Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

புதன், 30 டிசம்பர், 2020

நாளை முதல் திருத்தணி கோயிலுக்கு பக்தர்கள் வரத் தடை! மாவட்ட ஆட்சியர்

temple


நாளை முதல் ஜனவரி 3ஆம் தேதி வரை திருத்தணியை சுற்றி உள்ள கோயில்களுக்கு பக்தர்கள் வர தடை என அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

 

ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டு தினத்தில் பக்தர்கள் கோவில்களுக்கு சென்று வழிபாடு நடத்துவது வழக்கம். அந்த வகையில் நாளை நள்ளிரவு முதல் நாளை மறுநாள் இரவு வரை அனைத்து கோவில்களிலும் நல்ல கூட்டம் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது

 

இந்த நிலையில் கொரோனா வைரஸ் தற்போது வேகமாக பரவி வரும் நிலையில் குறிப்பாக பிரிட்டனிலிருந்து புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருவதால் பெரும் அச்சம் ஏற்பட்டுள்ள நிலையில் நாளை முதல் ஜனவரி 3ஆம் தேதி வரை திருத்தணி கோவிலுக்கு பக்தர்கள் வர தடை விதிக்கப்படுவதாக திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்

 

இதுகுறித்து அவர் மேலும் கூறியபோது, ‘நாளை முதல் ஜனவரி 3ஆம் தேதி வரை திருத்தணி முருகன் கோயில், சிறுவாபுரி பாலமுருகன் கோயில், பெரியபாளையம் பவானி அம்மன் கோயில், பழவேற்காடு கடற்கரை, பூண்டி நீர்த்தேக்கம் ஆகிய இடங்களுக்கு மக்கள் வர தடை விதிக்கப்படுவதாக திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்


 குறிப்பு: படங்கள் அனைத்தும்  மாதிரிக்காக / உதாரணத்திற்காக கூகிளில் இருந்து எடுத்து வழங்கப்படுபவையே 
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக