
ZTE பிளேட் 20 ப்ரோ 5ஜி, ZTE ஆக்சன் 20 4ஜி ஸ்மார்ட்போன் பல்வேறு சிறப்பம்சங்களோடு அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ZTE பிளேட் 20 ப்ரோ 5ஜி, ZTE ஆக்சன் 20 4ஜி
ZTE பிளேட் 20 ப்ரோ 5ஜி, ZTE ஆக்சன் 20 4ஜி ஸ்மார்ட்போன்கள் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இச்ட்டிஇ ப்ளேட் 20 ப்ரோ 5ஜி இந்த மாத தொடக்கத்தில் தொடங்கப்பட்ட இசட்டிஇ பிளேட் 20 5ஜி இன் மேம்படுத்தப்பட்ட அம்சமாக இருக்கிறது. ZTE ஆக்சன் 20 5ஜி வேரியண்ட் 4ஜி பதிப்பாக இருக்கும். அதேபோல் டிஸ்ப்ளே கீழ்புறத்தில் செல்பி கேமரா கொண்ட முதல் பதிப்பாக இது இருக்கும் என்று நிறுவனம் தெரிவிக்கிறது.
ZTE பிளேட் 20 ப்ரோ 5ஜி
ZTE பிளேட் 20 ப்ரோ 5ஜி ஸ்னாப்டிராகன் 765 ஜி SoC செயலியுடன் வருகிறது. ZTE பிளேட் 20 ப்ரோ 5ஜி மற்றும் ZTE ஆக்சன் 20 4ஜி ஆகியவற்றின் விலை மற்றும் கிடைக்கும் தன்மையை நிறுவனம் இன்னும் குறிப்பிடவில்லை. இரண்டு ஸ்மார்ட்போன்களும் எப்போது இந்திய கிடைக்கும் என்பது குறித்து இன்னும் தெளிவாக தெரியவில்லை.
ZTE பிளேட் 20 ப்ரோ 5ஜி அம்சங்கள்
ZTE பிளேட் 20 ப்ரோ 5ஜி அட்ரினோ 620 ஜி.பீ.யூ ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 765 ஜி எஸ்ஓசி செயலி மூலம் இயக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்பு உள்ளது. வளைந்த காட்சிகள் மற்றும் மெலிதான பெசல்களைக் கொண்டிருக்கிறது. இது 64 மெகாபிக்சல் முதன்மை சென்சார் கொண்டிருக்கும் என தெரிவிக்கப்படுகிறது. முன்பக்கத்தில், ZTE பிளேட் 20 ப்ரோ 5ஜி 20 மெகாபிக்சல் செல்பி ஷூட்டருடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போனுக்கு நிறுவனம் 4,000 mAh பேட்டரியை வழங்குகிறது.
அண்டர் டிஸ்ப்ளே செல்பி கேமரா
ZTE ஆக்சன் 20 4ஜி மாறுபாடு ஆக்டா கோர் யூனிசாக் டைகர் T618 SoC செயலி மூலம் இயக்கப்படுகிறது என ஜிஎஸ்மரினா தெரிவித்துள்ளது. ZTE ஆக்சன் 20 5ஜி அண்டர் டிஸ்ப்ளே செல்பி கேமராவுடன் வருகிறது. குவாட் பின்புற கேமரா அமைப்பை இது கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
64 மெகாபிக்சல் முதன்மை கேமரா
இதில் 64 மெகாபிக்சல் முதன்மை சென்சார், 8 மெகாபிக்சல் இரண்டாம் நிலை சென்சார், 2 மெகாபிக்சல் மூன்றாம் நிலை சென்சார் மற்றும் 2 மெகாபிக்சல் நான்காம்நிலை சென்சார் ஆகியவை அடங்கும். முன்பக்கத்தில், ZTE ஆக்சன் 20 5ஜி ஸ்மார்ட்போன் 32 மெகாபிக்சல் அண்டர் டிஸ்ப்ளே ஹிட்டன் அமைப்பு செல்பி கேமரா கொண்டிருக்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக