கொரோனா வைரஸ் தொற்று "அபாயகரமானது" அல்ல என்றும், அதன் தடுப்பூசியை அரசாங்கம் வாங்கக்கூடாது என்றும் கூறி மனு தாக்கல் செய்தவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அஜார் அப்பாஸ் லாகூர் உயர்நீதிமன்றத்தில் (LHC) மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், "கொரோனா வைரஸ் இல்லை" என்றும் அதை நிரூபிக்க தயாராக இருப்பதாகவும் கூறினார். மனுவை விசாரித்த லாகூர் உயர் நீதிமன்றம் (Lahore High Court) மனுதாரருக்கு 200,000 பாகிஸ்தான் ரூபாய் அபராதம் விதித்தது.
"கொரோனா வைரஸ் இல்லாதது குறித்து நான் மனு தாக்கல் செய்துள்ளேன். வைரஸ் இல்லை. எனது நிலைப்பாட்டைக் கேட்க வேண்டும். கொரோனா வைரஸ் யாரையும் தொடுவதாலோ அல்லது அருகில் வருவதன் மூலம் பரவாது, கோவிட்-19 (Covid-19) என்பது உண்மையிலை என்பதை நிரூபிக்க நான் தயாராக இருக்கிறேன்" என்று அவர் தெரிவித்தார்.
இதனால் கோவிட் -19 தடுப்பூசிகளை அரசாங்கம் வாங்கக்கூடாது என்றும் அவர் கூறினார். இந்த மனுவை செவ்வாயன்று விசாரித்த லாகூர் உயர் நீதிமன்றம் (Lahore High Court (LHC)), அசாருக்கு அபராதம் விதித்ததுடன், எதிர்காலத்தில் இதுபோன்ற அர்த்தம் இல்லாத மனுக்களை சமர்ப்பிக்கக்கூடாது என்று எச்சரித்தது.
ஏர் கண்டிஷனர் மெக்கானிக்காக (air-conditioner mechanic) அசார், கோவிட் -19 என்பது முஸ்லீம் உலகிற்கு எதிரான ஒரு "சர்வதேச சதி" ("international conspiracy") என்றும் கூறுகிறார். அதன் அறிகுறிகள் பல தசாப்தங்களாக இருக்கின்றன, இது ஒரு அபாயகரமான நோய் (Disease) அல்ல என்றும் கூறினார்.
வழக்கை விசாரித்த லாகூர் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி முஹம்மது காசிம் கான் (Muhammad Qasim Khan), இப்படி அபத்தமாக பேச வேண்டாம் என்றும், கொரோனா வைரஸ் இருபதாக சொல்லும் கருத்து உண்மையானதல்ல என்பதற்கு "மருத்துவ" ஆதாரங்களைக் காட்ட வேண்டாம் என்று மனுதாரருக்கு (petitioner) அறிவுறுத்தினார்.
மனுதாரர் மக்களிடையே பீதியையும் நிச்சயமற்ற தன்மையையும் உருவாக்க முயற்சிப்பதாகவும் தலைமை நீதிபதி குறிப்பிட்டார். அது மட்டுமல்ல, எதிர்காலத்தில் இதேபோன்ற மனுக்களைத் தாக்கல் செய்யக்கூடாது என்றும் நீதிபதி எச்சரித்தார்.
உள்ளூர் முதல் உலகம் வரை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக