Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 27 நவம்பர், 2020

இன்று முதல் புதிய பெயருடன் புதிய துவக்கம்

Lakshmi Vilas Bank: இன்று முதல் புதிய பெயருடன் புதிய துவக்கம்

லட்சுமி விலாஸ் வங்கி கிளைகள் இன்று முதல் அதன் புதிய பெயரான DBS Bank India என்ற பெயருடன் செயல்படும். இந்திய ரிசர்வ் வங்கி லட்சுமி விலாஸ் வங்கியின் பெயரை DBS Bank India என்று மாற்றியுள்ளது.

Lakshmi Vilas Bank-ல் கணக்கு வைத்திருப்பவர்கள் இப்போது DBS Bank India-வின் வாடிக்கையாளர்கள் என்று அழைக்கப்படுவார்கள்.

லட்சுமி விலாஸ் வங்கியின் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் கிடைக்கும் அனைத்து வசதிகளும் தொடர்ந்து அவர்களுக்கு வழங்கப்படுவதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் DBS Bank India செய்து வருவதாக ரிசர்வ் வங்கி (Reserve Bank) தெரிவித்துள்ளது. ஒரு வகையில் லட்சுமி விலாஸ் வங்கியின் இருப்பு இப்போது முடிந்துவிட்டது.

வியாழக்கிழமை, மோடி அமைச்சரவை Lakshmi Vilas Bank, டிபிஎஸ் வங்கி இந்தியா லிமிடெட்டுடன் இணைய ஒப்புதல் அளித்தது. இப்போது வங்கிக்கு பொருந்தக்கூடிய தடை காலம் (Moratorium Period) டிசம்பர் 16-லிருந்து நவம்பர் 27 ஆக மாறியுள்ளது. இப்போது வங்கி வாடிக்கையாளர்கள் தங்கள் பணத்தை திரும்பப் பெற எந்த தடையும் இல்லை.

அமைச்சரவைக்குப் பின்னர் செய்தியாளர் சந்திப்பில் பேசிய பிரகாஷ் ஜாவ்டேகர், 4,000 ஊழியர்களின் சேவைகளும் பாதுகாப்பாக இருக்கும் என்று கூறினார். லட்சுமி விலாஸ் வங்கியின் நிதி ஆரோக்கியத்தை கெடுப்பவர்களுக்கு தண்டனை வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

வாடிக்கையாளர்களின் பணம் முற்றிலும் பாதுகாப்பாக உள்ளது

20 லட்சம் வாடிக்கையாளர்கள் மற்றும் ரூ .20,000 கோடி டெபாசிட் இப்போது முற்றிலும் பாதுகாப்பாக உள்ளது, கவலைப்பட வேண்டிய அவசியமில்லை, வேறெங்கும் அலைய வேண்டிய அவசியமுமில்லை என்றும் ஜாவ்டேகர் கூறினார். வாடிக்கையாளர்களின் பணம் பாதுகாப்பான இடத்தில் உள்ளது என அவர் நம்பிக்கை அளித்தார். DBIL-ன் பணப்புழக்க நிலை மிகவும் நன்றாக உள்ளது. இணைப்புக்குப் பிறகு, DBS இதில் 2,500 கோடி ரூபாய் கூடுதல் மூலதனத்தை சேர்க்கும்.

கட்டுப்பாடுகள் நவம்பர் 17 முதல் நடைமுறைக்கு வந்தன

நவம்பர் 17 ம் தேதி, சங்கடத்தில் இருக்கும் லக்ஷ்மி விலாஸ் வங்கிக்கு 30 நாள் தடை விதிக்குமாறு ரிசர்வ் வங்கியை அரசாங்கம் கேட்டுக் கொண்டது. ரூ .25,000 க்கு மேலான தொகையை வாடிக்கையாளர்களால் எடுக்க முடியவில்லை. லட்சுமி விலாஸ் வங்கியை DBS உடன் இணைப்பதற்கான வரைவு திட்டத்தையும் ரிசர்வ் வங்கி முன்வைத்தது.

இதன் பின்னர், லட்சுமி விலாஸ் வங்கியின் போர்ட் கலைக்கப்பட்டது. மேலும் கனரா வங்கியின் முன்னாள் தலைவரான டி.என்.மனோகரன் 30 நாட்களுக்கு வங்கியின் நிர்வாகியாக நியமிக்கப்பட்டார்.

 குறிப்பு: படங்கள் அனைத்தும்  மாதிரிக்காக / உதாரணத்திற்காக கூகிளில் இருந்து எடுத்து வழங்கப்படுபவையே 
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக