Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 3 டிசம்பர், 2020

சனிப்பெயர்ச்சி 2020-2023 எப்பொழுது? பலம் பெறும் 3 ராசிகள்.. இது உங்கள் ராசியா?

சனிப்பெயர்ச்சி 2020-2023 ஓர் கண்ணோட்டம்..!!

👉நவகிரகங்களில் மிகவும் முக்கியமான பாவக்கிரகமாக கருதப்படுவது சனிகிரகம் ஆகும். சனி கொடுப்பதையும், கெடுப்பதையும் யாராலும் தடுக்க முடியாது.

 

👉கரிய நிறம் கொண்ட சனிபகவான் காசிப கோத்திரத்தில் பிறந்தார். ஜோதிட சாஸ்திரத்தில் ஆயுள்காரகன் என்ற அதிமுக்கியமான பதவியை வகிக்கின்றார். இவர் சூரியபகவானின் இரண்டாவது புதல்வர் ஆவார்.

 

சனிப்பெயர்ச்சி என்றால் என்ன?

 

👉நவகிரகங்களில் அவரவர்களின் கர்மவினைக்கு ஏற்ப சுப மற்றும் அசுப பலன்களை அளிக்கக்கூடிய கிரகமாக கருதப்படக்கூடியவர் சனிதேவர் ஆவார்.

 

👉அவர் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்கு பெயர்ச்சி அடைய எடுத்துக்கொள்ளும் கால அளவு இரண்டரை வருடம் ஆகும்.

 

👉அந்த இரண்டரை வருடம் முழுவதும் சனிதேவர் தான் நின்ற ராசியில் இருந்து தனது சுப மற்றும் அசுப பலன்களை அளிக்கக்கூடியவர் ஆவார்.

 

2020ஆம் ஆண்டில் எப்பொழுது சனிப்பெயர்ச்சி நடைபெறுகின்றது?

 

👉திருக்கணித பஞ்சாங்கத்தின்படி, சனிபகவான் விகாரி வருடம் தை மாதம் 10ஆம் தேதி (24.01.2020) சனிதேவர் திரயோதசி திதியில் சூரியனின் நட்சத்திரமான உத்திராட நட்சத்திரத்தில் அதாவது வெள்ளிக்கிழமையன்று காலை 09.57 மணியளவில் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு பெயர்ச்சி அடைந்தார்.

 

👉வாக்கிய பஞ்சாங்கத்தின்படி, சனிபகவான் நிகழும் மங்களகரமான சார்வரி வருடம் மார்கழி மாதம் 11ஆம் தேதி (26.12.2020) சனிதேவர் துவாதசி திதியில் சூரியனின் நட்சத்திரமான உத்திராட நட்சத்திரத்தில் அதாவது சனிக்கிழமையன்று தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார்.

 

👉சனிதேவர் மகர ராசியான தனது ஆட்சி வீட்டில் நின்று, தான் நின்ற நிலைக்கு ஏற்ப பல சுபச் செயல்களை இனி வருகின்ற இரண்டரை வருடம் அளிக்கவுள்ளார்.

 

2020-2023 சனிப்பெயர்ச்சியில்... எந்தெந்த ராசிகள் பலம் பெறுகின்றன?

 

👉சனிதேவர் தான் நின்ற இடத்தை காட்டிலும் தான் பார்க்கின்ற இடத்திற்கு அதிக அசுப செயல்களை செய்யக்கூடியவர் ஆவார்.

 

👉சனிதேவர் தான் நின்ற இடத்தில் இருந்து 3, 7 மற்றும் 10 ஆகிய ராசிகளை பார்வையிடுகிறார்.

 

👉சனிதேவர் ராசிக்கு 3, 6, 11ல் சஞ்சாரம் செய்யும் காலங்களில் சுப பலன்களை அளிக்கக்கூடியவர் என்று பழைய மூலநூல்களில் கூறப்பட்டுள்ளது. அந்த வகையில்,

 

விருச்சிக ராசிக்கு மூன்றாம் இடத்திலும்

 

சிம்ம ராசிக்கு ஆறாம் இடத்திலும்

 

மீன ராசிக்கு பதினொன்றாம் இடத்திலும் 

 

இருந்து நன்மை செய்யவுள்ளார்.

👉இனி வருகின்ற இரண்டரை வருடம் சுப செயல்கள் தொடர்பான காரியங்கள் அவரவர்களின் ஜென்ம ஜாதகங்களில் நடைபெறும் திசாபுத்திகளுக்கு ஏற்ப கைகூடி நல்ல பலன்களை அளிக்கும்.ஜாதக பலன்கள் யாவும் திசாபுத்தி காலக்கட்டங்களின்படிதான் நடைபெறுகிறது. ஒருவரின் ஜென்ம நட்சத்திரம் தொட்டு ஒருவரின் திசாபுத்திகள் தொடங்கும்.

 

உதாரணமாக, ஒருவரின் ஜென்ம நட்சத்திரம் பூராடம் எனில் அவர்களுக்கு ஆரம்ப திசை சுக்கிர திசை. அதன் பின் சூரிய திசை, சந்திர திசை என வரும். எந்த திசை ஆரம்பமோ, அதற்கு அடுத்ததில் இருந்து அடுத்தடுத்த திசை தொடரும்.

 

உங்களுக்கு தற்போது எந்த திசை நடைபெறுகிறது? 

 


 குறிப்பு: படங்கள் அனைத்தும்  மாதிரிக்காக / உதாரணத்திற்காக கூகிளில் இருந்து எடுத்து வழங்கப்படுபவையே 
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக