Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

வியாழன், 31 டிசம்பர், 2020

2020 டாப் ஸ்மார்ட்போன்கள் பட்டியல் இதோ: எல்லாமே உயர்தர அம்சங்கள்!

பிரதான தேவையாக மாறிய ஸ்மார்ட்போன்

மற்ற ஆண்டுகளை போல் இந்த ஆண்டு அமையவில்லை என்றே கூறலாம். கொரோனா தாக்கம் உலக நாடுகளை ஒரு உலுக்கு உலுக்கியது. பல்வேறு தொழில்களும் முடங்கிய நிலை ஏற்பட்டது. இருப்பினும் ஸ்மார்ட்போன்களும், அதில் புகுத்தப்படும் புதுவித அம்சங்களும் பஞ்சமில்லாமல் இருக்கும் வகையில் அமைந்தது

அதிகரிக்கும் ஸ்மார்ட்போன்கள் விற்பனை

2019 ஆம் ஆண்டில் மட்டும் மொத்தம் 152.5 மில்லியன் ஸ்மார்ட்போன்கள் விற்பனை ஆகின. 2018 ஆம் ஆண்டை ஒப்பிடும்போது 2019 ஆம் ஆண்டில் மட்டும் விற்பனை விகிதம் 8 சதவீதம் அதிகமாகும். அதேபோல் 2020 ஆம் ஆண்டிலும் விற்பனை பஞ்சமில்லாமல் இருந்தது.

பிரதான தேவையாக மாறிய ஸ்மார்ட்போன்

2020 ஆம் ஆண்டு கொரோனா ஊரடங்கு காரணமாக ஸ்மார்ட்போன்கள் சந்தை சற்று மந்தநிலையிலேயே இருந்தது என்றே கூறலாம். ஆனால் கொரோனா பூட்டுதல் காரணமாக ஆன்லைன் வகுப்பு, வீட்டில் இருந்தே வேலை, பொழுதுபோக்கு தேவைக்கு என பல்வேறு பயன்பாட்டுக்கு ஸ்மார்ட்போன்கள் பிரதானமாக இருந்தது.

விற்பனை அதிகரிப்பு

2020 ஆம் ஆண்டின் முற்பகுதியில் ஸ்மார்ட்போன்கள் விற்பனையில் சற்று மந்தநிலையில் காணப்பட்டாலும். ஆண்டின் பிற்பகுதியில் ஸ்மார்ட்போன்கள் விற்பனை அமோகமாக இருந்தது. அதன்படி இந்தாண்டு சிறந்த ஸ்மார்ட்போன்கள் பட்டியல் குறித்து பார்க்கலாம்.

சாம்சங் கேலக்ஸி எஸ்20, எஸ்20 ப்ளஸ்

சாம்சங் கேலக்ஸி எஸ்20, எஸ்20 ப்ளஸ் ஸ்மார்ட்போன் சிறந்த உயர்தர அம்சங்களை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனானது 8 ஜிபி ரேம் மற்றும் 12 ஜிபி ரேம் என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதில் 128 ஜிபி சேமிப்பு வசதி, 12 எம்பி, 64 எம்பி, 12 எம்பி என மூன்று கேமராக்கள் உள்ளது

ஒன்பிளஸ் 8 ப்ரோ ஸ்மார்ட்போன்

ஒன்பிளஸ் 8 ப்ரோ ஸ்மார்ட்போனும் பல்வேறு சிறந்த உயர்தர அம்சங்களை கொண்டுள்ளது என்றே கூறலாம். இதில் 48 எம்பி, 48 எம்பி, 5 எம்பி, 8 எம்பி என நான்கு கேமராக்கள் இருக்கிறது. அதேபோல் இது 8ஜிபி மற்றும் 12ஜிபி என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது.

ஐபோன் 12 மினி மற்றும் ஐபோன் 12

ஐபோன் 12 மினி மற்றும் ஐபோன் 12 ஆகிய இரண்டு ஐபோன் மாடல்களும் சிறந்தவையாக உள்ளது. இது 4ஜிபி ரேம், இரட்டை 12 எம்பி கேமரா, 12 எம்பி செல்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஐபோனானது 64ஜிபி, 128ஜிபி, 256ஜிபி என மூன்று சேமிப்பு வேரியண்ட்களில் கிடைக்கிறது.

ஓப்போ ஃபைன்ட் எக்ஸ்2 ப்ரோ ஸ்மார்ட்போன்

அதேபோல் ஓப்போ ஃபைன்ட் எக்ஸ்2 ப்ரோ சிறந்த மாடலாக இருக்கிறது. உயர்தர அம்சங்களோடு ஸ்மார்ட்போன் வாங்க திட்டமிட்டிருந்த ஓப்போ வாடிக்கையாளர்களுக்கு இது சிறந்த தேர்வாக அமைந்தது. இந்த ஸ்மார்ட்போன் 12ஜிபி ரேம், 48 எம்பி, 13 எம்பி, 48 எம்பி என மூன்று கேமராக்கள் உள்ளது. அதோடு இதில் 32 எம்பி செல்பி கேமராவும், 4250 எம்ஏஎச் பேட்டரியும் பொருத்தப்பட்டுள்ளது.

ஐபோன் 12 ப்ரோ, ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ்

ஐபோன் 12 ப்ரோ, ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் மாடல்கள் சிறந்த முன்னணி மாடலாகும். இது 6 ஜிபி ரேம், மூன்று 12 எம்பி கேமராக்களுடன் வருகிறது. இதில் முன்புறத்தில் 12 எம்பி கேமரா, 128 ஜிபி, 256 ஜிபி, 512 ஜிபி என மூன்று சேமிப்பு வேரியண்ட்களில் கிடைக்கிறது.

 குறிப்பு: படங்கள் அனைத்தும்  மாதிரிக்காக / உதாரணத்திற்காக கூகிளில் இருந்து எடுத்து வழங்கப்படுபவையே 
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக