உங்களுக்கு பிடித்த ஒன்பிளஸ் தயாரிப்புகளை மனதைக் கவரும் விலையில் வாங்கக்கூடிய நேரம் இது. அதாவது ஒன்பிளஸ் நிறுவனம் 7 வது ஆண்டுவிழாவை கொண்டாடும் வகையில் அதன் சாதனங்களுக்கு சிறப்பு சலுகையை வழங்க உள்ளது. குறிப்பாக ஒன்பிளஸ் நிறுவனம் அறிவித்துள்ள சிறப்பு விற்பனையின் அதன் சாதனங்களை தள்ளுபடியில் வழங்க திட்டமிட்டுள்ளது.
சந்தைகளில் முதல் ஒன்பிளஸ் ஒன் சாதனம் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து இன்று வரை தனித்துவமான வளர்ச்சியைக் கண்டுள்ளது. அதேபோல் மற்ற நிறுவனங்களை விட ஒன்பிளஸ் நிறுவனம் சிறந்த ஸ்மார்ட்போன்களை உருவாக்கி விற்பனை செய்துவருகிறது. மேலும் தற்போது அனைத்து சந்தைகளிலும் நம்பர் 1 பிராண்டாக இருக்கிறது இந்த ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்கள். இந்திய சந்தைகளிலும் இதன் சாதனங்களுக்கு அதிக வரவேற்பு உள்ளது என்றுதான் கூறவேண்டும்.
5ஜி தொழில்நுட்ப வசதி கொண்ட ஒன்பிளஸ் நோர்ட் மற்றும் ஒன்பிளஸ் 8 தொடர் ஸ்மார்ட்போன்கள், ஒன்பிளஸ் புல்லட் வயர்லெஸ் இசட் மற்றும் ஒன்பிளஸ் பட்ஸ் இசட் ஹெட்ஃபோன்கள் மற்றும் புதிய தரங்களை கொண்ட ஒன்பிளஸ் ஸ்மார்ட் டிவி மாடல்கள் இந்திய சந்தையில் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. மேலும் இந்த சாதனங்கள் அனைத்து சிறந்த தொழில்நுட்ப வசதிகளுடன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஒன்பிளஸ் நிறுவனம் அதன் தனித்துவமான வளர்ச்சியின் பயனை அதன் சமூக உறுப்பினர்கள், ரசிகர்கள் மற்றும் தொழில்நுட்ப ஆர்வலர்கள் கொண்டாடும் வகையில் ஒரு சிறப்பு சலுகையை அறிவித்துள்ளது. இந்த சிறப்பு சலுகையின் மூலம் தள்ளுபடி விலையில் ஒன்பிளஸ் சாதனங்களை வாங்க முடியும் என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒன்பிளஸ் 7 வது ஆண்டு விற்பனையின் கீழ் வழங்கப்படும் ஒன்பிளஸ் தயாரிப்புகளின் அனைத்து சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள் பற்றிய விவரங்களை பார்ப்போம். இந்த சிறப்பு தள்ளுபடி ஆனது ஒன் பிளஸ்.இன் மற்றும் ஒன்ப்ளஸ் ஸ்டோர் போன்ற தளங்களில் பெறமுடியும் எனத் தகவல் வெளிவந்துள்ளது.
1. எச்டிஎஃப்சி கார்ட் பரிவர்த்தனைகள் மூலம் சாதனங்கள் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.2000 வரை உடனடி தள்ளுபடி கிடைக்கும்.
2. பஜாஜ் ஃபைனான்ஸ் லிமிடெட் மூலம் சாதனங்கள் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு எளிய வசதி இஎம்ஐ திட்டங்கள் ஆஃப்லைன் கடைகளில் கிடைக்கும்.
3. அதேபோல் ரெட் கேபிள் கிளப் உறுப்பினர்கள் எந்த ஒரு ஒன்பிளஸ் சாதனத்தையும் மேம்படுத்தும் முறையில் பழையதை எக்ஸ்சேஞ்ச் செய்யும்போது ரூ.3000 தள்ளுபடி பெறலாம்.
4. ஒன்பிளஸ் ஸ்டோர் ஆப் பயன்பாட்டில் ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்களை வாங்கும் பயனர்களுக்கு INR 500 தள்ளுபடி வவுச்சர் கிடைக்கும்.
5. அதேபோல் ஒனபிளஸ் பவர் பேங்க் மாடலை ரூ.777 என்ற சிறப்பு விலையில் வாங்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு அனைத்து ஒன்பிளஸ் ஆடியோ தயாரிப்புகளுக்கும் 10 சதவிகிதம் தள்ளுபடி கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
6. வாடிக்கையாளர்கள் ஒன்பிளஸ் புல்லட் வயர்லெஸில் 40% தள்ளுபடியும், ஒன்பிளஸ் புல்லட் வயர்லெஸ் 2 இல் 35% தள்ளுபடியும் பெறலாம்.
7. வாடிக்கையாளர்கள் டிசம்பர் 17 ஆம் தேதி ஒன்பிளஸ் ஸ்டோர் ஆப் பயன்பாட்டில் "ஸ்பின் தி வீல்" செயல்பாட்டை இயக்கலாம், இதன் மூலம் சிறப்பு பரிசுகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. பின்பு இதேபோல் ஒன்பிளஸ் ஸ்டோர் ஆப் பயன்பாட்டில் The Great OnePlus Lucky Dip-இல் பங்கேற்கலாம், இதன் மூலம் சிறப்பு பரிசுகளை பெறலாம்.
நீங்கள் ஏற்கனவே ஒன்பிளஸ் வாடிக்கையாளர் மற்றும் ரெட் கேபிள் கிளப்பின் உறுப்பினராக இருந்தால், பின்வரும் ஆண்டு சிறப்பு சலுகைகளைப் பெறலாம்:
சேவை மற்றும் அமேசான் பிரைமின் கூடுதல் 12 மாத complimentary membership 999 ரூபாய் தள்ளுபடி விலையில் கிடைக்கும்.
1.ரெட் கேபிள் உறுப்பினர்கள் ஒன்பிளஸ் சிறப்பு ஆண்டுவிழா லக்கி டிராவில் பங்கேற்கலாம் மற்றும் டிசம்பர் 17 அன்று அற்புதமான வெகுமதிகளை வெல்லலாம்
2.டிசம்பர் 17 ஆம் தேதி ஒன்பிளஸ் 8 மற்றும் ஒன்பிளஸ் 8 ப்ரோ, ஒன்பிளஸ் 8டி சாதனங்களை வாங்கும் பயனர்களுக்கு குறிப்பிட்ட சலுகைகள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது ஒன்பிளஸ் 3 முதல் ஒன்பிளஸ் 6 வரை வைத்திருக்கும் பயனர்கள் ஒருவேளை ஒன்பிளஸ் 8, ஒன்பிளஸ் 8 ப்ரோ, ஒன்பிளஸ் 8டி சாதனங்களை வாங்கினால் ரெட் கேபிள் மெம்பர் சிப் மற்றும் சிறப்பு சலுகைள் கிடைக்கும்.
3.மேலும் இதன் உறுப்பினர்கள் அமேசான் பிரைம்-இல் புதிய சந்தா திட்டங்களை தேர்வு செய்யலாம். அதுவும் சலுகை விலையில் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
4.குறிப்பாக இந்நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்களை ஒன்பிளஸ் ஸ்டோர்களில் வாங்கும் பயனர்களுக்கு ரூ.2499 மதிப்புள்ள Red Cable Pro membership ரூ.99 விலையில் கிடைக்கும்
5.ஒன்பிளஸ் ஸ்டோர் ஆப் பயன்பாட்டில் ஒன்பிளஸ் ஸ்மார்ட்போனை வாங்குவதன் மூலம் ரெட் கேபிள் புரோ உறுப்பினராக முடியும்.
மேலும், ஒன்பிளஸ் ஆஃப்லைன் வாடிக்கையாளர்களுக்கு அனைத்து அற்புதமான நன்மைகளையும் கிடைக்கும் என்று தெரிவிக்கபட்டுள்ளது. மேலும் குறிப்பாக ஆஃப்லைன் ஸ்டோர்களில் ஒன்பிளஸ் சாதனங்களை வாங்கும் பயனர்களுக்கும் சிறப்பு சலுகைகள் கிடைக்கும்.
1.டிசம்பர் 17 ஆம் தேதி ஒன்பிளஸ் எக்ஸ்பீரியன்ஸ் ஸ்டோரில் முதல் 10 ஒன்பிளஸ் 8 டி சாதனத்தை வாங்கும் பயனர்கள்INR 3000 accessories கூப்பனைப் பெறுவார்கள். இதேபோல் 11 முதல் 30 வது ஒன்பிளஸ் 8 டி வாடிக்கையாளர்கள், 30 முதல் 70 வது ஒன்பிளஸ் 8 டி வாடிக்கையாளர்கள் முறையே INR 2000 மற்றும் INR 500 accessories கூப்பன்களைப் பெறுவார்கள். இந்த கூப்பன்கள் வாங்கிய தேதிகளிலிருந்து ஒரு மாத காலத்திற்குள் மட்டுமே செல்லுபடியாகும்.
2.எச்டிஎஃப்சி கார்ட் பரிவர்த்தனைகள் மூலம் சாதனங்கள் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.2000 வரை உடனடி தள்ளுபடி கிடைக்கும்.
3.பஜாஜ் ஃபைனான்ஸ் லிமிடெட் மூலம் சாதனங்கள் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு எளிய வசதி இஎம்ஐ திட்டங்கள் ஆஃப்லைன் கடைகளில் கிடைக்கும்.
4.அதேபோல் ரெட் கேபிள் கிளப் உறுப்பினர்கள் எந்த ஒரு ஒன்பிளஸ் சாதனத்தையும் மேம்படுத்தும் முறையில் பழையதை எக்ஸ்சேஞ்ச் செய்யும்போது ரூ.3000 தள்ளுபடி பெறலாம்.
5.டிசம்பர் 17 ஆம் தேதி ஒன்பிளஸ் சேவை மையங்களில் ஸ்மார்ட்போன் உதிரி பாகங்களுக்கு 15% வரை தள்ளுபடி கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டள்ளது. மேலும் ஸ்மார்ட்போன் பழுதுபார்க்க சேவை கட்டணம் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட முதன்மை ஸ்மார்ட்போன்களான ஒன்பிளஸ் 8டி 5ஜி மற்றும் ஒன்பிளஸ் 8-சீரிஸ் வாங்குவதில் சிறப்பு தள்ளுபடியை வழங்குகிறது. அதுவும் அமேசான் வலைதளத்தில் எச்.டி.டிஃப்.சி வங்கி கார்டுகளை பயன்படுத்தி வாங்கினால் ரூ.2000 முதல் ரூ.3000 வரை தள்ளுபடி கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒன்பிளஸ் டிவியை வாங்க திட்டமிட்டிருந்தால் இது தான் சரியான நேரம் என்றே கூறலாம். அதாவது ஒன்பிளஸ் 7 வது ஆண்டுவிழா விற்பனையின் ஒரு பகுதியாக ஒன்பிளஸ் டிவி மாடல்களுக்கு சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
1.ஒன்பிளஸ் டிவி Y series 32 இன்ச் மற்றும் 43 இன்ச் மாடல்களுக்கு 1000 ரூபாய் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த சாதனங்களை 13,999 ரூபாய் மற்றும் 23,999 ரூபாயில் வாங்க முடியும்.
2.ஒன்பிளஸ் டிவிகளை வாங்கும் பயனர்கள் கவனத்திற்கு, எச்.டி.எஃப்.சி வங்கி கிரெடிட் கார்டு, கிரெடிட் கார்டு இ.எம்.ஐ, மற்றும் டெபிட் கார்டு இ.எம்.ஐ பரிவர்த்தனைகளில் 4000 ரூபாய் வரை தள்ளபடியை பெறமுடியும்.
3.ஒன்பிளஸ் டி.வி ஒய் சீரிஸை வாங்கும்போது வாடிக்கையாளர்கள் 6 மாதங்கள் வரை no-cost EMI வசதியை அனுபவிக்க முடியும்
மேலே கூறப்பட்டுள்ள சலுகைகள் வாடிக்கையாளர்களுக்கு ஒன்பிளஸ்.இன், ஒன்பிளஸ் ஸ்டோர் மற்றும் அமேசான், பிளிப்கார்ட் போன்ற சில தளங்களில் டிசம்பர் 2020 இறுதி வரை கிடைக்கும்.
ஒன்பிளஸ் நிறுவனம் அறிவித்துள்ள இந்த சிறப்பு சலுகையானது பல்வேறு மக்களுக்கும் பயனுள்ள வகையில் இருக்கும். அதேபோல் மற்ற நிறுவனங்களை விட சிறப்பான சாதனங்களை சலுகை விலையில் வழங்குவதன் மூலம் இந்நிறுவனம் அனைத்து இடங்களில் இன்னும் அதிக வரவேற்பை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த 2020-ம் ஆண்டு குறைவான சாதனங்களை இந்நிறுவனம் அறிமுகம் செய்தாலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
அதேபோல் இந்நிறுவனத்தின் தனித்துவமான ஸ்மார்ட்போன்கள் ஆப்பிள் ஐபோன்களை விட சிறப்பாக செயல்படுகிறது. மேலும் இந்நிறுவனத்தின் அனைத்து சாதனங்களுக்கும் அதிக இடங்களில் நல்ல வரவேற்பு உள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக