ரிலையன்ஸ் ஜியோ, மீடியா டெக் இணைந்து ஜியோ கேம்களில் ஆன்லைன் போட்டியை அறிவித்துள்ளது. 70 நாட்கள் நடக்கும் போட்டிக்கான முன்பதிவுகள் இன்று தொடங்கப்பட்டுள்ளது.
ரிலையன்ஸ் ஜியோ, மீடியா டெக்
ரிலையன்ஸ் ஜியோ, மீடியா டெக் உடன் ஒரு கூட்டணியை அறிவித்துள்ளது. இதன்படி இரு நிறுவனங்களும் இணைந்து கேமிங் மாஸ்டர்ஸ் என்ற ஆன்லைன் கேமிங் போட்டியை அறிவித்துள்ளன. இந்த போட்டியானது 70 நாட்கள் நடைபெறும் என கூறப்படுகிறது.
ஆன்லைன் போட்டி
கேமிங் மாஸ்ட்ர் என்ற ஆன்லைன் போட்டிக்கான முன்பதிவு ஜனவரி 9 வரை நடக்கிறது. இந்த போட்டியானது ஜனவரி 13 ஆம் தேதி தொடங்கி மார்ச் 7, 2021 வரை நடக்கும் என கூறப்படுகிறது. கேமிங் மாஸ்டர்ஸ் போட்டியானது ஜியோ மற்றும் மீடியாடெக்கின் ஆரம்ப முயற்சியே ஆகும்.
ஆன்லைன் கேமிங்கில் புரட்சி ஏற்படுத்தும்
ரிலையன்ஸ் ஜியோ கருத்துப்படி இந்த அறிவிப்பு ஆன்லைன் கேமிங்கில் புரட்சியை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் பங்கேற்பவர்களின் விளையாட்டு திறன் உள்ளிட்டவைகளை அதிகரிக்கும். இந்த போட்டியின் வெற்றியாளர்களுக்கு ரூ.12,50,000 வரை பரிசுத் தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மிகவும் பிரபலமடைந்த விளையாட்டு
ஃப்ரீ ஃபயர் கொரோனா காலத்தில் மிகவும் பிரபலமடைந்த விளையாட்டாகும். கேமிங் மாஸ்டர்ஸ் போட்டியானது ஃப்ரீ ஃபயர் விளையாட்டு போட்டியாகும். இது ஃப்ரீ ஃபயரில் சிறந்த விளையாட்டு அனுபவம் கொண்டவர்களுக்கு சிறந்த வாய்ப்பாகும்.
டோர்னமென்ட் முன்பதிவு
இந்த விளையாட்டில் பங்கேற்க ஆர்வமுள்ளவர்கள் ஜியோ கேம்ஸ் பிளாட்மார்மில் எஸ்போர்ட்ஸ் டோர்னமென்ட்டை பதிவு செய்யலாம். அதேபோல் இந்த போட்டியல் பங்கேற்பதற்கு பதிவுக் கட்டணமோ அல்லது பங்கேற்பு கட்டணமோ இல்லை என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.
ஜியோ அல்லாத பயனர்களும் பங்கேற்கலாம்
ஜியோ கேம்ஸ் நடத்தும் இந்த போட்டியில் ஜியோ அல்லாத பயனர்களும் பங்கேற்கலாம் என கூறப்படுகிறது. அதேபோல் இந்த முழு டோர்னமென்டும் ஜியோடிவியின் எச்டி எஸ்போட்ஸ் மற்றும் யூடியூப்பில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படும் என ஜியோ தரப்பில் கூறப்படுகிறது.
முன்னதாக நடந்த க்ளாஷ் ராயல் போட்டி
முன்னதாக டெவலப்பர் சூப்பர்செல்லுடன் இணைந்து ஜியோகேம்ஸ் க்ளாஷ் ராயல் போட்டி நடத்தியது. இந்த போட்டி 27 நாட்கள் நடந்தது. க்ளாஷ் ராயல் போட்டி என்பது இலவச மல்டிபிளேயர் விளையாட்டாகும். சூப்பர்செல்லின் பிரபலமான மொபைல் கேம்களில் இதுவும் ஒன்று.
இந்தியா கா கேமிங் சாம்பியன்
க்ளாஷ் ராயல் போட்டியில் வெற்றி பெறும் வாடிக்கையாளர்களுக்கு "இந்தியா கா கேமிங் சாம்பியன்" என்ற பட்டமும், ரொக்க பரிசும் வழங்கப்பட்டது. அதுமட்டுமின்றி வாராந்திர பரிசுகளும் வழங்கப்பட்டது. இந்தியா கா சாம்பியனுக்கு பிறகு கேமிங் மாஸ்டர்ஸ் போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக