---------------------------------------------------
இது சிரிப்பதற்கான நேரம்...!
-----------------------------------------------
அமலா : உன் புருஷன் உடம்புக்கு முடியாம படுத்த படுக்கையா கிடந்தாரே... இப்ப எப்படியிருக்காரு?
விமலா : ஏதோ பரவாயில்லை... காலை-ல எழுந்திரிச்சதும் காபி மட்டும் போட்டு தர்றாரு.
அமலா : 😆😆
-----------------------------------------------
கணவன் : அது என்ன கோல்டு சாம்பார்?
மனைவி : இதுல 24 கேரட் போட்டிருக்கு அதான்.
கணவன் : 😜😜
-----------------------------------------------
பாபு : தண்ணீல இருந்து ஏன் மின்சாரம் எடுக்குறாங்க?
கோபு : லூசு... அப்படி எடுக்கலைன்னா குளிக்கும்போது ஷாக் அடிச்சிரும்..
பாபு : 😐😐
-----------------------------------------------
பொன்மொழிகள்...!
-----------------------------------------------
கொஞ்சம் உன்னைச் சுற்றி பார் அற்புதம் பல உனக்குத் தெரியும்.
கொஞ்சம் உனக்குள்ளே பார் அனைத்திலும் அற்புதம் நீ என்று புரியும்.
உங்கள் உழைப்பிலேயே உண்ணப் பழகுங்கள்.
பிறருக்கு கற்றுக் கொடுப்பதே மேலும் கற்பதற்கான வழி.
வாழ்வும், தாழ்வும் சில காலம்.
உதவி கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன், அஞ்சாமல் செயலில் ஈடுபடு.
எங்கிருந்தாவது உதவி உன்னை வந்து சேரும். நம்பிக்கை இருந்தால், செயல் வெற்றி பெறும்.
-----------------------------------------------
தமிழாக்கம்...!!
-----------------------------------------------
ஜனநாயகம் - குடியாட்சி
ஜனம் - மாந்தர், மக்கள்
ஜனனம் - பிறப்பு
ஜாதகம் - பிறப்புக் குறிப்பு
ஜாலம் - வேடிக்கை
ஜூரம் - காய்ச்சல்
ஜோதி - ஒளி
ஜோடி - இணை
ஜோடித்தல் - அழகு செய்தல்
-----------------------------------------------
பழமொழி...!!
-----------------------------------------------
நீர்ல பார்த்தேன் உன் சீரை, உப்புல பார்த்தேன் உன் துப்பை.
விளக்கம் :
பொதுவாக இது புகுந்த வீட்டிற்கு செல்லும் பெண்களுக்கான பழமொழியாகும். அதாவது பெண்கள் புகுந்த வீட்டிற்கு எடுத்துச் செல்லும் சீர் என்பது நகையோ, பாத்திரங்களோ இல்லை. மாறாக பொறுப்பும், சிக்கன குணமும்தான். அதாவது நீரை எவ்வாறு செலவு செய்கிறார்கள் என்பதே அவர்களின் சிக்கன குணத்தை விளக்கும். மேலும் உப்பு என்பது ஒரு உயிர் நாடி போன்றது. அதனை பாதுகாக்கும், பயன்படுத்தும் மற்றும் கையாளும் முறையை வைத்து ஒரு பெண்ணின் குடும்ப நிர்வாகத் திறமையை (துப்பு) கண்டறியலாம்.
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்ரிலாக்ஸ் ப்ளீஸ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக