Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

சனி, 26 டிசம்பர், 2020

செஞ்சடையப்பர் கோவில் - திருப்பனந்தாள்

 Aruna Jadewswarar Temple : Aruna Jadewswarar Aruna Jadewswarar Temple  Details | Aruna Jadewswarar - Tirupanandal | Tamilnadu Temple |  அருணஜடேசுவரர்

இறைவர் திருப்பெயர் : செஞ்சடையப்பர், தாலவனேஸ்வரர், அருணஜடேசுவரர்
இறைவியார் திருப்பெயர் : பிரஹந்நாயகி
தல மரம் : பனைமரம்
தீர்த்தம் : பிரம்ம தீர்த்தம்
வழிபட்டோர் : தாடகை, குங்குலியக்கலய நாயானர்
தேவாரப் பாடல்கள் : சம்பந்தர்,


தல வரலாறு:

இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 39 வது தேவாரத்தலம் ஆகும்.

அசுரகுல மகளான தாடகை என்பவள் (ராமாயணத்தில் வரும் தாடகை அல்ல) தினமும் பூமாலை ஏந்தி திருப்பனந்தாள் மூலவர் செஞ்சடையப்பரை வணங்கி வருகிறாள். ஒரு நாள் அவள் பூமாலையுடன் இறைவனை வணங்க வரும்போது அவளுடைய மேலாடை நழுவுகிறது. ஆடையைச் சரி செய்ய பூமாலையைக் கீழே வைக்க வேண்டும் இல்லாவிடில் மேலாடை சரிந்து நழுவி அவள் பலர் முன்னிலையில் மானம் இழக்க நேரிடும். இந்த நிலையில் அவளின் இறை வழிபாட்டை மெச்சி இறைவன் அவள் தனக்கு எளிதாக மாலை அணிவிக்கும் வகையில் தலை தாழ்த்திக் கொடுக்கிறார். இப்படி தாடகையின் பக்தியை உலகறியச் செய்த செஞ்சடையப்பர் குடி கொண்டிருக்கும் இத்தலம் தாடகைஈச்சரம் என்றே அழைக்கப்படுகிறது.

தாடகைக்காக தலை தாழ்த்திய பிறகு அரசன் முதலானோர் எவ்வளவோ முயன்றும் சிவபெருமானின் தலை நிமிரவில்லை. 63 நாயன்மார்களில் ஒருவரான குங்கிலியக் கலயர் வந்து இறைவன் சடைமுடிக்கும் தம் கழுத்திற்கும் கயிறு கட்டி இழுக்கிறார். இறைவனும் அவரின் தூய்மையான பக்திக்குக் கட்டுப்பட்டு தலை நிமிர்கிறார்.

குங்கிலியக் கலயரின் மகன் இறந்துவிட அந்த உடலை தகனம் செய்ய எடுத்துப் போகும் போது வழியில் உள்ள பிள்ளையார் வழி மறித்து நாக கன்னிகைத் தீர்த்தத்தில் தீர்த்தமாடி வீடு திரும்பச் சொல்கிறார். வீடு சென்ற பின் இறந்த மகன் உயிர் பெற்று எழுகிறான். இத்தகைய பெருமைகள் பெற்றது திருப்பனந்தாள் சிவஸ்தலம்.

இத்தல விநாயகர் ஆண்ட விநாயகர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார்.

கீழப்பெரும்பள்ளம், காளகஸ்தி, திருநாகேஸ்வரம் ஆகியவை ஆண் நாகம் வழிபாடு செய்த தலமாகும். திருப்பனந்தாள் பெண் நாகம் (நாககன்னி) வழிபாடுசெய்த தலமாகும். மிகவும் சக்தி வாய்ந்த துர்க்கை இங்கு அருள்பாலிக்கிறாள். இரண்டு ஆண் பனைமரங்கள் கோயில் பிரகாரத்தில் உள்ளன.

கோவில் அமைப்பு:

மேற்கு நோக்கி உள்ள செஞ்சடையப்பர் கோவிலின் வாயிலில் நீண்டுயர்ந்த கோபுரம் உள்ளது. உள்ளே நுழைந்ததும் 16 கால் மண்டபம் இருக்கிறது. இம்மண்டபத்தின் கீழ்ப்புறம் நாககன்னிகை தீர்த்தம் இருக்கிறது.

கோவிலின் வெளிப் பிரகாரத்தின் கீழ்ப் பக்கத்தில் ஸ்தல விருட்சம் பனைமரமும் அதன் அருகில் தாடகை வழிபட்ட சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப் பட்டிருக்கிறது.

மூலவர் செஞ்சடையப்ப்ர் சந்நிதி மேற்கு நோக்கி உள்ளது. இதற்கு வடக்கில் மேற்கு நோக்கிய பிரஹந்நாயகியின் சந்நிதி இருக்கிறது.


சிறப்புக்கள் :

சர்ப்பதோஷம், நாக தோஷம், செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் வழிபாடு செய்வது சிறப்பு.

குறிப்பாக பெண்களுக்கான தோஷ நிவர்த்தி தலம்.



போன்:
  

94431 16322, 99658 52734



அமைவிடம் மாநிலம் :

தமிழ் நாடு கும்பகோணம் - அணைக்கரை வழித்தடத்தில் கும்பகோணத்தில் இருந்து 18 கி.மி. தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது. கும்பகோணம் - மயிலாடுதுறை சாலை வழியிலுள்ள ஆடுதுறை அடைந்து அங்கிருந்தும் திருப்பனந்தாள் செல்ல சாலை வசதி உள்ளது. ஆடுதுறையில் இருந்து திருப்பனந்தாள் செல்லும் வழியில் திருமங்கலக்குடி தலத்தையும் தரிசிக்கலாம்.

இவ்வாலயம் காலை 7 மணி முதல் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8-30 மணி வரையிலும் திறந்திருக்கும்.

மிகவும் சக்தி வாய்ந்த துர்க்கை இங்கு அருள்பாலிக்கிறாள்

இத்தல விநாயகர் ஆண்ட விநாயகர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார்இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

 குறிப்பு: படங்கள் அனைத்தும்  மாதிரிக்காக / உதாரணத்திற்காக கூகிளில் இருந்து எடுத்து வழங்கப்படுபவையே 
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக