Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

செவ்வாய், 29 டிசம்பர், 2020

உயர்தர அம்சங்களோடு ஹூவாய் நோவா 8, நோவா 8 ப்ரோ அறிமுகம்: விலை என்ன தெரியுமா?

 ஹூவாய் நோவா 8 அம்சங்கள்

ஹூவாய் நிறுவனம் சீனாவில் இரண்டு புதிய ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. அது ஹூவாய் நோவா 8 மற்றும் ஹூவாய் நோவா 8 ப்ரோ ஆகும்.

ஹூவாய் நோவா 8 மற்றும் நோவா 8 ப்ரோ

ஹூவாய் நோவா 8 மற்றும் நோவா 8 ப்ரோ மாடல்கள் கருப்பு, பர்பிள் மற்றும் பச்சை வண்ண விருப்பங்களில் வருகிறது. சீனாவில் இந்த இரண்டு ஸ்மார்ட்போன் முன்பதிவுகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்த ஸ்மார்ட்போன்கள் டிசம்பர் 30 ஆம் தேதி முதல் விற்பனைக்கு வரும் என கூறப்படுகிறது.

ஹூவாய் நோவா 8 அம்சங்கள்

ஹூவாய் நோவா8 கேமரா அம்சங்கள் குறித்து பார்க்கையில் இதில் 64 மெகா பிக்சல் முதன்மை கேமரா, 8 மெகா பிக்சல் இரண்டாம் நிலை கேமரா, இரட்டை 2 மெகாபிக்சல் கேமரா இருக்கிறது. மேலும் முன்புறத்தில் 32 மெகாபிக்சல் செல்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

நோவோ 8 விலை விவரங்கள்

நோவோ8 8 ஜிபி + 128 ஜிபி விலை இந்திய மதிப்பின்படி சுமார் ரூ.37,300 ஆக உள்ளது. அதேபோல் 8ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி சேமிப்பு வேரியண்ட் விலை ரூ.41,800 ஆக இருக்கிறது. இதில் 3800 எம்ஏஎச் பேட்டரியுன் 66 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு இருக்கிறது.

ஹூவாய் நோவா 8 ப்ரோ

ஹூவாய் நோவா 8 ப்ரோ ஸ்மார்ட்போனானது 6.72 இன்ச் முழு எச்டி ப்ளஸ் ஓஎல்இடி டிஸ்ப்ளே இருக்கிறது. இதில் 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீத டிஸ்ப்ளே உள்ளது. முன்பக்கத்தில் இரட்டை பஞ்ச் ஹோல் கட்அவுட் அம்சம் இருக்கிறது. பாதுகாப்பு அம்சத்திற்கு இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார் உள்ளது.

ஹூவாய் நோவா8 ப்ரோ கேமரா அம்சங்கள்

ஹூவாய் நோவா8 ப்ரோ கேமரா அம்சங்கள் குறித்து பார்க்கையில் இதில் 64 மெகா பிக்சல் முதன்மை கேமரா, 8 மெகா பிக்சல் இரண்டாம் நிலை கேமரா, இரட்டை 2 மெகாபிக்சல் கேமரா இருக்கிறது. இதில் இரட்டை முன்புற கேமரா இருக்கிறது. அது 16 மெகாபிக்சல் மற்றும் 32 மெகாபிக்சல் செல்பி கேமரா ஆகும்.

ஹூவாய் நோவா 8 ப்ரோ விலை

ஹவாய் நோவா 8 ப்ரோ 8 ஜிபி + 128 ஜிபி மாடலின் விலை இந்திய மதிப்பின்படி சுமார் ரூ.45,200 ஆக உள்ளது. அதேபோல் 8ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி வேரியண்டின் விலை இந்திய மதிப்புப்படி சுமார் ரூ.49,700 ஆக உள்ளது. இதில் 4000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 66 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உள்ளது.

 குறிப்பு: படங்கள் அனைத்தும்  மாதிரிக்காக / உதாரணத்திற்காக கூகிளில் இருந்து எடுத்து வழங்கப்படுபவையே 
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக