Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 23 நவம்பர், 2020

ஆசையாக ஆர்டர் பண்ண பார்சல் வீட்டுக்கு வந்தது: திறந்து பார்த்தா?- அதிர்ந்து போன தம்பதி

த மார்க் ஸ்மித் மற்றும் கெம்மா ஸ்மித்

உலகம் முழுவதும் அதிகளவு மக்கள் கடைக்கு சென்று நேரத்தை அதிகம் செலவழிக்காமல் ஆன்லைன் மூலமே பொருட்களை ஆர்டர் செய்து வருகின்றனர். குறிப்பாக இதன் ஆன்லைன் மூலம் பொருட்களை வாங்குவதால் நேரமும் மிச்சமாகும், குறிப்பிட்ட சலுகையும் கிடைக்கும்.

மேலும் கடந்த ஓராண்டாக உலக நாடுகள் அனைத்தையும் கொரோனா எனும் கொடிய தொற்று கடுமையாக அச்சுறுத்தி வந்த நிலையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் கடைக்கு சென்று பொருட்களை வாங்க முடியாத நிலை இருந்ததால் ஆன்லைன் வணிகம் இன்னும் அதிகரிக்க ஆரம்பித்தது.

அதேபோல் அமேசான் வலைத்தளத்தில் மக்கள் அதிகளவு பொருட்களை வாங்குகின்றனர். இந்த தளத்தில் சிறந்த சலுகையும் கிடைக்கும். அதேசமயம் குறிப்பிட்ட நேரத்தில் பொருட்களும் டெலிவரி செய்யப்படும். உங்கள் பட்ஜெட்டிற்கும் ஏற்றார் போல் எண்ணிலடங்காத தயாரிப்புகளை அமேசான் நிறுவனம் உங்களுக்கு சாய்ஸ் ஆக வழங்குகிறது. அப்படி நீங்கள் தேடி தேர்வு செய்த பொருள் இறுதி நேரத்தில் மாறிப்போனால் உங்கள் மனம் எப்படி பதைபதைக்கும்.

அப்படியான நிகழ்வு தான் அமேசானின் பயனருக்கு நடந்துள்ளது. இங்கிலாந்தின் ஷாங்களின் (Shanklin) என்னும் பகுதியை சேர்ந்த மார்க் ஸ்மித் மற்றும் கெம்மா ஸ்மித் என்ற தம்பதி, கிறிஸ்துமஸை முன்னிட்டு சில அலங்கார பொருட்களை அமேசானில் ஆர்டர் செய்துள்ளனர். அப்போது வீட்டிற்கு வந்த பார்சலை திறந்த பார்த்த கெம்மா,பீதியில் உறைந்து போயுள்ளார்.

அதற்கு காரணம் அந்த பார்சலை திறந்த போது அதற்குள் சுமார் 10 செ.மீ நீளமுள்ள சிலந்தி ஒன்று இருந்துள்ளது. உடனடியாக இது தொடர்பாக தனது கணவர் மார்க்கிற்கு தகவர் தெரிவித்த நிலையில், தனது வீட்டில் நடந்த சம்பவம் தொடர்பாக, மார்க் ஸ்மித்த தனது பேஸ்புக் பக்கத்தில் சிலந்தி புகைப்படத்துடன் என் நடந்தது என்பதையும் விளக்கி பதிவு ஒன்றை போட்டிருந்தார்.

குறிப்பாக ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்யப்பட்டு வரும் பொருட்களில் இது போன்ற உயிரனங்கள் இருப்பது இது ஒன்றும் புதிதல்ல. இதேபோன்று பலமுறை நிகழ்ந்துள்ள நிலையில், அது தொடர்பான பதிவுகளையும், அனுபவங்களையும் ஆன்லைன் வாடிக்கையாளர்கள் தங்களது சமூக வலைத்தளங்களில் அடிக்கடி பகிர்ந்து வருவது வாடிக்கையாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


 குறிப்பு: படங்கள் அனைத்தும்  மாதிரிக்காக / உதாரணத்திற்காக கூகிளில் இருந்து எடுத்து வழங்கப்படுபவையே 
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக