ஒன்பிளஸ் நிறுவனம் எப்போதுமே தனித்துவமான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. இதானல் உலகம் முழுவதும் இதன் ஸ்மார்ட்போன்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. அண்மையில் இந்நிறுவனம் அறிமுகம் செய்த ஒன்பிளஸ் நோர்ட் என் 100 மாடல் ஸ்டாண்டர்ட் 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடன் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தாலும் கூட 90 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளேவை கொண்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் கடந்த மாதம் ஒன்பிளஸ் நோர்ட் என் 100 மாடலானது ஒன்பிளஸ் நோர்ட் என் 10 5 ஜி உடன் அறிமுகம் செய்யப்பட்டது. தற்சமயம் ஒன்பிளஸ் செய்தி தொடர்பாளரை மேற்கோள் காட்டி வெளியான அறிக்கை ஒன்பிளஸ் நோர்ட் என் 100 உண்மையில் 90 ஹெர்ட்ஸ் டிஸ்பிளேவுடன் வருகிறது. ஆனால் ஆனால் எப்போதும் அந்த ஃபிரேம்ரேட்டை வழங்காது. 90 ஹெர்ட்ஸ் விருப்பமானது இங்கிலாந்தில் அறிமுகமான ஒரு என் 100 மாடலின் செட்டிங்ஸ்-இல் காணப்பட்டதாக கூறப்படுகிறது.
மேலும் கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ஒன்பிளஸ் 7 ப்ரோவில் தொடங்கி அதி ரெப்ரெஷ் வீகித டிஸ்பிளேக்களின் மீது கனவம் செலுத்துகிறது. எனவே அதன் பட்ஜெட் ப்ரெண்டலி ஒன்பிளஸ் நோர்ட் மற்றும் ஒன்பிளஸ் நோர்ட் என் 10 5ஜி போன்களில் கூட 90 ஹெர்ட்ஸ் டிஸ்பிளேக்கள் இடம்பெற்றன.
ஆனால் ஒன்பிளஸ் நோர்ட் என் 100-ஐ பொறுத்தவரை, தொடக்கத்தில் இது 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்டை கொண்டிருப்பதாக விளம்பரம் செய்தது ஒன்பிளஸ் நிறுவனம். இருப்பினும் ஆண்ட்ராய்டு அத்தாரிட்டி வெளியட்டுள்ள அறிக்கையின்படி பிரிட்டனில் வாங்க கிடைக்கும் என் 100 மாடலில் 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் ஆதரவு அணுக கிடைக்கிறது.
மேலும் அந்த அறிக்கை, ஒன்பிளஸ் என் 100 மாடலில் 60 ஹெர்ட்ஸ் டிஸ்பிளே இருப்பதாக முதலில் கூறியது ஏன்? என்கிற கேள்விக்கு ஒன்பிளஸ் நிறுவனம் எந்த விளக்கமும் அளிக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு காரணம் என்னவென்று பார்த்தால் ஒன்பிளஸ் நோர்ட் என் 100 இன் பேஸிக் அம்சமங்கள் இதற்கு காரணமாக இருக்கலாம். அதாவது எல்லா பயன்பாடுகளிலும் 90 ஹெர்ட்ஸ் அனுபவத்தை வழங்க முடியாமல் போகலாம். உடன் இந்த ஸ்மார்ட்போன் ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 460 எஸ்ஒசி, அட்ரினோ 610 ஜி.பீ.யூ மற்றும் 4 ஜிபி ரேம் மூலம் இயக்கப்படுகிறது. பின்பு இது எச்டி 10 (720x1,600 பிக்சல்கள்) டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது.
ஆனாலும் இந்த சாதனம் 60Hz மற்றும் 90Hz க்கு இடையில் மாறுவதற்கான விருப்பத்துடன் வருகிறது. இப்போது அணுக கிடைக்கும் 90Hz-ஐ இயக்குவதன் வழியாக ஸ்மார்ட்போனின் செயல்திறன் மற்றும் பேட்டரி ஆயுளில் என்னென்ன தாக்கங்கள் ஏற்படும் என்பது குறித்த தகவல் எதுவும் இல்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக