மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் புதிய பிராண்டான மைக்ரோமேக்ஸ் இன் நோட் 1 ஸ்மார்ட்போன் இன்று மதியம் 12:00 மணி முதல் பிளிப்கார்ட் மற்றும் மைக்ரோமேக்ஸின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் வழியாக விற்பனைக்கு வாங்குவதற்குக் கிடைக்கிறது. அறிமுக விற்பனையாக நிறுவனம் சில சலுகைகளையும் அறிவித்துள்ளது.
மைக்ரோமேக்ஸ் இன் நோட் 1 மற்றும் 1B விற்பனை
மைக்ரோமேக்ஸ் இன் நோட் 1 ஸ்மார்ட்போன் இந்த மாத தொடக்கத்தில், மைக்ரோமேக்ஸ் இன் 1B ஸ்மார்ட்போனுடன் இந்தியச் சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இப்போது, இந்த புதிய மைக்ரோமேக்ஸ் இன் நோட் 1 ஸ்மார்ட்போன் இந்தியாவில் இன்று விற்பனைக்கு வருகிறது. மைக்ரோமேக்ஸ் இன் 1B ஸ்மார்ட்போன் வரும் நவம்பர் 26 ஆம் தேதி பிளிப்கார்ட் வழியாக விற்பனைக்குக் கிடைக்குமென்று நிறுவனம் அறிவித்துள்ளது.
விலை என்ன?
மைக்ரோமேக்ஸ் இன் நோட் 1 ஸ்மார்ட்போன் இன்று மதியம் 12:00 மணி முதல் விற்பனைக்கு வரும், இது பிளிப்கார்ட் மற்றும் மைக்ரோமேக்ஸின் வலைத்தளத்திலிருந்து வாங்குவதற்குக் கிடைக்கும். இதன் 4 ஜிபி ரேம் + 64 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் ரூ .10,999 ஆகவும், இதன் 128 ஜிபி வேரியண்ட் வெறும் ரூ .12,499 என்ற விலையிலும் விற்பனைக்கு கிடைக்கும். புதிய ஸ்மார்ட்போன் பச்சை மற்றும் வெள்ளை வண்ண விருப்பங்களில் வருகிறது.
மைக்ரோமேக்ஸ் இன் நோட் 1 சலுகைகள்
பிளிப்கார்ட்டில், வாடிக்கையாளர்களுக்கு பிளிப்கார்ட் ஆக்சிஸ் கிரெடிட் கார்டுடன் 5 சதவீதம் வரம்பற்ற கேஷ்பேக் மற்றும் ஆக்சிஸ் பேங்க் பஸ் கிரெடிட் கார்டுடன் 5 சதவீதம் தள்ளுபடி உள்ளிட்ட சில சலுகைகள் கிடைக்கும். ஃபெடரல் வங்கி டெபிட் கார்டுகளின் மீது ரூ. 1,223 முதல் நோ-காஸ்ட் இஎம்ஐ விருப்பத்துடன் 10 சதவீத தள்ளுபடி கிடைக்கும். பிளிப்கார்ட்டில் வாங்குபவர்களுக்கு ரூ .10,350 வரை எக்ஸ்சேஞ் தள்ளுபடியும் கிடைக்கிறது.
மைக்ரோமேக்ஸ் இன் நோட் 1 சிறப்பம்சங்கள்
- 6.67' இன்ச் முழு எஃப்.எச்டி பிளஸ் டிஸ்பிளே
- ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ ஜி85 பிராசஸர்
- ஆண்ட்ராய்டு 10
- 1000MHz ARM மாலி-G52 2EEMC2 ஜிபியு கொண்ட 4 ஜிபி LPPDDR4x ரேம்
- 64 ஜிபி / 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ்
- எஸ்.டி கார்டு ஸ்லாட் வசதி
- 48 மெகா பிக்சல் பிரைமரி கேமரா
- 5 மெகா பிக்சல் அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா
- 2 மெகா பிக்சல் மேக்ரோ கேமரா
- 2 மெகா பிக்சல் டெப்த் சென்சார்
- 16 மெகா பிக்சல் செல்ஃபி ஷூட்டர் கேமரா
- எப்எம் ரேடியோ
- கூகுள் அசிஸ்டண்ட் பட்டன்
- பின்புற கைரேகை சென்சார்
- டூயல் 4ஜி வோல்ட்இ
- வைபை
- ப்ளூடூத் 5
- யுஎஸ்பி டைப் சி
- 3.5 எம்எம் ஆடியோ ஜாக்
- 18W பாஸ்ட் சார்ஜிங்
- 5000 எம்ஏஎச் பேட்டரி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக