மும்பை பங்குச் சந்தையில் லட்சுமி விலாஸ்
வங்கியின் பங்குகள் இன்றும் கடும் வீழ்ச்சியடைந்துள்ளன. 6 நாட்கள் 53 சதவீத
வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
சென்னையைத் தலைமையகமாகக் கொண்டு செயல்பட்டு
வரும் லட்சுமி விலாஸ் வங்கி இப்போது ரிசர்வ் வங்கியின் கண்காணிப்பு வளையத்தில்
உள்ளது. வாராக் கடன், நிதி நெருக்கடி என, கடந்த சில ஆண்டுகளாகவே லட்சுமி
விலாஸ் வங்கி மிக மோசமாகச் செயல்பட்டு வருகிறது. சிறு குறு நடுத்தர
நிறுவனங்களுக்குக் கடன் வழங்கிக் கொண்டிருந்த இவ்வங்கி பெரு நிறுவனங்கள்
துறைக்கும் கடன் வழங்கி வாராக் கடன் பிரச்சினையில் சிக்கியது. லட்சுமி விலாஸ்
வங்கியின் வாராக் கடன்கள் 2020 மார்ச் மாத நிலவரப்படி 25.39 சதவிகிதமாக
அதிகரித்தது.
இதுபோன்ற பிரச்சினைகளைத் தொடர்ந்து இதனால்
கடந்த 2019 செப்டம்பர் மாதத்தில் லட்சுமி விலாஸ் வங்கியை சீரமைப்புத் திட்டத்தின்
கீழ் கொண்டு வந்தது மத்திய ரிசர்வ்
வங்கி. இத்திட்டத்தின் கீழ் கொண்டு வரப்படும் வங்கிகள் ரிசர்வ் வங்கியின்
அனுமதி இல்லாமல் பெரிய கடன்களை வழங்கவோ அல்லது பெரிய டெபாசிட் தொகையைப் பெறவோ
முடியாது. இதனால் கடந்த 2019 செப்டம்பர் மாதத்தில் லட்சுமி விலாஸ் வங்கியை
சீரமைப்புத் திட்டத்தின் கீழ் கொண்டு வந்தது மத்திய ரிசர்வ் வங்கி. இத்திட்டத்தின்
கீழ் கொண்டு வரப்படும் வங்கிகள் ரிசர்வ் வங்கியின் அனுமதி இல்லாமல் பெரிய கடன்களை
வழங்கவோ அல்லது பெரிய டெபாசிட் தொகையைப் பெறவோ முடியாது.
சீரமைப்புப் பணியைத் தொடர்ந்து லட்சுமி விலாஸ் வங்கியை டிபிஎஸ் இந்தியா லிமிடெட்
வங்கியுடன் இணைக்க ரிசர்வ் வங்கி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. சிங்கப்பூரைச்
சேர்ந்த மிகப் பெரிய நிதி நிறுவனமான டிபிஎஸ் வங்கியின் இந்தியக் கிளையுடன் லட்சுமி
விலாஸ் வங்கி இணைக்கப்படவுள்ளது. இதையடுத்து தனது இந்தியக் கிளையில் ரூ.2,500
கோடியை முதலீடு செய்கிறது. இருந்த போதிலும் லட்சுமி விலாஸ் வங்கியின்
முதலீட்டாளர்களிடையே நிச்சயமற்ற தன்மை நிலவுகிறது. நேற்றைய பங்கு வர்த்தகத்தில் 10
சதவீத வீழ்ச்சி ஏற்பட்டிருந்தது.
இந்நிலையில், மும்பை பங்குச் சந்தையில் இன்றைய
பங்கு வர்த்தகத்திலும் வீழ்ச்சி நீடிக்கிறது. தொடர்ந்து ஆறாவது நாளாக இன்றும்
லட்சுமி விலாஸ் வங்கியின் பங்குகள் பின்னடைவைச் சந்தித்துள்ளன. ஆறு நாட்களில்
மட்டும் 53 சதவீத வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இன்றைய நாளின் தொடக்கத்தில் 9.88 சதவீத
சரிவுடன் லட்சுமி விலாஸ் வங்கியின் பங்கு ஒன்றின் விலை ரூ.7.30 ஆக இருந்தது. இது
கடந்த ஒரு வருடத்தில் மிகப் பெரிய வீழ்ச்சியாகும். மொரட்டோரியம்
அறிவிப்பு வெளியான நாள் முதலே பங்குச் சந்தையில் இறங்குமுகமாகவே இருப்பதால்
முதலீட்டாளர்கள் அச்சத்தில் உள்ளனர்.
குறிப்பு: படங்கள் அனைத்தும் மாதிரிக்காக / உதாரணத்திற்காக கூகிளில் இருந்து எடுத்து வழங்கப்படுபவையே இது
போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள்
போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம்
சேனல்-லில் இணைந்து கொள்ளவும்
உள்ளூர் முதல் உலகம் வரை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக