🌟 கம்பீரமான தோற்றத்தை உடையவர்கள்.
🌟 எதையும் நிதானமாக சிந்தித்து செயல்படக்கூடியவர்கள்.
🌟 இன வேறுபாடின்றி அனைவரிடமும் அனுசரித்துச் செல்லக்கூடியவர்கள்.
🌟 தகுதி அறிந்து உதவக்கூடியவர்கள். தன்னுடைய செயல்களை விளம்பரப்படுத்திக் கொள்வதில் விருப்பம் உடையவர்கள்.
🌟 தனது வருத்தங்களை வெளிக்காட்டாமல் என்றும் மகிழ்ச்சியாக இருப்பது போல் காட்டிக்கொள்பவர்கள்.
🌟 அறுசுவை உணவை ரசித்து, சுவைத்து உண்ணக்கூடியவர்கள். சுவை பிடித்துவிட்டால் கூச்சமின்றி மீண்டும் கேட்டு வாங்கி சாப்பிடக்கூடியவர்கள்.
🌟 ஆயுள் பலம் உடையவர்கள்.
🌟 தந்தையின் மீது மிகுந்த அன்பு கொண்டவர்கள்.
🌟 தந்தை வழி சொத்துக்கள் கிடைக்கப் பெற்றவர்கள்.
🌟 சமூகத்தில் மதிப்பும், மரியாதையுடனும் வாழக்கூடியவர்கள்.
🌟 தர்ம நியாயங்களுக்கு கட்டுப்பட்டு நடக்கக்கூடியவர்கள்.
🌟 தெய்வ காரியங்கள் மற்றும் திருப்பணிகளை செய்வதில் விருப்பம் உடையவர்கள்.
🌟 தனக்கு உதவியவர்களை என்றும் மறக்காமல் பிரதி உபகாரம் செய்யக்கூடியவர்கள்.
🌟 தொழில் திறமையும், பொருள் வல்லமையும் உடையவர்கள்.
🌟 அரசியல் ஆதரவு உடையவர்கள்.
🌟 பல செயல்களை ஒரே சமயத்தில் செய்யும் திறமை உடையவர்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக