பிரபல மின்சார கார் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை இந்திய தொழிலதிபர் ஒருவர் கிண்டலாக டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். இதுகுறித்த தகவலை இப்பதிவில் காணலாம்.
நகைச்சுவை மற்றும் கிண்டலான பதிவுகளுக்கு பெயர்போனவர் ஆனந்த் மஹிந்திரா. மஹிந்திரா மற்றும் மஹிந்திரா குழுமத்தின் தலைவரான இவர் சமூக வலைதளத்தில் எப்போதும் ஆக்டிவாக தென்படும் தொழிலதிபர்களில் ஒருவர். இவரின் கண் பார்வையில் விநோதமான சம்பவம் சிக்குமானால் அதனை விமர்ச்சிக்க அவர் தவறமாட்டார்.
அந்தவகையிலேயே, தற்போது இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கும் வீடியோ ஒன்றை அவர் பகிர்ந்திருக்கின்றார். அத்துடன், பிரபல மின்சார கார் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லாவையும் அவர் வம்புக்கு இழுத்திருக்கின்றார். அமெரிக்காவை தலைமையமாகக் கொண்டு மின்சார வாகன தயாரிப்பில் மட்டுமே ஈடுபட்டு வருகின்றது.
இந்நிறுவனத்தின் தயாரிப்புகள் பெரும்பாலானவை குறைந்த விலைக்குப் பெயர்போனவை. இதுவே மஹிந்திரா நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா டெஸ்லா வம்புக்கு இழுக்க காரணமாக உள்ளது. அவர், இணையத்தில் வைரலாகி வரும், மாட்டு வண்டியாக மாறிய அம்பாசிடர் கார் பற்றிய வீடியோவைப் பகிர்ந்து, இதுபோன்ற விலைக் குறைந்த வாகனத்தை டெஸ்லாவால் வழங்க முடியுமா என்பது தெரியவில்லை என கூறியிருக்கின்றார்.அவர் வெளியிட்ட பதிவை நீங்கள் கீழே காணலாம். ஆனந்த் மஹிந்திராவை டுவிட்டரில் சுமார் 8 மில்லியனுக்கும் அதிகமானோர் பின் தொடர்கிறார்கள் என்பது குறிப்பிடத்தகுந்தது. இம்மாதிரியான சூழ்நிலையிலேயே ஆனந்த் மஹிந்திரா மாட்டு வண்டியாக மாறிய கார் வீடியோவை பகிர்ந்திருக்கின்றார்.
இந்த வீடியோவை அவர் பகிர்ந்த 22 மணி நேரங்களிலேயே சுமார் 3.5 லட்சம் டுவிட்டர் பயனர்கள் பார்வையிட்டிருக்கின்றனர். இன்னும் பலர் இவ்வீடியோவை பார்வையிடுவர் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும், விரைவில் இப்பதிவிற்கு எதிர்முனையில் (டெஸ்லா) இருந்து பதில் கிடைக்கலாம் என எதிர்பார்கப்படுகின்றது.
டெஸ்லா நிறுவனத்தின் தயாரிப்புகள் மிக விரைவில் இந்தியாவில் கால் தடம் பதிக்க இருக்கின்றன. இதற்கான முயற்சியில் டெஸ்லா ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தகுந்தது. ஆனால், அது எப்போது விற்பனைக்கு வரும் என்ற தகவல் இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக