ஸ்மார்ட்போன் துறையில், உற்பத்தியாளர்கள் ஒருவருக்கொருவர் மற்ற நிறுவனங்களைப் பற்றி கேலி செய்வது, கருத்துக்களை கூறுவது மற்றும் போட்டியை விட சிறந்த தீர்வாக தங்கள் தயாரிப்புகளை முன்வைக்க முயற்சிப்பது போன்ற செயல்கள் நடப்பது மிகவும் பொதுவானது தான். இந்த முறை, ஆப்பிள் நிறுவனத்தினை கலாய்த்த ஒன்பிளஸ் நிறுவனத்தை சியோமி செமையாக கலாய்த்து கதையின் ஹீரோவாக மாறியுள்ளது.
ஆப்பிளை கலாய்த்த ஒன்பிளஸ்..
இந்த கேலிக்கை போட்டியை இம்முறை முதன் முதலில் ஒன்பிளஸ் நிறுவனம் தான் துவங்கியுள்ளது. ஒன்பிளஸ் நிறுவனம் அதன் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போனை விளம்பரப்படுத்துவதன் மூலம் "ஆப்பிள் உலகில்" இருந்து முதலில் தனித்து நிற்குமாறு பயனர்களை அழைக்கும் ஒரு ட்வீட்-ஐ பதிவு செய்தது. இந்த பதிவில் பதிவிடப்பட்டிருந்த புகைப்படத்தில் பல 'ஆப்பிள்' பழங்களுக்கு நடுவில் ஒன்பிளஸின் புதிய ஸ்மார்ட்போன் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆப்பிள் பதிலளிக்கவில்லை.. ஆனால் என்ட்ரி கொடுத்த சியோமி
சுவாரஸ்யமாக, குபெர்டினோ நிறுவனமான ஆப்பிள் இந்த அவதூறுக்கு பதிலளிக்கவில்லை, ஆனால் எதிர்பார்க்காத வகையில் சியோமி இந்தியா ஒன்பிளஸின் கேலிக்கை பதிவிற்குப் பதிலடி கொடுத்துள்ளது. சியோமி நிறுவனம் தனது புதிய Mi 10T ப்ரோ ஸ்மார்ட்போனை ஒன்பிளஸ் ட்வீட் செய்த அதே பதிவில் விளம்பரப்படுத்தி, ஒன்பிளஸ் நிறுவனத்தை செமையாக கலாய்த்துள்ளது. இந்த செய்தி இப்பொழுது வைரல் ஆகிவருகிறது.
ஒன்பிளஸை கிண்டல் செய்த சியோமி..
ஒன்பிளஸ், ஆப்பிள் பற்றி கூறிய வார்த்தைகளின் மேல் சியோமி கருத்துத் தெரிவிக்கவில்லை, ஆனால், அதற்குப் பதிலாகத் தானாக முன்வந்து புதிய கேள்வியை எழுப்பி சந்து கேப்பில் பயனர்களை தன் வசம் இழுக்க முயற்சித்துள்ளது. சியோமி ட்வீட்டில் கூறியது, "But why settle for less when you can have more. New year. 108MP resolution'' என்று கூறியுள்ளது.
ஒன்பிளஸ் வாய்க்கு ஒரு பெரிய லாக்..
இதற்கான உண்மை அர்த்தம் என்னவென்றால், ''உங்களுக்கு அதிகமாகக் கிடைக்கும் பொழுது ஏன் நீங்கள் குறைவாகத் தீர்வை கையில் எடுக்க வேண்டும்'' என்று கூறி ''புதிய ஆண்டு 108MP தீர்மானத்துடன் துவங்கட்டும்" என்று ஒன்பிளஸ் நிறுவனத்தைக் கேலி செய்து, ஒன்பிளஸ் நிறுவனத்தின் வாய்க்கு ஒரு பெரிய லாக் போட்டுவிட்டது. சியோமி தனது புதிய சியோமி Mi 10T ப்ரோவின் படத்தைப் ட்வீட்டில் பயன்படுத்தியுள்ளது.
செட்டில்ஃபோர்பெட்டர் ஹேஷ்டேக்
சமீபத்தில் வெளியான சியோமியின் இந்த புதிய ஸ்மார்ட்போன், 108 மெகாபிக்சல் பிரைமரி கேமராவைக் கொண்டுள்ளது. கூடுதலாக, சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர் 'செட்டில்ஃபோர்பெட்டர் (SettleForBetter)' என்ற ஹேஷ்டேக்கையும் அந்த ட்வீட்டில் பயன்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இது ஒன்பிளஸின் மீது சியோமி நடத்திய மற்றொரு கேலிக்கை ஆகும், காரணம் ஒன்பிளஸ்சின் ஸ்லோகன் Never Settle என்பதாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக