Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 30 டிசம்பர், 2020

ஆப்பிள் ஐபோனில் பேட்டரி ஆயுளை பாதுகாக்க எப்படி 5ஜி சேவையை ON அல்லது OFF செய்வது?

உங்கள் போனின் பேட்டரி வீணாகிறது

சமீபத்தில் வெளியான ஆப்பிள் ஐபோன் 12 சாதனத்தில் மிகவும் குறிப்பிடத்தக்க அம்சங்களில் ஒன்றாக அதன் 5ஜி அம்சம் பார்க்கப்படுகிறது. இருப்பினும் கூட, பல நேரங்களில் ஐபோன் பயனர்களுக்கு 5ஜி சேவை அனைத்து இடங்களிலும் கிடைப்பதில்லை.

உங்கள் போனின் பேட்டரி வீணாகிறது

5ஜி சேவை இல்லாமல் 4ஜி மட்டும் கிடைக்கும் இந்தியர்களுக்கு இந்த சேவை முற்றிலுமாக தேவையில்லை. ஆனாலும் கூட, உங்களுடைய போனில் இந்த அம்சம் ஆன் இல் இருந்தால், உங்கள் போனின் பேட்டரி வீணாகிறது, இதை எப்படி ஆஃப் செய்து உங்களின் பேட்டரியை பாதுகாப்பது என்று பார்க்கலாம்.

டர்போ-பூஸ்ட் 5ஜி சேவை

சமீபத்திய கணிப்பின்படி, நிலையான டர்போ-பூஸ்ட் 5ஜி சேவை பயன்படுத்தும் பொழுது, ஆப்பிள் ஐபோன் 12 பயனர்களின் பேட்டரி ஆயுள் விரைவாகக் குறைவது கண்டறியப்பட்டுள்ளது. அதிக வேகம் வேண்டும் என்று ஐபோன் 12 இல் 5ஜி பயன்படுத்தும் பொழுது நிச்சயமாக பேட்டரி கூடுதலாகத் தான் செலவாகிறது. அதிர்ஷ்டவசமாக, இதை கட்டுப்படுத்த ஆப்பிள் நிறுவனம் உங்களுக்கு ஒரு வழியில் அனுமதி வழங்குகிறது.

5 ஜி ஆன், 5 ஜி ஆட்டோ மற்றும் எல்டிஇ

உங்கள் ஐபோனில் 5ஜி சேவை உங்களுக்குத் தேவையில்லாதபோது அதை முடக்குவதற்கு ஆப்பிள் நிறுவனம் மிகவும் எளிதான 3 ஆப்ஷன்களை வழங்கியுள்ளது. 5 ஜி ஆன், 5 ஜி ஆட்டோ மற்றும் எல்டிஇ ஆகிய மூன்று விருப்பங்களை வழங்கியுள்ளது. எந்த நேரத்தில் இதில் உள்ள எந்த அம்சம் உங்களுக்குப் பயனுள்ளதாய் அமையும் என்றும், எந்த ஆப்ஷன் உங்கள் பேட்டரி ஆயுளை பாதுகாக்கும் என்பதையும் விளக்கமாகப் பார்க்கலாம்.

5ஜி OFF செய்து பயன்படுத்தப் பழகிக்கொள்ளுவது நல்லதா?

உங்களின் வழக்கமான இசை ஸ்ட்ரீமிங் மற்றும் சமூக வலைதள ஸ்க்ரோலிங்கிற்கு 5ஜி அவசியமில்லை, இவற்றை 4ஜி வேகத்தில் கூட நாம் இயல்பாகப் பயன்படுத்த முடியும். ஒரு முழு திரைப்படம் அல்லது ஒரு முழு சீசனில் உள்ள எபிசோட்களை பதிவிறக்கம் செய்ய நிச்சயமாக நமக்கு 5ஜி தேவைப்படும், மற்ற நேரங்களில் உங்களுக்கு இந்த மின்னல் வேக நெட்வொர்க் அம்சம் தேவையில்லை தான். ஆகையால் அதை OFF செய்து பயன்படுத்தப் பழகிக்கொள்ளுவது மிகவும் நல்லது.

எப்படி 5ஜி சேவையை ஆன் மற்றும் ஆஃப் செய்வது?

ஆப்பிள் ஐபோன் 12 சீரிஸ் சாதனங்களில் 5ஜி சேவையை ஆன் மற்றும் ஆஃப் செய்ய என்ன செய்யலாம் என்று தெரிந்துகொள்ளுங்கள்.

  • உங்களுடைய ஐபோன் Settings ஓபன் செய்யுங்கள்.
  • இப்போது Cellular Data Options கிளிக் செய்யுங்கள்.
  • பின்னர் Voice and Data கிளிக் செய்து உள்நுழையுங்கள்.
  • இப்பொழுது காண்பிக்கப்படும் ஆப்ஷன்களில் ஒன்றை தேர்வு செய்யுங்கள்.
  • 5G on கிளிக் செய்தால் உங்கள் போனில் 5ஜி சேவை ஆக்டிவேட் செய்யப்படும்.
  • 5G auto கிளிக் செய்தால், உங்கள் போனில் தேவைப்படும் நேரத்தில் 5ஜி தானாக இணைக்கப்படும்,தேவையில்லாத போது 5ஜி தானாக துண்டிக்கப்பட்டு பேட்டரியைச் சேமிக்க உதவும்.
  • LTE கிளிக் செய்தால் 4G LTE மட்டும் பயன்பாட்டில் இருக்கும்.

5G பேட்டரி சார்ஜ்ஜை வேகமாக குறைக்கும்

உங்கள் பேட்டரி பற்றி நீங்கள் அதிகம் அக்கறை கொண்டவராக இருந்தால், உங்களுக்கு தேவைப்படும் நேரத்தில் மட்டும் 5ஜி சேவையை பயன்படுத்திக்கொள்ளுங்கள். நீங்கள் 5G முழுவதுமாக பயன்படுத்துவது உங்கள் பேட்டரி சார்ஜ்ஜை வேகமாக குறைக்கும். தேவையில்லாத நேரத்தில் மேலே குறிப்பிட்டுள்ள முறைகளை பின்பற்றி 5ஜி சேவையை OFF செய்துகொள்ளுங்கள். இது உங்களின் பேட்டரி சார்ஜ்ஜை மிச்சம் பிடித்து, பேட்டரி ஆயுளை நீடித்து வழங்கும்.

 குறிப்பு: படங்கள் அனைத்தும்  மாதிரிக்காக / உதாரணத்திற்காக கூகிளில் இருந்து எடுத்து வழங்கப்படுபவையே 
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்

,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக