🌟 மீன ராசியின் அதிபதி தேவர்களின் குருவான பிரகஸ்பதி ஆவார். தேவர்களின் குருவான பிரகஸ்பதியுடன் சுக்கிரன் நட்பு என்ற நிலையில் உச்சம் பெற்று பலம் அடைவதால் செய்யும் சுப மற்றும் அசுப பலன்களை காண்போம்
🌟 தீர்க்கமான ஆயுள் பலம் உடையவர்கள்
🌟 இளைய சகோதரர்களின் மீது அதிக அன்பு கொண்டவர்கள்.
🌟 திட்டமிடாத செயல்களால் பலவிதமான தோல்விகளை சந்திக்கக்கூடியவர்கள்.
🌟 இவர்களின் செயல்பாடுகள் மற்றவர்களுக்கு சாதகமான பலன்களை அளிக்கும்.
🌟 போராட்ட குணம் உடையவர்கள்.
🌟 நிலையற்ற எண்ணங்களால் தீர்க்கமான முடிவு எடுக்க முடியாமல் திணறுவார்கள்.
🌟 தேவையற்ற வாக்குவாதங்களால் உடன் இருப்பவர்களை பகைத்துக்கொள்ள கூடியவர்கள்.
🌟 வாக்கு சுத்தம் இல்லாதவர்கள்.
🌟 சூழ்நிலைக்கு தகுந்த மாதிரி தனது நடவடிக்கைகளை மாற்றிக்கொள்ளும் குணம் உடையவர்கள்.
🌟 இவர்களுக்கு எண்ணிய செயல்களில் வெற்றி காண்பது என்பது அரிதான விஷயமாகும். ஆனால், முயற்சியை கைவிடாதவர்கள்.
🌟 எதிர்பாலின மக்களிடம் தன்னைப்பற்றி பெருமை பேசிக்கொள்வதில் அலாதி விருப்பம் உடையவர்கள். ஆனால், செயல்பாடுகள் அவ்விதம் அமையாது
🌟 ஆடம்பர செலவுகளால் கடன்களும், சில சமயங்களில் உடற்பாதிப்புகளையும் ஏற்படுத்திக்கொள்வார்கள்.
🌟 கிடைக்கும் நல்ல வாய்ப்புகளை காலதாமதமான முடிவுகளால் இழந்தபின் அதை நினைத்து வருந்தக்கூடியவர்கள்.
🌟 பொறுப்புகள் வகிப்பதில் விருப்பம் இல்லாதவர்கள். தனிமையை அதிகம் விரும்பக்கூடியவர்கள்.
🌟 சங்கீதம் சார்ந்த துறைகளில் விருப்பம் உடையவர்கள்.
🌟 சில கலைகளில் நுணுக்கமான விஷயங்களை நன்கு அறிந்தவர்கள்.
🌟 கற்பனை திறன் கொண்டவர்கள்.
🌟 எதிலும் திருப்தி அடையாதவர்கள்.
🌟 விளையாட்டு போட்டிகளில் ஆர்வம் உடையவர்கள்.
🌟 எதிர்ப்புகளையும், எதிரிகளையும் கொண்டவர்கள்.
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்ஆன்மிகமும் - ஜோதிடமும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக