Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 2 டிசம்பர், 2020

டென்ஷன்.. டென்ஷன் என புலம்புபவரா? கொஞ்சம் சிரிங்க பாஸ் - ரிலாக்ஸ் ப்ளீஸ்..!!

--------------------------------------------------

சிரிப்பு வருது...!!

--------------------------------------------------

கணவன் : ஊரெங்கும் ஒரே காய்ச்சலா இருக்கு! குடிக்க வெந்நீர் கொடு!

மனைவி : ஏங்க இப்படி பயப்படுறீங்க? மூளைக் காய்ச்சல்தான் பரவுது! அது எப்படி உங்களுக்கு வரும்?

கணவன் : 😐😐

--------------------------------------------------

கணவன் : நம்ம வீட்டுக்கு சாப்பிட எங்க மேனேஜரை கூப்பிட்டிருக்கிறேன்.

மனைவி : என்ன திடீர்னு?

கணவன் : அவர் மனைவியோட சாப்பாட்டை கொஞ்ச நாளா குறை சொல்லிக்கிட்டிருந்தாரு அதான்.

மனைவி : 😒😒

--------------------------------------------------

கணவன் : குழந்தை ஏன் அழறான்? டாக்டர் ஊசி போட்டாரா?

மனைவி : இல்ல அவர்தான் சரியான குழந்தை டாக்டர் ஆச்சே. இவன் தின்னுக்கிட்டு இருந்த பிஸ்கட்டை அவர் பிடுங்கித் தின்னுட்டாரு.

கணவன் : 😄😄

--------------------------------------------------

--------------------------------------------------

இதை கொஞ்சம் ட்ரை பண்ணுங்க பாஸ்...!!

--------------------------------------------------

சொல்ல சொல்ல சொல்லிக் கொள்ள எதுவும் இல்ல. சொல்லச் சொல்ல சொந்தங்களும் எதுவும் இல்ல.

வியாழக்கிழமை வாழப்பாடிக்கு வாழச் சென்றவன் வாழைப் பழத் தோல் வழுக்கி விழுந்தான்.

சுத்தத்தை மறந்து சொந்தத்தைத் துறந்து பந்தத்திடம் இரந்து பணத்தைக் கரந்து பாதி வாழ்கையில் பரதேசியானான்.

ஒரு கை கொடுக்க மறு கை எடுக்க பிற கை மடக்க பலர் கை அடக்க வடக்கே போனான் கடுக்கன்.

--------------------------------------------------

பலகார விடுகதைகள்...!!

--------------------------------------------------

1. திருப்பதியில் உருண்டு புரண்டவன், திரும்பி வந்தான் பிரசாதமாய். அவன் யார்?

2. ரசத்தில் குளித்து எழுந்து வந்தான், குல்லா போட்டு குதித்து வந்தான். அவன் யார்?

3. குடிசைக்குக் கூரையானது. குண்டு காதருக்கு அடைமொழியானது. அது என்ன?

4. பால் மணக்கும் பச்சைக் குழந்தை, ஆங்கிலத்தில் 'கோ" என்பான், தமிழில் வா என்பான். அது என்ன?

விடைகள் :

1. லட்டு

2. ரசகுல்லா

3. ஓலை பக்கோடா

4. பால் கோவா, 

--------------------------------------------------

குறளும், பொருளும்...!!

--------------------------------------------------

பரிந்தோம்பிப் பற்றற்றேம் என்பர் விருந்தோம்பி

வேள்வி தலைப்படா தார்.

பொருள் :

விருந்தினரைப் பேணி, அந்த யாகத்தின் பயனைப் பெறும் பேறு அற்றவர், செல்வத்தைச் சிரமப்பட்டுக் காத்தும் அதனை இழக்கும் போது, இப்போது எந்தத் துணையும் இல்லாதவராய்ப் போனோமே என்று வருந்துவர். 

 குறிப்பு: படங்கள் அனைத்தும்  மாதிரிக்காக / உதாரணத்திற்காக கூகிளில் இருந்து எடுத்து வழங்கப்படுபவையே 
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக