Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 2 டிசம்பர், 2020

கணவன் - கான்கிரீட் மாதிரி.. மனைவி - மண்பாண்டம் மாதிரி.. இது சிரிக்க மட்டுமே - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!

----------------------------------------------

கலக்கலான காமெடிகள்...!!

----------------------------------------------

ராமு : எல்லா பொண்ணுங்களையும் கூட பொறந்த சகோதரியா பாக்குறேன்டா.

சோமு : உன் பார்வையை பாத்தால் அப்படித் தெரியலையே...

ராமு : உன் கூட பொறந்த சகோதரியா நினைச்சு பாக்குறேன்டா-மச்சி.

ராமு : 😄😄

----------------------------------------------

வாடிக்கையாளர் : சீக்கிரமா ஒரு பை கொடுங்க, டிரெயினை புடிக்கணும்...!!!

கடைக்காரர் : சாரி சார்....!!! டிரெயினை புடிக்கிற அளவுக்குப் பெரிய பை எங்க கடையில இல்லையே...!!!

வாடிக்கையாளர் : 😏😏

----------------------------------------------

ஆசிரியர் : ஈயத்தை பார்த்து சிரிக்குதாம் பித்தளை... இதுல இருந்து உனக்கு என்ன தெரியுது?

மாணவன் : பித்தளை சிரிக்கும் படியா ஈயம் ஏதோ ஜோக் அடிச்சிருக்கு-னு தெரியுது சார்...

ஆசிரியர் : 😜😜

----------------------------------------------

எவ்ளோ பெரிய தத்துவம்!!

----------------------------------------------

 

புருஷன் என்பது கான்கிரீட் சிமெண்ட் மாதிரி... கட்டுன உடனேயே அடிக்கவோ, குத்தவோ, மிதிக்கவோ கூடாது. நல்ல 'செட்டாக" விட்டுட்டு அப்புறமா என்ன வேணுமானாலும் பண்ணலாம்... ஒன்னும் ஆகாது..!

 

பொண்டாட்டிங்க மண்பாண்டம் மாதிரி... ஆரம்பத்துலையே நமக்கு வேணுங்கற மாதிரி மாத்திடணும், இல்லாட்டி செட் ஆயிடிச்சுன்னா அப்புறம் ஒன்னும் பண்ண முடியாது..!

 

உங்கள் நிறுவனத்திற்கு திறமையான பணியாட்களை நிரப்ப விரும்புகிறீர்களா? எங்கள் நித்ரா வேலைவாய்ப்பு செயலி மூலம் உங்களுக்கு தேவையான பணியாட்களை எளிதில் நிரப்பிக்கொள்ள முடியும்.

----------------------------------------------

உழவனின் நிலை...!!

----------------------------------------------

 

விதைத்தவன் அறுத்தான்

விதையாதவன் தின்று தீர்த்தான்.

மண்ணில் வேள்வி செய்து

விண்ணில் கேள்வி எய்து

திசையறியா காற்றைப் போல்

விலைமதியா பயிரை ஈன்றான்.

ஈன்றும் என்ன பயன்?

இரக்க மனமில்லா கோ(ழை)!

அல்லையால் அரவணைத்த கோ!!

இரண்டிற்கும் உணவளித்து

விடைபெற்றான் விடையறியா விவசாயி - வெறும் வயிற்றோடு.

----------------------------------------------

பொன்மொழிகள்!!

----------------------------------------------

 

🌟 உடலையும், அறிவையும், ஞானத்தையும் பலவீனமாக்கும் எதையும் நஞ்சென ஒதுக்கி விடுங்கள்!

 

🌟 கோழைகளே பாவம் புரிபவர். தைரியமுடையோர் ஒருபோதும் பாவம் செய்யார்..!

 

🌟 உண்மை எங்கே இழுத்துச் சென்றாலும் அதைப் பின்பற்றிச் செல்லுங்கள்!

இவ்வுலகில் தோன்றிய நீங்கள் அதற்கு அடையாளமாக ஏதேனும் விட்டுச்செல்லுங்கள்!

இல்லையேல் உங்களுக்கும், மரங்கள், கற்களுக்கும் வேறுபாடு இல்லாமல் போய்விடும்...!


 குறிப்பு: படங்கள் அனைத்தும்  மாதிரிக்காக / உதாரணத்திற்காக கூகிளில் இருந்து எடுத்து வழங்கப்படுபவையே 
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக