Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 11 நவம்பர், 2020

இந்திய கிராமங்களை குறிவைக்கும் பந்தன் வங்கி.. புதிய மெகா திட்டம்..!

1.4 பில்லியன் டாலர்

இந்திய நிதியியல் பிரிவில் வேகமாக வளர்ந்து வரும் பந்தன் வங்கி தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்யத் தனது கடன் சேவையைப் பல புதிய பிரிவுகளுக்கு விரிவாக்கம் செய்யவும், கிராமம் மற்றும் டவுன் பகுதிகளில் இன்னும் அதிகளவிலான வாடிக்கையாளர்கள் மற்றும் வர்த்தகத்தைப் பெறத் திட்டமிட்டுள்ளது.

இந்தக் கொரோனா காலத்தில் கடன்களைத் திருப்பி செலுத்திய அளவீடுகள் அதிகரித்து லாபகரமான வங்கியாகப் பந்தன் வங்கி வளர்ச்சி அடைந்துள்ளது. இந்நிலையில் பந்தன் வங்கி தனது வர்த்தக வளர்ச்சியை அடுத்தகட்டத்திற்குக் கொண்டு செல்லும் விதமாக இப்புதிய திட்டங்களை வகுத்துள்ளது.

பந்தன் வங்கியின் வர்த்தகம் வட இந்தியாவில் அதிகம் இருக்கும் நிலையில், இப்புதிய திட்டத்தின் கீழ் தென் இந்தியாவில் இவ்வங்கியின் வர்த்தகம் அதிகரிக்கப் பெரிய அளவிலான வாய்ப்புகள் உள்ளதாகக் கூறப்படுகிறது.

சந்திரசேகர் கோஷ்

இந்தியாவின் ஊரகப் பகுதிகளின் வர்த்தகத்தை இன்னும் யாரும் பெரிய அளவில் எட்டிப்படிக்கவில்லை, இப்பகுதியில் இருக்கும் மக்களுக்கு நிதி மற்றும் கடன் சேவைகள் இன்னமும் கிடைக்காமல் உள்ளது. இந்தச் சேவைகளைக் கிடைத்தால் ஊரகப் பகுதி மக்களின் வாழ்வாதாரம், வாழ்க்கை முறை முற்றிலுமாக மாறும் எனத் தெரிவித்துள்ளார் பந்தன் வங்கி சீஇஓ சந்திரசேகர் கோஷ்.

1.4 பில்லியன் டாலர்

பந்தன் வங்கியில் பிளாக்ராக் மற்றும் சிங்கப்பூர் GIC ஆகிய நிறுவனங்கள் இணைந்து சுமார் 1.4 பில்லியன் டாலர் அளவிலான முதலீட்டை ஆகஸ்ட் மாதம் செய்தது.

இந்த முதலீட்டை வைத்துத் தான் பந்தன் வங்கி தனது கடன் மற்றும் நிதியியல் சேவையை விரிவாக்கம் செய்ய முடிவு செய்துள்ளது.

புதிய சேவை

பந்தன் வங்கி தனது புதிய திட்டத்தில் தங்க கடன், ஹோம் லோன் மற்றும் கார் லோன் ஆகியவற்றைப் புதிதாக இணைத்து, அனைத்து வர்த்தகக் கிளைகளிலும் கொடுக்க முடிவு செய்துள்ளது.

இதுநாள் வரையில் பந்தன் வங்கியின் முக்கிய வர்த்தகமாக இருப்பது பிணையும் இல்லாமல் கொடுக்கப்படும் மைக்ரோ கடன் திட்டங்கள் தான். இப்பிரிவு வர்த்தகம் தான் சுமார் 62 சதவீத வர்த்தகம் மைக்ரோ கடன் திட்டகளாக உள்ளது.

கடன் வசூல்

பந்தன் வங்கியின் கடன் வசூல் அளவு அக்டோபர் மாதத்தில் 95 சதவீதத்தை அடைந்த நிலையில் அடுத்த 3 மாதத்தில் 100 சதவீதத்தை அடையும் எனச் சந்திரசேகர் கோஷ் தெரிவித்துள்ளார்.

லாக்டவுன் அறிவிக்கப்பட்ட காலத்தில் கடன் வசூல் அளவு 75 சதவீதம் வரையில் குறைந்துள்ளது.

பருவமழை

2020ஆம் ஆண்டில் கடந்த 6 மாத காலத்தில் நாட்டின் பல பகுதிகளில் பருவமழை சிறப்பாக இருந்த காரணத்தால் இந்த வருடம் விவசாய உற்பத்தி அதிகமாகி ஊரகப் பகுதியில் வர்த்தகம் புதிய உச்சத்தை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் காரணமாக வர்த்தகத் தலைவர்கள், கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் ஆகியோர் விவசாயத் துறை உற்பத்தி மற்றும் ஊரக வர்த்தகத்தைக் கூர்ந்து கவனித்து வருகின்றனர்.

வர்த்தகச் சந்தை

பருவமழை காரணமாக விவசாயத் துறை மற்றும் உற்பத்தியில் ஏற்படும் மாற்றம் கிராம மற்றும் ஊரக வளர்ச்சியில் பெரிய அளவிலான வர்த்தகச் சந்தையை உருவாக்கும் எனக் கணிப்புகள் வெளியானதை அடுத்து, ஆட்டோமொபைல் முதல் சிமெண்ட் வரையில் பல முக்கியத் துறை சார்ந்த முன்னணி நிறுவனங்கள் தங்களது வர்த்தக இலக்கை கிராமப்புறம் மீது திருப்பியுள்ளனர்.

இதுமட்டும் அல்லாமல் நகைக் கடைகள் அனைத்தும் கிராம மக்களை ஈர்க்கும் வகையில் விளம்பரம் செய்யத் துவங்கியுள்ளனர் என்பது கவனிக்கப்பட வேண்டியது.

சிறந்த தருணம்

ஊரக வளர்ச்சி மற்றும் விவசாய துறை உற்பத்தி அதிகமாக இருக்கும் காலத்தில் பந்தன் வங்கி தனது சேவைகளில் தங்க கடன், ஹோம் லோன் மற்றும் கார் லோன் ஆகியவற்றைப் புதிதாக இணைத்துள்ளது.

இப்புதிய சேவைகள் மூலம் அதிகளவிலான வர்த்தகத்தைப் பந்தன் வங்கி பெற முடியும்.

4 சதவீத வருமானம்

இப்புதிய கடன் திட்டத்தின் விரிவாக்கத்திற்குப் பின்பு பந்தன் வங்கி தனது முதலீடு மற்றும் சேவை மூலம் சராசரியாக 4 சதவீத வருமான பெற இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.

மேலும் புதிய சேவை விரிவாக்கத் திட்டத்தில் பிளாக்ராக் மற்றும் சிங்கப்பூர் GIC நிறுவனங்கள் செய்த 1.4 பில்லியன் டாலர் முதலீட்டைப் பயன்படுத்த முடிவு செய்துள்ளது

 குறிப்பு: படங்கள் அனைத்தும்  மாதிரிக்காக / உதாரணத்திற்காக கூகிளில் இருந்து எடுத்து வழங்கப்படுபவையே 
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக