Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

சனி, 26 டிசம்பர், 2020

2021.. ஆங்கில வருட ராசிபலன்கள் - பாகம் 11

கொடுக்கும் வாக்கினை உயிருக்கு சமமாக மதிக்கும் சிம்ம ராசி அன்பர்களே..!!

நல்ல காற்றோட்டமுள்ள தண்ணீர் வசதி நிறைந்ததாக வீட்டை மாற்றுவீர்கள். சிலருக்கு பாசன வசதியுடன் கூடிய வீடு, மனை வாங்கும் யோகம் உண்டாகும். அயல்நாடு மற்றும் வெளியூர் தொடர்பான பயணங்கள் சாதகமாக அமையும். வர்த்தகம் தொடர்பான பணிகளில் பொருளாதார உயர்வு ஏற்படும்.

 

உத்தியோகஸ்தர்கள் :

உத்தியோகம் தொடர்பான பணிகளில் கடின உழைப்புக்கு உண்டான பலன்கள் சற்று காலதாமதமாகவே கிடைக்கப் பெறுவீர்கள். வயது மற்றும் பொறுப்புகளில் மூத்த உயரதிகாரிகளின் ஆலோசனைகள் முன்னேற்றத்திற்கான வழிகளை அமைக்கும்.

 

ஆரோக்கியம் :

உடல் ஆரோக்கியம் சார்ந்த செயல்பாடுகளில் மேன்மை உண்டாகும். உணவு சார்ந்த விஷயங்களில் கவனத்துடன் இருக்க வேண்டும். அவ்வப்போது தோலில் வறட்சி சார்ந்த பிரச்சனைகள் ஏற்பட்டு மறையும்.

 

திருமணம் :

எதிர்பார்த்திருந்த திருமண வரன்கள் சற்று காலதாமதமாகவே கிடைக்கப் பெறுவீர்கள். குடும்ப பெரியவர்களிடம் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. திருமணமான தம்பதிகளுக்கு இடையே சிறுசிறு வாக்குவாதங்கள் ஏற்பட்டாலும் ஒற்றுமை குறையாது.

 

வியாபாரிகள் :

கமிஷன் மற்றும் ஸ்டேஷனரி வகைகளால் லாபங்கள் மேம்படும். புதிய வாடிக்கையாளர்களின் அறிமுகமும், ஆதரவும் கிடைக்கப் பெறுவீர்கள். எண்ணெய் தொடர்பான வியாபாரத்தில் இருப்பவர்கள் சற்று கவனத்துடன் இருக்க வேண்டும்.

 

அரசியல்வாதிகள் :

நினைத்த இலக்கினை செய்து முடிக்க சற்று காலதாமதம் ஏற்படும். கட்சி நிமிர்த்தமாக உயரதிகாரிகளுடன் சிறுசிறு வாக்குவாதங்கள் ஏற்பட்டு மறையும். பொது வாழ்க்கை பற்றிய புரிதலும், புதிய கண்ணோட்டமும் ஏற்படும். வழக்கு சார்ந்த விஷயங்களில் சற்று பொறுமையுடன் செயல்படுவது அவசியமாகும்.

 

கலைஞர்கள் :

வித்தியாசமான மற்றும் புதுவிதமான சிந்தனைகளை மேம்படுத்தி கலை படைப்பு திறன்களை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவீர்கள். நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் சாதகமாக கிடைக்கப் பெறுவீர்கள்.

 

மாணவர்கள் :

அரசு தொடர்பான சலுகைகள் மற்றும் உதவிகள் கிடைக்கும். ஓவியம் மற்றும் இசை சார்ந்த போட்டிகளில் ஆர்வமும், ஈடுபாடும் அதிகரிக்கும். எதிர்பார்த்த இடத்தில் கல்வி கற்பதற்கான உதவிகள் கிடைக்கும்.

 

நன்மைகள் :

கிடைக்கும் சிறு வாய்ப்புகளின் மூலம் தொழில் சார்ந்த முயற்சிகளில் எதிர்பாராத முன்னேற்றத்தையும், முதலீடுகளையும் உருவாக்கிக்கொள்ள இருக்கக்கூடிய சிம்ம ராசி அன்பர்களுக்கு நித்ரா குழுமத்தின் நல்வாழ்த்துக்கள்.

 

கவனம் :

மனதில் அவ்வப்போது தோன்றும் தேவையற்ற பயமும் மற்றும் குழப்பத்தினால் செயல்பாடுகளில் கால விரயமும், புதிய முயற்சிகளில் காலதாமதமும் நேரிடும். ஆகவே, செயல்களின் தன்மைகளை அறிந்து செயல்படுவது நல்லது.

 

வழிபாடு :

வியாழக்கிழமைதோறும் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி மஞ்சள் நிற பூக்களால் அர்ச்சனை செய்து ஆஞ்சநேயரை வழிபாடு செய்து வர குடும்ப உறவுகளில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை உண்டாகும்.

 குறிப்பு: படங்கள் அனைத்தும்  மாதிரிக்காக / உதாரணத்திற்காக கூகிளில் இருந்து எடுத்து வழங்கப்படுபவையே 
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!