ஒப்போ நிறுவனம் தனது ஒப்போ ரெனோ 5 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் மாடல் விரைவில் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது இந்த சாதனத்தின் முழு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.
ஒப்போ ரெனோ 5 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் ஆனது 6.55-இன்ச் எப்எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 1080 × 2400 பிக்சல் தீர்மானம், 90Hz refresh rate மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு இந்த சாதனம் வெளிவந்துள்ளது.
குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் மென்பொருள் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அதன்படி ஸ்னாப்டிராகன் 665 சிப்செட் வசதி இவற்றுள் அடக்கம். மேலும் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.
ஒப்போ ரெனோ 5 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போனின் பின்புறம் 50எம்பி Sony IMX766 பிரைமரி சென்சார் + 16எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 13எம்பி டெலிபோட்டோ லென்ஸ் + 2எம்பி மேக்ரோ லென்ஸ் என மொத்தம் நான்கு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அதேபோல் 32எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் என பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.
ஒப்போ ரெனோ 5 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போனில் 8ஜிபி/12ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். அதாவது மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்படும்.
இந்த ஸ்மார்ட்போனில் 4500 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது, எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. பின்பு 65 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.
5ஜி SA/ NSA, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11 ஏசி,புளூடூத் 5, ஜிபிஎஸ், என்எப்சி, டூயல் சிம், யுஎஸ்பி டைப்-சி போர்ட், உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் அடக்கம். மேலும் Galaxy Into a Dream மற்றும் Floating Night Light Shadow நிறங்களில் இந்த சாதனம் கிடைக்கும்.
குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை (இந்திய மதிப்பில்) ரூ.45,400-ஆக உள்ளது. மேலும் இதன் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ஒப்போ நிறுவனம்.
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக