Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

சனி, 26 டிசம்பர், 2020

நீண்ட நாட்களாக எதிர்பார்த்த Realme X7 Pro அறிமுகத்திற்கு ரெடி.. இந்த போன்ல இது எல்லாமே இருக்கு..

அறிமுகம் எப்போது?

ரியல்மி எக்ஸ் 7 சீரிஸ் ஸ்மார்ட்போன் பட்டியலின் கீழ் ரியல்மி எக்ஸ் 7 மற்றும் ரியல்மி எக்ஸ் 7 ப்ரோ ஆகிய இரண்டு ஸ்மார்ட்போன்கள் இந்த ஆண்டு செப்டம்பரில் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் எப்பொழுது அறிமுகம் செய்யப்படும் என்று காத்திருந்தவர்களுக்கு இந்த செய்தி மகிழ்ச்சி அளிக்கும். இப்போது ரியல்மி நிறுவனம் இந்தியாவில் இந்த ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய ரெடி ஆகிவருகிறது.

ரியல்மி எக்ஸ் 7 ப்ரோ

ரியல்மி எக்ஸ் 7 ப்ரோ ஸ்மார்ட்போனின் ஆதரவு பக்கத்தை ரியல்மி நிறுவனம் இந்தியாவின் இணையதளத்தில் உருவாக்கியுள்ளது. இதன்படி, நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் காத்திருந்த ரியல்மி எக்ஸ் 7 ப்ரோ ஸ்மார்ட்போனின் அறிமுகம் விரைவில் இந்தியாவில் நடைபெறும் என்பதை இது குறிக்கிறது. ரியல்மி இந்தியாவின் ஆதரவு பக்கத்தில் ரியல்மி எக்ஸ் 7 ப்ரோ பட்டியலிடப்பட்டுள்ளதாக டிப்ஸ்டர் முகுல் சர்மா தெரிவித்துள்ளார்.

அறிமுகம் எப்போது?

ரியல்மி எக்ஸ் 7 ப்ரோ ஸ்மார்ட்போன் 2020 ஆம் ஆண்டின் இறுதிக்குள் அல்லது 2021 இன் தொடக்கத்தில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படலாம் என்று இப்போது எதிர்பார்க்கப்படுகிறது. முந்தைய கசிவுகளின் படி , ரியல்மி எக்ஸ் 7 சீரிஸ் இந்த ஆண்டு டிசம்பரில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிவித்திருந்தது. காரணம், மாடல் எண் RMX2121 உடன் கூடிய ரியல்மி எக்ஸ் 7 ப்ரோ 5 ஜி இந்திய தர நிர்ணய பணியகம் (பிஐஎஸ்) சான்றிதழில் காணப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Realme X7 Pro சிறப்பம்சம்

  • 6.55' இன்ச் 2400 x 1080 பிக்சல் கொண்ட முழு எச்டி பிளஸ் அமோலேட் டிஸ்பிளே
  • கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு
  • 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீகிதம்
  • 8 ஜிபி வரை LPDDR4X ரேம் மற்றும் 256 ஜிபி வரை ஸ்டோரேஜ்
  • ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 1000+ சிப்செட்
  • குவாட் கேமரா அமைப்பு
  • 64 மெகாபிக்சல் பிரைமரி கேமரா
  • 8 மெகாபிக்சல் வைட்-ஆங்கிள் லென்ஸ்
  • 2 மெகாபிக்சல் ரெட்ரோ போர்ட்ரெய்ட் லென்ஸ்
  • 2 மெகாபிக்சல் 4cm மேக்ரோ லென்ஸ்
  • 32 மெகாபிக்சல் செல்பி ஷூட்டர் கேமரா
  • இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
  • சூப்பர் லீனியர் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள்
  • டால்பி அட்மோஸ் மற்றும் ஹை-ரெஸ் ஆடியோ
  • 5 ஜி எஸ்ஏ / என்எஸ்ஏ
  • டூயல் 4 ஜி வோல்டிஇ
  • வைஃபை 6 802.11 ax
  • புளூடூத் 5
  • ஜிபிஎஸ் (எல் 1 + எல் 5) / க்ளோனாஸ் / பீடோ
  • என்எப்சி
  • யூ.எஸ்.பி டைப்-சி
  • 65W பாஸ்ட் சார்ஜிங்
  • 4,500mAh பேட்டரி
 குறிப்பு: படங்கள் அனைத்தும்  மாதிரிக்காக / உதாரணத்திற்காக கூகிளில் இருந்து எடுத்து வழங்கப்படுபவையே 
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக