Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

சனி, 21 நவம்பர், 2020

உலகில் விசித்திர சட்டங்களை கொண்ட நாடுகளின் பட்டியல்

 IBC | RERA Litigation | NCLT Matters | Latest RERA and IBC Updates

மக்களை கட்டுப்படுத்த கடந்த காலம் முதலே விசித்திரமான பல சட்டங்கள் நடைமுறையில் இருந்து கொண்டுதான் வந்திருக்கிறது. ஒவ்வொரு நாட்டிற்கும் அதன் சொந்த நாகரிகமும் அதன் சொந்த விதிகளும் உள்ளன. விதிகளுடன், எல்லோரும் கடைபிடிக்க வேண்டிய சிறப்புச் சட்டங்களும் உள்ளன. சில நாடுகளில் மிகவும் விசித்திரமான சட்டங்கள் உள்ளன. அந்தவகையில்  வெளிநாடுகளின் சில விசித்திரமான சட்டங்களைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள் (Weird Laws In The World).

விளக்கை மாற்ற சட்டம்

வழக்கமாக வீட்டிலுள்ள பல்புகளை நாமே அல்லது யாருடைய உடவியுடன் மாற்றிக்கொள்வோம். ஆனால் ஆஸ்திரேலியாவின் விக்டோரியாவில் அவ்வாறு செய்வது சட்டவிரோதமானது. அங்கு, ஒரு பயிற்சி பெற்ற எலக்ட்ரீஷியன் மட்டுமே இந்த வேலையைச் செய்ய முடியும். இந்தச் சட்டத்தைக் கடைப்பிடிக்கத் தவறினால் 10 ஆஸ்திரேலிய டாலர்கள் வரை அபராதம் விதிக்கப்படலாம்.


குண்டாகுவது சட்டவிரோதமானது 

 
ஜப்பானில், குண்டாகுவது சட்டவிரோதமானது, 2009 இல் தயாரிக்கப்பட்ட ஒரு சட்டத்தின்படி, ஆண்கள் மற்றும் பெண்களின் இடுப்பின் அதிகபட்ச அளவு இங்கே நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சட்டத்தின்படி, ஜப்பானில், 40 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் 31 அங்குலங்களுக்கு மேல் இருக்கக்கூடாது, பெண்கள் 35 அங்குலங்களுக்கு மேல் இருக்கக்கூடாது. அதை மீறுவது சட்டவிரோதமாக கருதப்படுகிறது.

பாராளுமன்றத்தில் மரணம் சட்டவிரோதமானது

Description: பாராளுமன்றத்தில் மரணம் சட்டவிரோதமானது

இங்கு நாடாளுமன்றத்தில் யாரும் இறக்க முடியாது என்று ஒரு சட்டம் இங்கிலாந்தில் உள்ளது. 2007 ஆம் ஆண்டில், இது இங்கிலாந்தில் மிகவும் அபத்தமான சட்டமாக அறிவிக்கப்பட்டது. இந்தச் சட்டத்திற்கு எந்த அடிப்படையும் இல்லை என்று மக்கள் கூறியிருந்தனர். இருப்பினும், இந்த சட்டம் குறித்து எழுத்துப்பூர்வ விளக்கம் எதுவும் இல்லை என்றும் கூறப்பட்டது.


காரில் பெட்ரோலுக்கான சட்டம்


நீங்கள் ஜெர்மனியில் இருந்தால், உங்கள் காரில் பெட்ரோல் ஒருபோதும் முடிவடையக்கூடாது. இங்கே, காரை இழுப்பதோடு நடப்பதும் சட்டவிரோதமானது என்று கருதப்படுகிறது. இது மற்ற ஓட்டுனர்களின் கவனத்தை திசை திருப்பி விபத்துக்களின் சாத்தியத்தை அதிகரிக்கிறது என்று நம்பப்படுகிறது. இதற்காக 65 பவுண்டுகள் (சுமார் 6 ஆயிரம் ரூபாய்) அபராதம் விதிக்க முடியும்.


 குறிப்பு: படங்கள் அனைத்தும்  மாதிரிக்காக / உதாரணத்திற்காக கூகிளில் இருந்து எடுத்து வழங்கப்படுபவையே 
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்

 

,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக