டெலிகாம் சேவைக்கான கட்டணங்கள் உயர்த்தப்பட வேண்டும் என்பதில் ஏர்டெல் உறுதியாக உள்ளது என பாரதி ஏர்டெல் நிறுவனத்தின் தலைவர் சுனில் மிட்டல் தெரிவித்துள்ளார்.
தொலைத் தொடர்பு நிறுவனங்கள் இடையே போட்டி
உலகளவில் இரண்டாவது அதிக மக்கள் தொகை கொண்ட நாடு இந்தியா. இந்தியாவில் தொழில்களை பெருக்க பல்வேறு நிறுவனங்களும் ஆர்வம் காட்டி வருகின்றன. இதில் குறிப்பிடத்தக்கது தொலைத் தொடர்பு நிறுவனங்கள். இந்தியாவில் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களாக திகழ்வது ஜியோ, ஏர்டெல், விஐ, பிஎஸ்என்எல் ஆகும்.
விஐ என்ற புதிய பிராண்ட்
சமீபத்தில் வோடபோன் ஐடியா., விஐ என்ற புதிய பிராண்டை அறிவித்து வாடிக்கையாளர்களை கவரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. ஜியோ அறிமுகமான குறைந்த காலங்களில் அசுர வளர்ச்சி அடைந்திருக்கிறது. ஜியோவுடன் போட்டிப்போடும் முயற்சியில் விஐ, ஏர்டெல் திக்குமுக்காடி வருகின்றன.
குறைந்த விலையில் அதிக இணைய சேவை
ஜியோ குறைந்த விலையில் அதிக இணைய சேவைகளுடன் கூடிய சலுகைகளை வழங்கி வருகிறது. இதன்காரணமாக ஜியோ குறைந்த காலத்திலேயே அதீத வளர்ச்சி அடைந்தது. அனைத்து நிறுவனங்களும் வாடிக்கையாளர்களை தக்கவைக்கவும் அதிகரிக்கவும் லாபத்தை மறந்து பல சலுகைகளை வாரி வழங்கத் தொடங்கியது.
தொலைத்தொடர்பு நிறுவனங்கள் விலை
இந்தநிலையில் வாடிக்கையாளர்களை இழந்துவிடக்கூடாது என்ற அழுத்தத்தினால் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் விலை அதிகரிக்க முடியாத நிலையில் உள்ளன. இதையடுத்து அடுத்த விலை உயர்வுக்கு நிறுவனங்கள் தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகின.
பாரதி ஏர்டெல் தலைவர் சுனில் மிட்டல்
இதை உறுதிப்படுத்தும் விதமாக பாரதி ஏர்டெல் தலைவர் சுனில் மிட்டல் பதில் தெரிவித்துள்ளார். அதில் சீன தொலைத் தொடர்பு உபகரண விற்பனையாளர்களை 5ஜி தொழில்நுட்பத்துக்கு இந்தியா அனுமதிக்கப்படுமா என்ற விவகாரத்தில் நாடு என்ன தீர்மானிக்கிறதோ அதை அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்படும் என கூறினார்.
கட்டணங்கள் உயர்த்தப்பட வேண்டும்
கட்டண நிர்ணயம் பொருத்தவரை ஏர்டெல் முன்னதாக தங்களது நிலைப்பாட்டை தெரிவித்துள்ளது. கட்டணங்கள் உயர்த்தப்பட வேண்டும் என்பதில் ஏர்டெல் உறுதியாக உள்ளது என கூறினார். இந்தியாவில் டெலிகாம் சேவை கட்டணம் மிக குறைவாக இருக்கிறது என குறிப்பிட்டார்.
கட்டண உயர்வு கட்டாயம் தேவை
இந்தியாவில் இதே கட்டணம் தொடர்ந்தால் டெலிகாம் துறையால் தாக்குபிடிக்க முடியாது எனவும் இந்த சூழ்நிலைக்கு கட்டண உயர்வு கட்டாயம் தேவை எனவும் கூறினார். சக நிறுவனங்களும் கட்டண உயர்வை அமல்படுத்த வேண்டும் எனவும் டெலிகாம் கட்டுப்பாட்டு அமைப்பு இந்த கட்டண உயர்வுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக