------------------------------------------------
சிரிப்பு வெடிகள்...!
------------------------------------------------
ஒரு நாள் ஒருவர் கண்ணை மூடிக்கொண்டு கண்ணாடி முன்பு நின்றுகொண்டிருந்தார். அவரைப்பார்த்து அவர் மனைவி கேட்டாள்.
மனைவி : கண்ணாடி முன்னாடி கண்ண மூடிக்கிட்டு என்ன செய்றீங்க?
கணவன் : நான் தூங்கறப்ப எப்படி இருப்பேன்னு பாத்துகிட்டிருக்கேன்..
மனைவி : 😳😳
------------------------------------------------
விமல் : நேற்று ஒரு கல்யாணத்துக்கு போயிருந்தேன், ஜோடின்னா அப்படி ஒரு ஜோடி, என் லைப்ஃல பாத்ததேயில்லை. அப்படி ஒரு அழகு...
கமல் : அப்புறம்?
விமல் : அப்புறம் என்ன?... கால்ல மாட்டிட்டு வந்துட்டேன்!!
கமல் : 😝😝
------------------------------------------------
வாடிக்கையாளர் : கடலை எண்ணெய் என்ன விலைங்க?
கடைக்காரர் : நூத்தி இருபது ரூபாய்..
வாடிக்கையாளர் : எப்போ குறையும்?
கடைக்காரர் : அளந்து ஊத்தும்போதுதான்....
வாடிக்கையாளர் : 😏😏
------------------------------------------------
பொன்மொழிகள்...!
------------------------------------------------
🌟 உங்களை தள்ளி விட ஆயிரம் கைகள் வரும். ஆனால், உங்களை தாங்கி பிடித்துக் கொள்ள ஒரே ஒரு கை தான் வரும். அது உங்கள் தன்னம்பிக்கை மட்டுமே.
🌟 சொல்ல முடியாத சோகங்களும், நினைவுகளும் ஒவ்வொருவர் மனதிலும் உண்டு... யாரும் மறந்து வாழ்வதில்லை. மறைத்து தான் வாழ்கிறோம்.
🌟 தேவைக்கு அதிகமாக நினைவுகளையும், கடனையும் சேர்த்து வைக்காதீர்கள். தூக்கத்தை பறிகொடுத்து விடுவீர்கள்.
🌟 வேண்டாம் என்று தூக்கி எறியப்பட்ட விதை கூட மரமாக வளர்ந்து வருகிறது. உங்களை வேண்டாம் என்று தூக்கி எறிந்தவர் மத்தியில் இருந்து எழுந்து வாருங்கள்.
🌟 வாழ்க்கையில் பயத்தோடு வாழாமல் துணிவோடு வாழ்ந்து காட்டுங்கள். உங்களை வெல்ல யாரும் இல்லை.
🌟 அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்தும் முன் யோசிக்க மறந்துவிடாதே.
------------------------------------------------
அர்த்தங்கள் அறிவோம்..!
------------------------------------------------
நிமித்தியம் - காரணம், சகுனம்.
பெருவெள்ளை - ஒரு நெல் வகை.
பேடை - பெண் பறவை.
புந்தி - அறிவு, புதன், மனம்.
பட்டறை நிலம் - கிணற்றுப் பாசனமுள்ள நன்செய் நிலம்.
ரிலாக்ஸ் ப்ளீஸ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக