Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

புதன், 2 டிசம்பர், 2020

இனி தங்க நகைகளை ஈஎம்ஐ-யில் வாங்கலாம்..! #Bluestone

 இனி தங்க நகைகளை ஈஎம்ஐ-யில் வாங்கலாம்..! #Bluestone | Monthly gold saving  and EMI offers by leading online jeweler Bluestone - Tamil Goodreturns

தங்கத்தை யாருக்குத் தான் பிடிக்காது, குறிப்பாக இந்தியர்களுக்கு. நீண்ட காலமாகத் தங்கமும், தங்க நகைகளும் தினசரி பயன்பாட்டில் இருக்கும் காரணத்தால் தங்கம் இந்தியர்களின் வாழ்க்கையின் ஒரு அங்கமாகவே மாறிவிட்டது.

இப்படிப் பெருமளவிலான மக்கள் தங்கத்தை அதிகளவில் வாங்கும் நிலையில் தங்கத்தின் விலை அதிகமாக இருக்கும் காரணத்தால் தங்க நகைகள் விற்பனை குறைந்து வருகிறது.

இந்தப் பிரச்சனையைத் தீர்க்க முன்னணி தங்க நகை விற்பனையாளர் ஈஎம்ஐ-யில் தங்க நகைகளை விற்பனை செய்யும் புதிய சலுகையை அறிவித்துள்ளது.

தங்கம் விலை

கொரோனா பாதிப்பின் எதிரொலியாக 2020ஆம் ஆண்டுச் சர்வதேசச் சந்தையில் தங்கம் மீதான முதலீடுகள் அதிகரித்த காரணத்தால் தங்கம் விலை தாறுமாறாக உயர்ந்தது. இதேபோல் கொரோனா பாதிப்பால் பல கோடி மக்கள் வேலைவாய்ப்புகளை இழந்த காரணத்தால் நாட்டு மக்கள் திருமணம், சுப நிகழ்ச்சிகளுக்குக் கூடத் தங்கம் வாங்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

தீபாவளி

6 மாதத்திற்குப் பின் தீபாவளி பண்டிகையின் போது இந்தியாவில் மக்கள் அதிகளவில் தங்கம் மற்றும் தங்க நகைகளை வாங்கினர். இதனால் நாட்டின் தங்க நகைகள் வர்த்தகச் சந்தை நீண்ட நாட்களுக்குப் பின் வளர்ச்சிப் பாதைக்குச் சென்றது.


ப்ளூஸ்டோன்

குறைந்த காலத் திட்டமாக ப்ளூஸ்டோன் ஜூவல்லர் ஈஎம்ஐ திட்டத்தின் கீழ் தங்க நகை வாங்குவோருக்கு முதல் மாத தவணையில் 50 சதவீத தள்ளுபடியை கொடுக்கிறது. இந்தத் திட்டத்தின் கீழ் மக்கள் தங்க நகை, வைர நகை அல்லது ரத்தினங்கள் பதித்த தங்க நகைகளை வாங்கலாம்.

இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் ஆன்லைன் ஜூவல்லர் நிறுவனம் தான் இந்த ப்ளூஸ்டோன்.

ஈஎம்ஐ

இந்தியாவில் முன்னணி தங்க நகைக் கடைகளில் இருப்பது போலவே ப்ளூஸ்டோன் தங்கச் சேமிப்பு திட்டத்தின் கீழ் மக்களுக்கு ஈஎம்ஐ மூலம் தங்க நகைகளை வாங்கும் சேவையை அளிக்கிறது.

ஈஎம்ஐ சேவையைப் பெற முதலில் வாடிக்கையாளர்கள் தங்க வைப்பு நிதியில் பணத்தை டெபாசிட் செய்ய வேண்டும். டெபாசிட் தொகை குறிப்பிட்ட தொகையை அடைந்த பின்பு இந்த ஈஎம்ஐ சேவையை ப்ளூஸ்டோன் கொடுக்கிறது.

ஈஎம்ஐ மாதங்கள்

ப்ளூஸ்டோன் ஜூவல்லரி ஈஎம்ஐ திட்டத்தின் மூலம் வாடிக்கையாளர் 12, 11 அல்லது 10 மாதம் ஈஎம்ஐ சலுகை கொடுக்கப்படும், ஆனால் வாடிக்கையாளர் 10 அல்லது 11 மாதம் ஈஎம்ஐ மட்டுமே செலுத்தினால் போதும். கடைசி மாதம் ஈஎம்ஐ-யை நகை கடையே ஏற்றுக்கொள்ளும்.

தங்க சேமிப்புத் திட்டம்

இந்தியாவில் பல முன்னணி பிராண்டு நகை கடைகளான தனிஷ்க், ஜோய் அலுக்காஸ் மற்றும் மலபார் கோல்டு ஆகிய பலரும் இதுப்போன்ற தங்க சேமிப்புத் திட்டத்தைக் கொடுத்து வருகிறது. ஆனால் ஒவ்வொரு கடையின் திட்டங்களும் பல வித்தியாசங்கள் உண்டு. 


 குறிப்பு: படங்கள் அனைத்தும்  மாதிரிக்காக / உதாரணத்திற்காக கூகிளில் இருந்து எடுத்து வழங்கப்படுபவையே 
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!