Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 3 டிசம்பர், 2020

வெயில் காலத்திற்கும்⛅ பனி காலத்திற்கும்⛄ நூல் அளவு தான் வித்தியாசம் - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!

----------------------------------------------

சிரிக்கலாம் வாங்க...!!

----------------------------------------------

ரகு : டேய் மாப்ள, கல்யாணத்துல மணமகனும், மணமகளும் ஏன் மாலை மாத்துறாங்கன்னு தெரியுமா?

தீபக் : ஏன்டா, ஏதாவது ஸ்பெஷல் காரணம் இருக்கா?

ரகு : இன்னையோடு நீ செத்தேன்னு தெரிவிக்கத்தான் அவர்கள் மாலையை மாத்துறாங்க.

தீபக் : 😆😆

----------------------------------------------

லட்சியத்தை இழக்காதே !!

----------------------------------------------

ஆயிரம் கவலைகள் உன்னை வாட்டினாலும்,

ஆசைகள் உன் லட்சியத்தை பூட்டினாலும்,

அயர்ந்து போகாமல் முன்னேறி வா தோழா....

உலகம் உன்னை தூற்றினாலும்,

உனது கனவுகளை உடைத்தாலும்,

சோர்ந்து போகாமல் முன்னேறி வா தோழா...

ஆயிரம் தோல்விகள் குவிந்து இருக்கும்...

வெற்றி புதையலும் ஒளிந்திருக்கும்..

எனவே, மனம் துவண்டு மடிந்து விடாதே...

மனதில் இருக்கும் லட்சியத்தை இழக்காமல் முன்னேறி வா தோழா...

----------------------------------------------

வர வர மாமியார் கழுதை போல் ஆனாள்...!!

----------------------------------------------

நாம் அறிந்த விளக்கம் :

 

மாமியார் ஒரு போதும் கழுதையாவதில்லை. மருமகளை எப்போதாவது அடி கழுதையே என வர்ணிக்கப்படுவதுண்டு. ஆனால் இது உண்மை விளக்கம் அல்ல.

 

விளக்கம் :

 

பழமொழியில் கழுதை என்பது கயிதை என வரவேண்டும். கயிதை என்பது ஊமத்தங்காயை குறிக்கும். ஊமத்தம்பூ அதன் ஆரம்ப பருவத்தில் மென்மையாய் வளர்ந்து, அழகாய் பூத்து, கடைசியில் காயானது கடின விஷமாய் முள்ளாய் மாறி அவ்வப்போது துன்புறுத்துவது போல் மாமியார்கள் ஆரம்பக்காலத்தில் அன்பாய் இருந்து, பின் வம்பாய் வளர்ந்து, கடைசியில் வேம்பாய் கசப்பது என்பது போல் வந்ததாலேயே இந்த பழமொழி தோன்றியது.

----------------------------------------------

 இது எப்படி இருக்கு?

----------------------------------------------

வெயில் காலத்திற்கும், பனி காலத்திற்கும் நூல் அளவு தான் வித்தியாசம்.

எப்படா குளிக்க போறோம்-னு யோசிச்சா அது வெயில் காலம்..

ஏன்டா குளிக்க போறோம்-னு யோசிச்சா அது பனி காலம்...


 குறிப்பு: படங்கள் அனைத்தும்  மாதிரிக்காக / உதாரணத்திற்காக கூகிளில் இருந்து எடுத்து வழங்கப்படுபவையே 
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக