அவன் மெய் மறந்துடுவான்.

அருண் : 😐😐

----------------------------------------------------------

இந்த புதிருக்கு பதில் சொல்லுங்க...!!!

----------------------------------------------------------

 

ஆனை அசைந்து வர, அருமிளகு சிந்தி வர, கொத்தளத்துப் பெண்களெல்லாம் கூடிக் குலவையிட - அவை யாவை?

 

வேலியிலே படர்ந்திருக்கும், வெள்ளைப்பூ பூத்திருக்கும், கனியும் சிவந்திருக்கும், கவிஞருக்கும் விருந்தாகும் - அது என்ன?

 

விடை :

 

மேகம், மழைத்துளி, தவளை.

 

கோவைப்பழம்.

----------------------------------------------------------

தன்னம்பிக்கை வரிகள்...!!!

----------------------------------------------------------

அடிக்கடி நீ கோபப்பட்டால் உன் கோபத்திற்கு மரியாதை இல்லாமல் போய்விடும். 

உன் மனம் தெளிவாக இருந்தால் உன்னை ஒருவராலும் வீழ்த்த முடியாது.

 

எதிரி எவ்வளவு பெரியவன் என்பது முக்கியம் அல்ல...

உன் துணிச்சலும், தன்னம்பிக்கையும் எவ்வளவு பெரியது என்பதே முக்கியம்.

 

என்ன நடந்தாலும் தன் குறிக்கோளில் மிகத் தெளிவாக இருப்பவனுக்கு தான், இந்த உலகத்தை வெல்லும் சக்தி இருக்கிறது.

----------------------------------------------------------

இன்றைய கடி...!!!

----------------------------------------------------------

சோடாவ பிரிட்ஜில வெச்சா கூல் சோடா ஆகும்.

அதையே வாஷிங் மிஷின்ல வெச்சா வாஷிங் சோடா ஆகுமா?😎

பச்சை மிளகாயில பச்சை இருக்கும்.

ஆனா குடைமிளகாயில குடை இருக்குமா?😌

 குறிப்பு: படங்கள் அனைத்தும்  மாதிரிக்காக / உதாரணத்திற்காக கூகிளில் இருந்து எடுத்து வழங்கப்படுபவையே 
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக