Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

செவ்வாய், 15 டிசம்பர், 2020

ஓஹோ இதுதான் காரணமா?- 2020-ல் முக்கிய பங்களித்த வீடியோ காலிங் செயலிகள்: எது சிறந்தது தெரியுமா?

Virtual meetings: Tech giants in a race to provide best video call  experience - The Financial Express

வீடியோ காலிங் செயலிகள் 2020 ஆம் ஆண்டில் மிகவும் பிரபலமடைந்து வருகிறது. அதற்கான காரணத்தையும், சிறந்த வீடியோ காலிங் செயலிகளின் பட்டியல் குறித்தும் பார்க்கலாம்.

வீடியோ கான்பரன்சிங் செயலிகள்

வீடியோ கான்பரன்சிங் செயலிகள் பல ஆண்டுகளாக பயன்பாட்டில் இருந்தாலும் இந்தாண்டு மிகவும் பிரபலமடைந்தது என்றே கூறலாம். காரணம் கொரோனா பூட்டுதல். கொரோனா ஊரடங்கின் காரணமாக பல்வேறு நிறுவனங்களும் தங்களது ஊழியர்களை வீட்டில் இருந்தே பணியாற்றும் அறிவுறுத்தியது.

ஆன்லைன் மூலம் மேற்கொள்ளப்படும் பணிகள்

வீட்டில் இருந்தே பணியாற்றும்போது அவர்களது மீட்டிங் ஆன்லைன் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதேபோல் பள்ளிகள் மூடும் நிலை ஏற்பட்டதன் காரணமாக ஆசிரியர்கள் மாணவர்களுக்கான வகுப்புகளை ஆன்லைனில் எடுத்து வருகின்றனர்.

அரசியல் கட்சிகளும் ஆன்லைன் நேர்காணல்

அதுமட்டுமின்றி அரசியல் கட்சிகளும் தங்களது நேர்காணல்களை ஆன்லைனில்தான் நடத்தி வருகின்றனர். இதன்காரணமாகவே 2020 ஆம் ஆண்டில் வீடியோ காண்பிரன்சிங் செயலி பிரதான பயன்பாடாக மாறி வருகிறது. இனி வரும் காலங்களிலும் வீடியோ காண்பிரன்சிங் செயலி பிரதான தேவையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜூம் செயலி, கூகுள் மீட், ஜியோ மீட்

வீடியோ கான்பரன்சிங் செயலிகள் பிரபலமடைந்ததையடுத்து பல்வேறு நிறுவனங்களும் போட்டிப் போட்டுக் கொண்டு தங்களது வீடியோ கால் செயலியை அறிமுகப்படுத்தியும், மேம்படுத்தியும் வருகின்றன. இதில் ஜூம் செயலி, கூகுள் மீட், ஜியோ மீட் போன்ற பயன்பாடுகள் குறித்து பார்க்கலாம்.

பிரபலமடைந்த செயலிகளில் ஜூம்

கொரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நாளில் இருந்து மிகவும் பிரபலமடைந்த செயலிகளில் ஜூம் செயலி ஒன்று. ஜூம் செயலியானது வணிக தேவைகளுக்கும், ஆன்லைன் வகுப்புகள் என பலவற்றுக்கு பிரதான பயன்பாடானது. இந்த செயலியானது பாதுகாப்பான தளம் அல்ல இந்திய அரசு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ஜூம் செயலி பாதுகாப்பானது அல்ல

ஜூம் செயலியைப் பயன்படுத்தி 5 லட்சம் கணக்குகள் ஹேக்கர்களால் திருடப்பட்டுள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியானது. இதைத் தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சகம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதன்படி ஜூம் செயலி பாதுகாப்பானது அல்ல என்றும் இதனை யாரும் பயன்படுத்த வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டது. அதேபோல் ஜூம் செயலி குறித்து பல்வேறு புகார்களும் எழுந்தன.

Messenger வீடியோ காலிங் செயலி

Messenger வீடியோ காலிங் பேஸ்புக் தனது சாட்டிங் செயலியான Messenger-ல் வீடியோ காலிங் வசதிக்கான புதிய அப்டேட் ஒன்றை வழங்கியுள்ளது. மெசென்ஜரை அப்டேட் செய்த பின் வீடியோ கான்ஃபரன்ஸிங் செய்வதற்கான வசதி இதில் இருக்கும் என அறிவிக்கப்பட்டது.

8 பேர் வரை கனெக்ட் செய்யலாம்

அதேபோல் வாட்ஸ் ஆப் செயலியும் தங்களது வீடியோ கால் சேவையை பல்வேறு அம்சங்களோடு அப்டேட் செய்தது, முன்னதாக வாட்ஸ் ஆப் சேவையில் நான்கு பேர் மட்டுமே வீடியோ கால் பேசலாம் என்று இருந்த நிலையில் இதை 8 பேர் வரை கனெக்ட் செய்யலாம் என அறிவிக்கப்பட்டது.

100 பேர் வரை பங்கேற்கலாம்

ஒரு கான்ஃபிரென்சில் 100 பேர் வரை பங்கேற்கலாம். அதேபோல் ஜூம் செயலியில் சப்ஸ்கிரைப் செய்திருந்தால் மட்டுமே 40 நிமிடங்களுக்கு மேல் பேசலாம். ஆனால் கூகுள் மீட்-ல் 60 நிமிடங்கள் வரை மீட்டிங் செய்யலாம் என அறிவிக்கப்பட்டது. இந்த பயன்பாட்டை அனைவரும் இணையம், ஆண்ட்ராய்டு செயலி, ஐஓஎஸ் போன்ற அனைத்து பயன்பாட்டின் வழியாக இந்த இலவச வீடியோ அழைப்பை மேற்கொள்ளலாம்.

வீடியோ கால் செயலிகள்

பல வீயோ கான்பிரன்சிங் செயலிகள் பிரபலமடைந்ததோடு 2020 ஆம் ஆண்டில் தவிர்க்க முடியாத தேவையாக மாறியிருக்கிறது வீடியோ கால் செயலிகள். இனி வரும் காலங்களிலும் வீடியோ கான்பிரன்சிங் சேவை தவிர்க்க முடியாத தேவையாக மாறும் என்பதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. 


 குறிப்பு: படங்கள் அனைத்தும்  மாதிரிக்காக / உதாரணத்திற்காக கூகிளில் இருந்து எடுத்து வழங்கப்படுபவையே 
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!