Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

செவ்வாய், 15 டிசம்பர், 2020

ஆபாசப்பட வலைத்தளங்களுக்கு பணம் செலுத்துவதை நிறுத்தும் Mastercard மற்றும் Visa.!

ஆபாசப்பட வலைத்தளங்களுக்கு பணம் செலுத்துவதை நிறுத்தும் Mastercard.!

நியூயோர்க் டைம்ஸ் அறிக்கையின்படி ஆபாசப்பட ( பார்ன் ஹப்) வலைத்தளங்களுக்கு பணம் செலுத்த ஆயளவநசஉயசன மற்றும் ஏளைய உள்ளிட்ட கார்டுகள் அனுமதிக்காது எனத் தெரிவிக்கப்பட்டள்ளது. எனவே மாஸ்டர் கார்டு பயன்படுத்தி இதுபோன்ற ஆபாசப்பட தளங்களுக்கு பணம் செலுத்த முடியாது.

அதாவது சில மாதங்களுக்கு முன்பு ஆபாசப்பட வலைத்தளங்களுக்கு பணம் செலுத்தும் வசதிக்கு கிரெடிட் கார்டு நிறுவனங்கள் தடை விதிக்க வேண்டும் என சர்வதேச பிரசாரக்குழு ஒன்று அழைப்பு விடுத்துள்ளது.

குறிப்பாக பாலியல் சுரண்டல்களை தடுக்கும் பணியில் தாங்கள் ஈடுபட்டுள்ளதாக அந்தப் பிராசக்குழு கூறுக்கொள்கிறது. இதுதொடர்பான கடிதத்தில் இதே போன்ற 10 பிரசார குழுக்கள் கையெழுத்திட்டுள்ளன.

அதேபோல் குழுந்தைகள் மீதான பாலியல் தாக்குதல் மற்றும் தொழிலுக்காக குழந்தைகள் கடத்தப்படுவது உள்ளிட்ட பாலியல் வன்முறை மற்றும் இனவாத காட்சிகளை ஆபாச வலைத்தளங்கள் காட்சிப்படுத்துவதாக அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இதற்கு பதிலளித்துள்ள பிரபல ஆபாசப்பட வலைத்தளமான பார்ன் ஹப், இந்தக்கடிதம் தவறாக இருப்ப மட்டுமல்லாமல், இதில் தவறாக வழிநடத்தும்படியான விஷயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

ஏற்கனவே மாஸ்டர்கார்டு நிறுவனம் தங்கள் கிரெடிட் கார்டுகளை வைத்திருப்பவர்கள் யாரேனும் சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபடுவது தெரியவந்தால், அவருக்கான கிரெடிட் கார்டு சேவை நிறுத்தப்படும் என்றும் தெரிவித்தது.


இந்த நிலையில் பார்ன் ஹப் போன்ற ஆபாசப்பட தளங்களுக்கு மாஸ்டர் கார்டு மற்றும் ஏளைய கார்டுகள் பயன்படுத்த கண்டிப்பாக அனுமதிக்காது என அண்மையில் தெரிவித்துள்ளன.

இந்தியாவில் இருந்து பார்ன் சைட்டுகளுக்கு போக்குவரத்து குறைந்து வருவதன் முக்கிய காரணம் ஓரளவு இந்திய ஆபாச தளங்களுக்கான அணுகலை இந்திய அரசு தடைசெய்ததுதான் என்று வலைத்தளம் தெரிவித்துள்ளது. 2017 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் பார்ன் சைட்டிற்கு அதிக இணையபோக்குவரத்தை வழங்கிய நாடுகளில் இந்தியா மூன்றாம் இடத்தைப் பிடித்தது.

அக்டோபர் 27, 2018 இல், ஆபாச அணுகல்களை வழங்கும் 827 வலைதளங்களை தடை செய்யுமாறு அரசாங்கத்தின் தொலைத் தொடர்புத் துறை இணைய சேவை வழங்குநர்களிடம் கூறியது. அதன்பின், டெஹ்ராடூனில் நடந்த ஒரு பாலியல் வன்புணர்வு வழக்கின் விசாரணையில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் தங்கள் மொபைலில் ஆபாச காட்சிகளை காட்டியதன் அடிப்படையில் இந்த தடை விதிக்கப்பட்டது.


 குறிப்பு: படங்கள் அனைத்தும்  மாதிரிக்காக / உதாரணத்திற்காக கூகிளில் இருந்து எடுத்து வழங்கப்படுபவையே 
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!