Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 3 டிசம்பர், 2020

சிம்ம ராசியில் குரு இருந்தால் கிடைக்கும் பலன்கள் !!

🌟 சிம்ம ராசியின் அதிபதி சூரிய பகவான் ஆவார். சூரியனுடன், குருபகவான் நட்பு என்ற நிலையில் இருந்து அருளும் நற்பலன் மற்றும் தீய பலன்களை காண்போம். 

🌟 வேகமும், நிதானமும் கொண்ட கம்பீரமான செயல்பாடுகளை உடையவர்கள்.

🌟 கண்டிப்பும், அதே சமயம் ஈகை குணமும் உடையவர்கள்.

🌟 காலம் தவறாமை என்பது இவர்களின் முக்கிய நோக்கமாகும். தன்னை போலவே மற்றவர்களிடமும் எதிர்பார்க்கக்கூடியவர்கள்.

🌟 அமைதியான குணமும், அதே சமயம் கோபம் வந்தால் கட்டுப்படுத்த முடியாமல் எதிரில் இருப்பவர்களை ஒரு வழி செய்யாமலும் விடமாட்டார்கள்.

🌟 தீமைகளை மனதில் வைத்து பழி வாங்கும் எண்ணம் இல்லாதவர்கள். பெருந்தன்மையானவர்கள். 

🌟 தன்னை குறை சொல்லும் விதத்தில் நடந்துக்கொள்ள மாட்டார்கள். கவலைகள் எதுவாக இருப்பினும் அதை வெளிப்படுத்த மாட்டார்கள். 

🌟 எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருப்பது போல் இருப்பார்கள். ஆனால், மனதில் பலவிதமான வலிகளையும், காயங்களையும் உடையவர்கள்.

🌟 பொருள் ஈட்டும் திறமையும் கொண்டவர்கள். 

🌟 எதிலும், எங்கும், எவ்வேளையிலும் எச்சரிக்கை உணர்வு கொண்டவர்கள்.

🌟 எந்த செயலாக இருப்பினும் அதில் கவனமாகவும், தன்னுடைய நிலையோடும் இருக்கக்கூடியவர்கள். 

🌟 ஒளிவு மறைவற்ற வாழ்க்கையில் எவருக்கும் அஞ்சியோ, பயந்தோ இருக்கமாட்டார்கள். 

🌟 வாக்கு சுத்தமும், தன்னால் முடியும் என்றால் மட்டுமே வாக்குறுதியும் அளிப்பார்கள். 

🌟 பாராட்டிற்கும், புகழ்ச்சிக்கும் மயங்கக்கூடியவர்கள். ஆனால், அளவுக்கு மீறினால் அவர்களிடம் எச்சரிக்கையாக நடந்துக் கொள்ளக்கூடியவர்கள்.

🌟 பிறருடைய உதவியை நாடாமல் தன்னுடைய முயற்சியால் மட்டும் வாழ விரும்பக்கூடியவர்கள்.

🌟 தேவையற்ற செலவுகளை செய்யமாட்டார்கள். அவ்வளவு எளிதில் கடன் வாங்கமாட்டார்கள்.


 குறிப்பு: படங்கள் அனைத்தும்  மாதிரிக்காக / உதாரணத்திற்காக கூகிளில் இருந்து எடுத்து வழங்கப்படுபவையே 
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக