டெல்லி மெட்ரோவின் விமான நிலைய எக்ஸ்பிரஸ் பாதைக்கான தேசிய பொது இயக்க அட்டை (என்சிஎம்சி) சேவையை பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை தொடங்கி வைத்தார். என்சிஎம்சி அட்டையின் பயன்பாடு குறித்த விவரங்களை பார்க்கலாம்.
டிஜிட்டல் வளர்ச்சியை மேம்படுத்த நடவடிக்கை
டிஜிட்டல் இந்தியா என்ற கோஷத்தோடு நாட்டில் டிஜிட்டல் வளர்ச்சியை மேம்படுத்த மத்திய பல்வேறு திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. அதன்படி டெல்லியில் ஒரு நாடு ஒரு மொபைலிட்டி கார்டு(NCMC) அட்டையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். என்சிஎம்சி இந்திய ரிசர்வ வங்கியால் அமைக்கப்பட்ட ஒரு கமிட்டியால் திட்டமிடப்பட்டது.
என்சிஎம்சி சேவை அறிமுகம்
கடந்த 18 மாதங்களில் எஸ்பிஐ, யூகோ பேங்க், கனரா பேங்க் உள்ளிட்ட 23 வங்கிகளால் வழங்கப்பட்ட ரூபே டெபிட் கார்ட் மூலம் பயணிகள் மெட்ரோ பயணத்தை மேற்கொள்வதற்கு ஸ்வைப் செய்ய என்சிஎம்சி அனுமதிக்கிறது.
ஒரு நாடு ஒரு மொபிலிட்டி கார்டு
என்சிஎம்சி என்பது பொது பயண அட்டை சேவையாகும். இதை டெல்லியில் பிரதமர் மோடு துவங்கி வைத்தார். இந்த பயண அட்டை மூலம் விமான நிலைய மார்த்தில் இயங்கும் மெட்ரோ ரயில் எக்ஸ்பிரஸ் சேவை பயன்படுத்த முடியும்.
அதோடு இந்த தேசிய பயண அட்டை மூலம் பிற மார்க்க மெட்ரோ ரயில் பயணத்திலும், பேருந்துகளிலும் பயணிக்கலாம் எனவும் சுங்கச்சாவடி, வாகன நிறுத்துமிடங்களிலும் பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்படுகிறது. இந்த சேவை 2022 முதல் நடைமுறைக்கு வரும் என டெல்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன்
NCMC வசதி 2022 ஆம் ஆண்டில் முழு டெல்லி மெட்ரோ நெட்வொர்க்கிலும் கிடைக்கும் என டெல்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷனின் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார். என்சிஎம்சி தானியங்கி கட்டண வசூலமுறையாகும். இது பயணிகள் மெட்ரோ, பேருந்து மற்றும் புறநகர் ரயில் சேவைகளுக்கு பணம் செலுத்த அனுமதிக்கும்.
தானியங்கி கட்டண வசூல் அமைப்பில் இயங்கும்
டெல்லி மெட்ரோவின் 400 கிலோமீட்டர் நீளத்தை உள்ளடக்கிய வகையில் என்சிஎம்சி சேவை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. தானியங்கி கட்டண வசூல் (ஏஎஃப்சி) அமைப்பின் மூலம் ஸ்மார்போன் உதவியுடன் மெட்ரோ நிலையங்களில் உள்ளே நுழையவும் வெளியேறவும் அனுமதிக்கிறது. ஏஎஃப்சி அமைப்பானது என்சிஎம்சி பயன்பாட்டை முழுமையாக அனுமதிக்கும் எனவும் இது நாடுமுழுவதும் எந்த நகரத்திலும் பயன்படுத்தலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒன் நேஷன் ஒன் மொபிலிட்டி கார்டை எவ்வாறு பெறுவது
இந்த ரூபே அட்டை என்சிஎம்சியால் வழங்கப்படுகிறது. இந்திய ரிசர்வ் வங்கி அங்கீகரித்த எந்த அங்கீகாரம் பெற்ற நிறுவனங்களிலும் கிரெடிட் மற்றும் ப்ரீபெய்ட் கார்டு தளங்களிலும் இந்த அட்டைகள் கிடைக்கும் என கூறப்படுகிறது. அதாவது தேசிய மொபிலிட்டி கார்டின் ஆதரவுடன் தங்கள் ஒன் நேஷன் ஒன் மொபிலிட்டி கட்டண அட்டையைப் பெற விரும்புவோர் தங்கள் வங்கியைத் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பு: படங்கள் அனைத்தும் மாதிரிக்காக / உதாரணத்திற்காக கூகிளில் இருந்து எடுத்து வழங்கப்படுபவையேஇது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக