Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 3 டிசம்பர், 2020

அறிவு திறனை சோதித்த ஆசிரியர்.. பதிலால் திகைத்து போன மாணவர்கள் - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!

-------------------------------------------------

சிரிக்கலாம் வாங்க...!!

-------------------------------------------------

மனைவி : போதை ஏறிடுச்சுன்னா இப்படியா பண்ணுவீங்க?

கணவன் : ஏன்? அப்படி என்ன பண்ணினேன்?

மனைவி : உங்க கையில இருக்குறது பிராந்தி பாட்டில் இல்ல... மண்ணெண்ணெய் பாட்டில்.

கணவன் : 😳😳

-------------------------------------------------

கமலா : செத்து போன மாமியார் பேயா திரியிறாங்கன்னு எதை வைச்சு சொல்ற?

விமலா : மெகா சீரியல் வரும்போது எல்லாம் TV தன்னால ஆன் ஆயிடுதே.

கமலா : 😄😄

-------------------------------------------------

 நேரத்தின் மதிப்பு !!

-------------------------------------------------

காத்திருக்கும்போது மெதுவாக நகரும்,

தாமதிக்கும்போது வேகமாக நகரும்,

சோகத்தில் நகராது...

மகிழ்ச்சியில் போவது தெரியாது,

போர் அடிக்கும்போது போகாது.

நேரம் மனதை பொறுத்தது

நேரத்தை பயனுள்ளதாக்குங்கள்...

-------------------------------------------------

அதெப்படி?

-------------------------------------------------

அது ஓர் உயர்நிலைப் பள்ளி. தனது மாணவர்களுடைய அறிவுத்திறன் எப்படி இருக்கிறது? என்று சோதிக்க விரும்பினார் ஆசிரியர். மாணவர்களைப் பார்த்து ஒரு கேள்வியைக் கேட்டார்.

'ஒரு சிறிய தெருவில் லாரி ஓட்டுபவனும், பஸ் ஓட்டுபவனும் நேர் எதிரே வந்தனர். இருவரும் நமது பயணம் தடைபடாமல் செல்ல என்ன செய்ய வேண்டும்?"

மாணவர்கள் ஆளாளுக்கு ஒரு பதில் கூற ஆரம்பித்தார்கள்.

'பஸ் ஓட்டுபவன் தெரு முடிவு வரை பின்னால் சென்று லாரிக்கு வழிவிட வேண்டும்".

'லாரி ஓட்டுபவன் வந்த திசையில் பின்னோக்கிச் சென்று பஸ்-க்கு வழிவிட வேண்டும்".

ஆசிரியர் சிரித்துவிட்டு, பின்னர் பதில் சொன்னார். 'இருவரும் ஒருவர் மீது ஒருவர் மோதாமல் விலகிச் செல்ல வேண்டும்" என்றார் ஆசிரியர். 'அதெப்படி?" ஒட்டுமொத்தமாக குரல்கள் ஒலித்தன.

'நான் என்ன சொன்னேன்? பஸ் ஓட்டுபவன் பஸ்ஸை ஓட்டிவந்தான் என்றா சொன்னேன். இருவரும் எதிர் எதிரே நடந்து வரலாம் இல்லையா?" மாணவர்கள் திகைத்துப் போய் உட்கார்ந்திருந்தனர்.\

-------------------------------------------------

விடுகதைகள்...!!

-------------------------------------------------

1. வயதான பலருக்கு புதிதாக ஒரு கை. அது என்ன? 

2. எவ்வளவு முயன்றாலும் அவனை கடிக்க முடியாது. அவன் இல்லாமல் உணவே இல்லை. அவன் யார்? 

3. கண்ணால் பார்க்கலாம், கையால் பிடிக்க முடியாது அது என்ன? 

விடைகள் :

1. வழுக்கை ஃ பொக்கை 

2. தண்ணீர் 

3. நிழல்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக