Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 3 டிசம்பர், 2020

மீண்டும் 2000 ரூபாய் நோட்டுக்கு இப்படியொரு சிக்கலா? இனி ATMல் 2000 ரூபாய் நோட்டு வராதா?

அதிரடி நடவடிக்கை

இனி ஏடிஎம்களில் 2000 ரூபாய் நோட்டு வராது என்ற தகவல் தற்பொழுது வங்கிகள் மூலம் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று அதிரடியாக அறிவிக்கப்பட்டது. ஆனால், அதற்குப் பதிலாக புதிய வடிவ ரூ.500 நோட்டுகளுடன் 2000 ரூபாய் நோட்டுகள் முதல் முறையாக அறிமுகம் செய்யப்பட்டது. இந்த சம்பவத்தை யாரும் மறந்திருக்க முடியாது.

அதிரடி நடவடிக்கை

குறிப்பாகக் கருப்புப் பணப் புழக்கத்தையும், கள்ள நோட்டுப் புழக்கத்தையும் அடியோடு ஒழிக்கும் முயற்சியாக இந்த நடவடிக்கை அதிரடியாக எடுக்கப்பட்டது என்று மத்திய மோடி அரசு கூறிக்கொண்டது. ஆனால், இந்த அதிரடி நடவடிக்கைக்குப் பிறகு தான் கள்ள நோட்டுப் புழக்கமும், கருப்புப் பணமும் அதிகரித்தது. கருப்புப் பணத்தைப் பதுக்க விரும்பியவர்கள் 2000 ரூபாய் நோட்டுகளை அருமையாகப் பயன்படுத்திக்கொண்டனர் என்பதே உண்மை.

2000 ரூபாய் நோட்டுகளின் புழக்கம் நிறுத்தம்

இதனால், 2000 ரூபாய் நோட்டுகளின் புழக்கத்தை நிறுத்த ரிசர்வ் வங்கி முடிவெடுத்தது. 2000 ரூபாய் நோட்டுகளை அச்சிடும் பணியும் ரிசர்வ் வங்கி நிறுத்தியது. வங்கிகளும் 2000 ரூபாய் நோட்டுகளை விநியோகிப்பதைக் கட்டுப்படுத்தியது. செண்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி தனது 58 ஏடிஎம்களில் 2000 ரூபாய் நோட்டுகளை தடை செய்துள்ளது. ஏரளமான பிற வங்கி ஏடிஎம் இயந்திரங்களிலும் 2000 ரூபாய் நோட்டுகள் நிறுத்தப்பட்டுள்ளது.

இனி 2000 ரூபாய் நோட்டு ATMல் வராது

யூனியன் வங்கியும் 2000 ரூபாய் நோட்டுகளை நிறுத்திவிட்டு, அதன் பயனர்களுக்கு வெறும் 500, 100, 200 ரூபாய் நோட்டுகளை வழங்கிவருகிறது. அதேபோல, மற்ற வங்கிகளும் ரூ.500, ரூ.200, ரூ.100 ஆகிய நோட்டுகளையே வழங்கி வருகின்றது. ரிசர்வ் வங்கியிடமிருந்து வங்கிகளுக்கே இப்பொழுது 2000 ரூபாய் நோட்டுகள் வருவதில்லை என்று வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2000 ரூபாய் நோட்டுகளை முற்றிலுமாக நிறுத்தும் வங்கிகள்

பஞ்சாப் நேஷனல் வங்கியும் கூட தனது 100 ஏடிஎம் மையங்களில் 2000 ரூபாய் நோட்டுகளை நிறுத்தியுள்ளது. அதேபோல், அதிக பயனர்களை கொண்ட ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்திய வங்கியும் தனது 220 ஏடிஎம் மையங்களில் 2000 ரூபாய் நோட்டுகளை முற்றிலுமாக நிறுத்தியுள்ளது. விரைவில் மற்ற வங்கிகளிலும் 2000 ரூபாய் நோட்டுகளின் புழக்கத்தை முற்றிலுமாக நிறுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


 குறிப்பு: படங்கள் அனைத்தும்  மாதிரிக்காக / உதாரணத்திற்காக கூகிளில் இருந்து எடுத்து வழங்கப்படுபவையே 
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்

 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக