இந்தியாவில் எலக்ட்ரிக் கார் பயன்பாட்டுக்கும், தயாரிப்புக்கும் ஆதரவு அளிக்கப்பட்டு வரும் நிலையில், நாட்டில் பல முன்னணி நிறுவனங்கள் மலிவான விலையில் எலக்ட்ரிக் கார்களைத் தயாரிக்கும் பணியில் இறங்கியுள்ளது.
இதனால் எலக்ட்ரிக் வாகனங்களுக்கு இந்தியாவில் பெரிய வர்த்தகச் சந்தை உருவாக வாய்ப்பு உள்ளது. இந்நிலையில் உலகின் முன்னணி எலக்ட்ரிக் கார் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா இந்தியாவில் தனது விற்பனையைத் துவங்க உள்ளது.
மத்திய அமைச்சர் நித்தின் கட்கரி
உலகின் முன்னணி எலக்ட்ரிக் கார் தயாரிப்பு மற்றும் விற்பனை நிறுவனமான டெஸ்லா 2021ஆம் ஆண்டின் துவக்கத்திலேயே தனது பணிகளைத் துவங்க உள்ளதாக மத்திய சாலை மற்றும் நெடுஞ்சாலைத் துறை மற்றும் MSME துறை அமைச்சரான நித்தின் கட்கரி தெரிவித்துள்ளார்.
டெஸ்லா தொழிற்சாலை
டெஸ்லா அமெரிக்கா, சீனா, ஜெர்மனி ஆகிய நாடுகளில் தனது கார் தயாரிப்புக்காகத் தொழிற்சாலையை அமைத்துள்ள நிலையில், இந்தியாவில் ஆராய்ச்சி கூடம் அமைக்கத் திட்டமிட்டு இருந்தது.
ஆனால் முதற்கட்டமாக டெஸ்லாவிற்கான வர்த்தகச் சந்தையை உருவாக்க இந்தியாவில் நேரடியாகக் கார்களை விற்பனை செய்யவும் முடிவு செய்துள்ளது.
டெஸ்லா மாடல் 3 கார்
இதன் படி இந்தியாவில் டெஸ்லா தனது விற்பனை துவங்குவதற்காகவும் அதிகளவிலான வாடிக்கையாளர்களை அடைய வேண்டும் என்பதற்காகவும், மலிவு விலை மாடல் காரான மாடல் 3 காரை அறிமுகம் செய்ய உள்ளதாகக் கருத்து நிலவுகிறது. அமெரிக்காவில் மாடல் 3 காரின் ஆரம்ப விலை 39,000 டாலர்
டெஸ்லா கார் புக்கிங்
இந்நிலையில் இந்தியாவில் 2021ஆம் ஆண்டுத் துவக்கத்தில் புக்கிங்-ஐ ஏற்க முடிவு செய்துள்ள டெஸ்லா, ஜூன் மாதம் கார்களைத் தனது வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்யத் திட்டமிட்டுள்ளது எலான் மஸ்க் தலைமையிலான டெஸ்லா.
இந்தியாவில் டெஸ்லா கார்களுக்கு மிகப்பெரிய வரவேற்பு இருந்தாலும், இதன் விலையின் காரணமாக இந்தியாவில் பெரிய அளவிலான வர்த்தகம் கிடைக்குமான என்ற சந்தேகம் உள்ளது
டெஸ்லா கார் விலை
2016க்குப் பின் மீண்டும் டெஸ்லா கார்களுக்கான புக்கிங் துவங்க உள்ள நிலையில், இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட டெஸ்லா மாடல் 3 காரின் விலை இந்தியாவில் 55 முதல் 60 லட்சம் ரூபாய் வரையில் இருக்கும் என எதிர்பார்க்கிறது.
2016 புக்கிங்-ல் பேடிஎம் நிறுவனத்தின் சிஇஓ விஜய் சேகர் சர்மா உட்படப் பல முன்னணி ஸ்டார்ட்அப் நிறுவன தலைவர்கள் மற்றும் தொழிலதிபர்கள் இந்தக் காரை புக் செய்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக